Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 27 - டாஸ்மாக்

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

தாழ் திறவாய்! - கதவு 27 - டாஸ்மாக்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

Published:Updated:
தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்

காலங்காத்தாலயே

இந்த மனுசனுக்கு

எவன் வாங்கித்தந்தான்னு தெரியல


குடியே கதின்னு

இருக்கான்


புள்ளைங்க

சாப்டாச்சா படிக்குதான்னு

துளிகூட கவல இல்ல

சில்வர் பித்தள சாமானையெல்லாம்

வச்சி தின்னாச்சி


காது மூக்கு ஓட்டையும்

தூர்ந்துபோச்சு

இருந்த ஒரே மில்லுவேலையும்

மட்டம்போட்டு மட்டம்போட்டு

நிறுத்திட்டானுங்க

தாழ் திறவாய்! - கதவு 27 - டாஸ்மாக்

மூட்டதூக்கப் போயான்னா

இடுப்பு செத்தவனுக்கு

எவன் வேல தருவான்


வரட்டி தட்டி வச்சது போல

நெஞ்சு எலும்பெல்லாம்

தெரியுது


இந்த வயசுலேயும்

போட்டி கவாப் வித்து

குடும்பத்த காப்பாத்துறாரு

கரீம்பாயி தாத்தா


கட்டுனவன் ஒழுங்கா இருந்தா

நான் ஏன் வயசுப் பொண்ண

இட்லி விக்க

தெருத்தெருவா அனுப்புறேன்

அன்றாடம் திட்டித்தீர்க்கும்

அம்மா


மோட்டுவாயப் பார்த்து

அமைதியாய் இருந்தாள்


ஊதுவத்தி வாசத்தில்

காணாமல்போனது

சாராய நெடி!