Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 29 - ஏ.டி.எம்

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

தாழ் திறவாய்! - கதவு 29 - ஏ.டி.எம்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

Published:Updated:
தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்

கண்ணாடிக் கதவாகவே

முன்னும் பின்னும்

நடந்துகொண்டிருப்பார்

முருகேசப் பெரியவர்



சித்தாள் பெண்ணுக்கு

ஆயிரம் ரூபா எடுக்க

உதவுவது



பணம் கிடைக்காது

திரும்புபவரைப் பார்த்து

மனதால் உச்சுக்கொட்டுவது



மறந்துபோன ஏ.டி.எம் அட்டையைப்

பத்திரப்படுத்தித் தருவது

தாழ் திறவாய்! - கதவு 29 - ஏ.டி.எம்

காதலர்களின் முகத்தில்

பேரன் பேத்தியைக்

காண்பது



துண்டுக்காகிதங்களை

கூட்டிப் பெருக்குவது



படிக்கட்டிலேயே

படுத்துக்கொள்வது



இரண்டுமுறை

கொள்ளையரிடமிருந்து

தப்பித்தது



அதிகாலை ஓசி பேப்பர்

படிப்பது



அவரின் பின்கதையை

இரண்டு தேநீர்க் கோப்பைக்குள்

நிரப்பி

ஊதி ஊதிப் பேசிக்கொண்டிருந்தேன்



எல்லோருக்கும்

சம்பளம் போடுகிற

இயந்திரத்தோடு இருந்தும்

தன் வருமானத்தை எதிர்நோக்கி

சலசலத்துக்கொண்டிருந்தார்



மீன்தொட்டிக்குள்

தத்தளிக்கும்

பூனையைப்போல!