Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 6 - டீக்கடை

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்

தேநீர் குடிப்பதற்குப் பதிலாய் ஒரு நாளிதழ் வாங்கியிருக்கலாம்!

தாழ் திறவாய்! - கதவு 6 - டீக்கடை

தேநீர் குடிப்பதற்குப் பதிலாய் ஒரு நாளிதழ் வாங்கியிருக்கலாம்!

Published:Updated:
தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்

அதிகாலை ஆறு மணிக்குள்
டீக்கடையைத் திறந்துவிடுவான்
முருகன்
தெருமூலையில் நாயின் கொட்டாவி
விபூதி மணக்க முதல் பேருந்துக்கு
காத்திருக்கும் பயணி
தலையில் மப்ளர் கட்டியவாறு
பெருக்கி கோலம் போடும் பெண்கள்
மொட்டை மாடியில்
புத்தகத்தோடு நடமாடும்
சீருடைச்செல்வி
செடிகளுக்கு சென்சார் செய்யும் தோட்டக்காரன்
மாட்டுச் சாணத்தின் வெப்பத்தை
கால்கள் உணரும்

தாழ் திறவாய்! - கதவு 6 - டீக்கடை

மெட்ரோ ரயில் வெளிச்சத்தோடு
அனாதையாய்ச் செல்லும்
சோம்பல் முறிக்கும் காக்கைச் சிறகினிலே
பச்சை இலைமீது பனித்துளிக் கொங்கைகள்
மீன்பாடி வண்டியில்
பூந்தொட்டிகளின் பயணம்
செல்போன் கூச்சல் இல்லா
சில்லுன்னு ஒரு பொழுது
புழுதிபடாத பூக்கள்
இரவெல்லாம் விழித்து
இமை மூடும் வீதிவிளக்குகள்
நித்திரைக்குப் போகும் நிலவு
சைக்கிள் மணி ஒலிக்க
நாளிதழை வீசிச் சென்றான் சிறுவன்
பனிரெண்டாவது பக்கத்திற்காக
காத்திருப்பில் தோன்றியது.
தேநீர் குடிப்பதற்குப் பதிலாய்
ஒரு நாளிதழ் வாங்கியிருக்கலாம்!