ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டனர்.

‘’ஆன்மிகத்தின் உச்சத்துக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’’

‘’ஆசைகளை எவன் ஒருவன் விட்டானோ... அவன், ஆண்டவனைத் தொட்டவன் ஆவான். ஆண்டவனைத் தொடுவதே ஆன்மிகத்தின் உச்சம்!’’

‘’ஆசை இல்லாமல் ஒருவன் இருக்க முடியுமா?’’

‘’ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் அப்படி ஒருவன் இருக்கிறான். ஆன்மிகம் என்பது அவனை அடையாளம் கண்டுகொள்கிற முயற்சிதான்!’’

‘’அப்படியா...?’’

‘’இப்போது நீ ஒருவனா... ரெண்டு பேரா...?’’

‘’நான் ஒருவன்தான்...!’’

‘’இப்படித்தான் எல்லோரும் நினைச்சிக்கிட்டி ருக்கோம். ஆனா நாம உண்மையில் மூணு பேர்! நம்மைப் பற்றி நாம என்ன நினைக்கிறோமோ அது ஒருவன்! நம்மைப் பற்றி அடுத்தவர் என்ன நினைக்கிறாரோ அது இரண்டாமவன்! நம்மைப் பற்றி நமக்கும் தெரியாமல், அடுத்தவருக்கும் தெரியாமல் ஒருவன் இருக்கிறான்! அவன் நமக்குள்ளே இருக்கிறான்! அவனே மூன்றாவது மனிதன். இவனை அடையாளம் காணும்போது தான் ஆன்மிகப் பயணம் முழுமை பெறுகிறது!’’

‘’அந்த மூன்றாவது மனிதனைக் கண்டுபிடிப்பது முடிகிற காரியமா?’’

‘’அகங்காரத்துக்கு விடைகொடுத்து அனுப்பி விட முடிந்தால் இது சுலபமாக சாத்தியம். ஆனால் இன்றைய மனிதனை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.’’

‘’என்ன சொல்கிறீர்கள்?’’

‘’அவனுக்கு முதல் மனிதனையே அடையாளம் தெரிவதில்லை...! அதாவது, அவன் யார் என்றே அவனுக்குத் தெரியவில்லை.’’

‘’புரியவில்லையே...?’’

‘’ஒரு கதை சொல்கிறேன்! அந்த மதுக்கடையில் நிறைய பேர் மயக்கத்தில் இருந்தார்கள். நள்ளிரவு நேரம். ஒருவன் வேகமாக உள்ளே ஓடி வந்து கத்தினான் ‘ஏய்... வெங்கட்ராமா...! உன்னோட வீடு தீப்பிடிச்சிக்கிட்டு எரியுது’ என்றான். ஒருவன் திடீரென பதறிப் போய் எழுந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வெளியே ஓடினான். நீளமான சாலை ஒன்றில் அரை மணி நேரம் ஓடி இருப்பான். சட்டென்று ‘பிரேக்’ போட்டது மாதிரி ஓர் இடத்தில் நின்றான். பின்னர் திரும்பினான். மெதுவாக நடந்தான். பழையபடி மதுக்கடைக்கே வந்து சேர்ந்தான். அங்கே இருந்த ஒருவர் ஆச்சரியத்துடன் கேட்டார்

‘ஏன் திரும்பி வந்துட்டே?’

‘பாதி தூரம் ஓடிய பிறகுதான் ‘நான் யார்?’ அப்படிங்கறது எனக்குப் புரிஞ்சுது!’

‘என்ன புரிஞ்சுது?’

‘நான் வெங்கட்ராமன் இல்லே... சீனிவாசன்!’ என்றான் திரும்பி வந்தவன்’’

19.5.2008 இதழிலிருந்து...