தத்துவப் பேராசிரியர் ஒருவர், அதிகாலையில் வாக்கிங் செல்வது வழக்கம். தினமும் ஒரு மணி நேர நடைப் பயிற்சிக்குப் பின், சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு அன்றாடப் பணிகளில் ஈடுபடுவார்.
அன்றும் வழக்கம் போல்... கையில் ஊன்று கோலுடன் கிளம்பியவர், வாக்கிங் முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். மிகவும் களைப்பாக இருந்தது!
‘வீட்டுக்குச் சென்றதும், ஊன்றுகோலை சுவரில் ஒரு மூலையில் சாய்த்து வைத்து விட்டு, அப்படியே படுக்கையில் விழுந்து சிறிது ஓய்வெடுக்க வேண்டும்!’ என்று திட்டமிட்டார் பேராசிரியர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதோ... வீடு வந்துவிட்டது!
நேராக படுக்கை அறைக்குச் சென்றவர் ஊன்று கோலை படுக்கையில் வைத்தார். பிறகு, அருகிலிருந்த சுவரில் அப்படியே சாய்ந்து நின்று, கண்களை மூடிக் கொண்டார்!
பேராசிரியரின் திட்டம் சரிதான்; ஆனால், அதை செயல்படுத்திய விதத்தில்தான் குழப்பம்! அவர் படுக்க வேண்டிய இடத்தில் ஊன்றுகோல். ஊன்றுகோல் நிற்க வேண்டிய இடத்தில் பேராசிரியர்!
அப்போது, அந்த அறைக்கு வந்த பேராசிரியரின் மனைவி, சுவர் ஓரத்தில் கண் மூடி நிற்கும் கணவரைப் பார்த்ததும் அதிர்ந்தார்.
‘’ஐயையோ... என்ன ஆச்சு உங்களுக்கு?’’ என்று அலறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சத்தம் கேட்டு கண் விழித்த பேராசிரியர், மெதுவாகச் சொன்னார் ‘’ஏன் சத்தம் போடறே? வாக்கிங் போனது கொஞ்சம் களைப்பா இருந்துச்சு. அதான், வாக்கிங் ஸ்டிக்கை சுவத்துல சாத்தி வெச்சுட்டு, நான் ‘பெட்’ல ‘ரெஸ்ட்’ எடுத்துக்கிட்டி ருக்கேன்!’’
அந்தப் பெண்மணி, கணவரின் செயலைக் கண்டு, தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். இது உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்!
‘’வெளியே நடைபெறுகிற இந்த இட மாற்றம் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நம் உள்ளே நடைபெறும் ஓர் இடமாற்றம் வேதனை அளிக்கிறது. இன்றைய மனிதர்களுக்கு இதயமும், வாயும் இடம் மாறி இருப்பதே காரணம்!’’ என்றார் பெரியவர் ஒருவர்.
இதைக் கேட்டவர்களுக்குக் குழப்பம்!
அந்தப் பெரியவரே தொடர்ந்தார் ‘’இதயத்தைத் திறந்து வையுங்கள். வாயை மூடி வையுங்கள் என்கிறது ஆன்மிகம். நாம் என்ன செய்கிறோம்? வாயைத் திறந்து வைக்கிறோம். இதயத்தையோ மூடி வைத்திருக்கிறோம்!’’ என்றார்.