Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 9 - அடகுக்கடை

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

பிரீமியம் ஸ்டோரி

மழை பாடம் நடத்தும்போது
மாணவர்க்கு விடுமுறை
புழலேரி திறக்க
புகுந்த வீட்டில் வெள்ளம்
கடலின் நடுவே பிரமிடுகளாய்
சுவர் இடிந்த குடிசைகள்
கூரையின் முனையில்
கோழியும் நாயும்
தண்ணீர்க்குடம் உடையும் தறுவாயில்
கர்ப்பிணியின் வலி
தண்ணீருக்குத் தெரியாது
உணவுப் பொட்டலங்களுக்காக
மூழ்கிச் செல்லும் மக்கள்
சாயம்போன தாய்ப்பாலை
சப்பிக்குடித்தது குழந்தை
பணக்காரர்களும் பட்டினியில்
இரண்டு நாள்களுக்கு முன்
வேலைக்குப் போனவர்
கழுத்தளவு தண்ணீரில்
மூழ்கிய சைக்கிள் தெரியாதவாறு
தள்ளிக்கொண்டு வந்தார்

தாழ் திறவாய்! - கதவு 9 - அடகுக்கடை
Lenovo

மாநகராட்சிப்பள்ளி இரண்டாவது மாடியில்
நான் படிக்கும் அதே வகுப்பறையில்
அம்மா அப்பாவுடன் நானும்
நிலவு சூரியனைத் தவிர
யாரும் துணையில்லை
ஈரமாகவே இருந்தது வாழ்க்கை
பழக்கதோஷத்தில்
என் வீட்டிலிருந்து மிதந்து மிதந்து
மார்வாடிக் கதவைத் தட்டியது
பித்தளைக்குடம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு