கணவன் மனைவி. கல்யாணமான புதிதில் மகிழ்ச்சியாக இருந்தனர். காலப்போக்கில் கருத்து வேறுபாடு வந்தது. அது வளர்ந்தது; முற்றியது. கடைசியில் நீதிமன்றத்தை நாடினார்கள். விவாகரத்து வேண்டினர். உற்றார் உறவினர்கள் எல்லாம் கவலைப்பட்டார்கள்.

‘‘கடவுளே... இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு’’ என்று வேண்டினார்கள்.

ஒருநாள் பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார். கணவனையும் மனைவியையும் அருகில் அழைத்தார்.

‘இப்போது நமக்குள் ஒரு போட்டி. அதில் நீங்கள் ஜெயித்துவிட்டால், நானே முன்னின்று உங்களுக்கு விவாகரத்து வாங்கித் தருகிறேன். நான் ஜெயித்துவிட்டால், நான் சொல்கிறபடி நீங்கள் கேட்க வேண்டும்!’’

‘‘சரி... என்ன போட்டி? அதைச் சொல்லுங்கள்!’’

‘‘முதலில் ஒரு மெல்லிய நூல் கொண்டு வாருங்கள். போட்டி என்ன என்பதை அப்புறம் சொல்கிறேன்!’’

கொண்டு வந்தார்கள். சுமார் இரண்டு அடி நீளமுள்ள மெல்லிய நூல் அது. பெரியவர் அதை வாங்கிக்கொண்டார்.

‘‘இதோ பாருங்கள்... இப்போது இந்த நூலின் ஒருமுனையை நீங்கள் பிடித்துக்கொள்ளுங்கள். இன்னொரு முனையை நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து இழுத்து, இந்த நூலை அறுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்!’’

‘‘இது ஒரு பெரிய காரியமா?’’ என்று சொல்லிக் கொண்டே இருவரும் அவர்களது பக்கம் இழுக்க ஆரம்பித்தார்கள்.

இந்தப்பக்கம் நின்ற பெரியவரோ அவர்கள் இழுக்க இழுக்க அந்தப் பக்கம் நகர்ந்து போய்க் கொண்டே இருந்தார். அப்புறம் எப்படி நூல் அறுபடும்?

அவர்கள் சுற்றிச்சுற்றி வந்தார்கள். இவரும் கூடவே சுற்றிச்சுற்றி வந்தார். இறுதியாக அந்தக் கணவன் மனைவி தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.

இப்போது பெரியவர் சொன்னார்... ‘‘இவ்வளவுதான் வாழ்க்கை. விட்டுக்கொடுக்கத் தெரிந்தால், உறவு அறுந்துபோகாது!’’

வாழ்க்கையின் மகத்துவத்தைக் கண நேரத்தில் புரிந்துகொண்ட கணவனும் மனைவியும் கண்கள் பனிக்க பெரியவரின் காலில் விழுந்தார்கள். விட்டுக் கொடுக்கத்தெரிந்தவர்களே, ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்!

(30.6.07 இதழிலிருந்து...)