பிரீமியம் ஸ்டோரி

மீகண்

சுடர்

நெருப்பின் சாத்வ குணம்

மழை

வெள்ளத்தின் பணிவு

காமம்

அகந்தையின் தாய்மைக் கணம்

நான்

நனவிலியின் இசையொழுங்கு

பிரபஞ்சம்

பிரக்ஞை வெடித்து விரியும்

மாமலர்

பிரக்ஞை

பேரண்டம் திறக்கும் மீகண்.

நிகழ்காலம்

தற்செயலாக

நிகழ்காலத்தைப் பார்த்தேன்

தற்செயலாகத்தான் பார்க்கமுடிகிறது

அதுசரி

பெட்டி கட்டிக்கொண்டு

பயணம் போய்ப்பார்ப்பதற்கு

அது என்ன எதிர்காலமா

அல்லது

ஊதுவத்தி வெளிச்சத்தில்

விட்டத்தை வெறித்தவாறு பார்ப்பதற்கு

அது என்ன இறந்தகாலமா?

கார்த்திக் நேத்தா கவிதை

சிணுங்கல்

உறக்கத்தில் சிணுங்கும் பிள்ளையை

உறங்கியவாறே ஆட்டிவிடும் அன்னையின் எந்தக் காதில் கேட்டதோ

நுண்ணிய அச்சிணுங்கல்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு