Published:Updated:

கவிதைகள்

கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது.

கவிதைகள்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது.

Published:Updated:
கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

காத்திருக்கும் கேள்வி

தன் பெண் குழந்தை

பெரிய மனுஷி

ஆகிவிட்டாள் என

ஊருக்கே தண்டோரா

போட்ட பெற்றோர்

இன்றுவரை

சொல்லவில்லை

`வயசுக்கு வர்றதுன்னா

என்னம்மா...’ என்று

தம்பி கேட்ட

கேள்விக்கான பதிலை!

- ப்ரியதர்ஷினி, தர்மபுரி

****

சந்தேகம்

ஒத்த ரூபாய் கடலைமிட்டாயில் இருந்து

கல்கத்தா ரசகுல்லா வரை

விரும்பிச் சாப்பிடும் புளியோதரையில் இருந்து

கோழி பிரியாணி வரை

ரசித்து புகைக்கும் சிகரெட்டில் இருந்து

ரகசியமாய் குடிக்கும் பிராண்டு வரை

எப்போதும் அணியும் அகலக்கரை பட்டு வேஷ்டி...

நேரியல் அனைத்தும்

தாத்தாவின் புகைப்படத்தின் முன்னால்

இருந்ததைப் பார்த்துவிட்டு

பேத்தி கேட்டாள்

அவள் அண்ணனிடம்...

`ஏன்டா இதெல்லாம் தாத்தாவுக்கு

முதியோர் இல்லத்தில் கிடைச்சிருக்குமா!’

- செண்பக தேவி, சிவகாசி

கவிதைகள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா,

சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com