Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 8 - கல்யாண வீடு

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

தாழ் திறவாய்! - கதவு 8 - கல்யாண வீடு

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

Published:Updated:
தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்

வீட்ட சாத்தாம வந்துட்டேன்
தலைக்கு மேல எவ்ளோ வேல இருக்கு
பந்தல் போடணும்
வாழமரம் கட்டணும்
தாலி செஞ்சாச்சான்னு கேக்கணும்
சின்னவளுக்கு
பாவாட சட்டை எடுக்கணும்
சாப்பாட்டுக்கும் வரிசைக்கும் தாய்மாமன் இருக்கான்
நலங்கு வைக்கணும்
கூரப்பொடவ எடுக்கணும்
எனக்கும் நல்ல துணிமணி இல்ல
பந்திக்கு பக்கத்து வீட்ட
சொல்லி வைக்கணும்
காதுல தொடப்பக் குச்சிய
சொருகிக்கிட்டு இருந்தா
நல்லாவா இருக்கும்?

தாழ் திறவாய்! - கதவு 8 - கல்யாண வீடு

யார்கிட்டயாவது
கம்மலை எரவல் வாங்கணும்
ஒரு வாரமா தங்கச்சி பொண்ணு
கொலுசு கேட்டு அடம்பிடிக்கிறா
ரேடியோ செட்டுக்காரனுக்கு
பணம் கொடுக்கணும்
எல்லா சாதிசனத்திற்கும்
நோட்டீசு வச்சாச்சு
இந்த மனுசன வேற காணோம்
ஏண்டீ வசந்தி
ரெண்டாயிரம் ரூவா இருந்தா கொடு
மொய் வந்தா தந்துடுறேன்.