அது ஒரு நெடுஞ்சாலை. ஆனாலும் வாகனப் போக்குவரத்து அதிகமில்லை. இரவு நேரம். இரண்டு கார்கள் எதிரும் புதிருமாக வருகின்றன. எதிர்பாராத விதமாக அவை மோதிக் கொள்கின்றன.

ஒரு காரை ஓட்டி வந்தவர் வக்கீல். இன்னொரு காரை ஓட்டி வந்தவர் டாக்டர். நல்லவேளையாக இந்த இரண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இரண்டு கார்களது முன் பகுதிகளிலும் கொஞ்சம் சேதம் ஆகி இருந்தது. லேசான அதிர்ச்சிக்குப் பின் இவர்கள் இருவரும் காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்கள். வக்கீல் சொன்னார்: ‘‘பதற்றப்படாதீர்கள்... பயப்படுவதற்கு ஒன்றுமில்லை!’’

‘‘என்றாலும் எனக்கு இது எதிர்பாராத ஓர் அதிர்ச்சிதான்!’’ என்றார் டாக்டர் பதற்றத்துடன்.

அந்த வக்கீல் உடனே தனது கார் கதவைத் திறந்து உள்ளே இருந்த ஒரு மது பாட்டிலை எடுத்தார். ஒரு கண்ணாடிக் கோப்பையில் ஊற்றினார். டாக்டரிடம் கொடுத்தார். ‘‘முதலில் இதைக் குடியுங்கள்... அதிர்ச்சி அடைந்திருக்கிறீர்கள்!’’ என்று சொல்லி அன்புடன் உபசரித்தார்.

‘‘மிக்க நன்றி!’’ என்று சொல்லி அதை வாங்கி அருந்தினார் அந்த டாக்டர். அதன் பிறகு எதிரே நிற்கும் வக்கீலை நிமிர்ந்து நோக்கினார். ‘‘நீங்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். சரிதானே?’’

‘‘உண்மைதான்!’’

‘‘அப்படியானால், நீங்களும் கொஞ்சம் மதுவைச் சாப்பிடலாமே!’’ என்று வக்கீலைப் பார்த்துப் பரிவுடன் கேட்டார் டாக்டர்.

‘‘சாப்பிடத்தான் போகிறேன். ஆனால், இப்போது இல்லை!’’

‘‘பின் எப்போது...?’’

வக்கீல் சொன்னார்: ‘‘இன்னும் கொஞ்ச நேரத்தில் விபத்தைப் பற்றி விசாரிக்க போலீஸ் வரும். அவர்கள் வந்து போன பிறகு, நான் சாப்பிடுவேன்!’’

நண்பர்களே... வாழ்க்கையில் நெருக்கடி வருகிறபோது மனிதர்கள் மறைந்து போகிறார்கள். வேடங்கள் வெளியே வருகின்றன.

ஒரு ஞானி சொன்னார்: ‘‘என்னைச் சந்திக்க வருகிறவர்கள் எல்லாரும் நான் டாக்டர், நான் வக்கீல், நான் தொழிலதிபர், நான் அரசியல்வாதி... என்றே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது!’’

‘‘இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?’’

‘‘எவரும் தன்னை ஒரு மனிதன் என்று இதுவரை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே!’’

(25.10.07 இதழிலிருந்து...)