Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 24 - மயானம்

தாழ் திறவாய்!
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்!

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

தாழ் திறவாய்! - கதவு 24 - மயானம்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

Published:Updated:
தாழ் திறவாய்!
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்!

தொரக்கண்ணு மவன்

முனியம்மா பேரன்

சாமிதொர காலமாயிட்டாரு

அஞ்சு மணிக்கு அடக்கம்

ஓட்டேரி சுடுகாடு

ஒவ்வொருநாளும் கேட்கும் ஓசை

தண்டவாளத்தின் ஓரம் குடியிருப்போருக்கு

ரயில் சத்தமாய்

மயான வீதியில்

பறை பழகிவிட்டது

சாலையெங்கும் செத்துப்போன

சாமந்திப்பூக்கள்

ஊருக்குள் கண்ணீர்ப்புகையாய்

ஊதுபத்தி மூட்டம்

ஒவ்வொரு பாடையிலும்

பட்டினத்தாரே பயணப்படுவார்



ஆடு மாடு குடல்களை உள்ளே வைத்து

துணியால் வேயப்பட்ட

கொடூர அரக்கன் பொம்மை

அவன் குடலை உருவி

காளி ஆத்தா மாலை போட்டுக்கொள்வதாக

‘மசானக்கொள்ளை' நடக்கும்

கஞ்சா, டோலக், கானா நடுவே

செத்துப்போனவரின் கல்லறையில்

கறிசோறு படைத்து

குடும்பம் குடும்பமாய்க் கொண்டாடுவர்

கற்பூர நெருப்பு

அமாவாசையை வெளிச்சமாக்கும்

நகர சுடுகாடு

சிறுதெய்வங்களின் சின்னங்கள்

தாழ் திறவாய்! - கதவு 24 - மயானம்

தாத்தன் கைவண்டி இழுத்துச் செத்தான்

அப்பன் ஆட்டோ ஓட்டிச் செத்தான்

புள்ள மருத்துவப்படிப்புக்காகத்

தற்கொலை செஞ்சுக்கிச்சு

ஆயிரமாயிரம் குழி பறித்து

புதைக்கப்பட்டவர் மேல்

அவனைப் புதைத்தார்கள்

அவன்மீது யாரையும் புதைக்காதீர்

இப்போதுதான் மேலே வந்திருக்கிறான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism