Published:Updated:

“புத்தகங்களைக் காப்பாத்த ஸ்டாலின் மனசு வைக்கணும்!”

ஆழ்வார் தாத்தா - ஜூலி
பிரீமியம் ஸ்டோரி
ஆழ்வார் தாத்தா - ஜூலி

யாருக்கும் தொந்தரவில்லாம இருந்தாலும், நிறைய முறை கார்ப்பரேஷனில் இருந்து கடையை அப்புறப்படுத்தி, புத்தகங்களைக் கொண்டுபோய்விடுவாங்க.

“புத்தகங்களைக் காப்பாத்த ஸ்டாலின் மனசு வைக்கணும்!”

யாருக்கும் தொந்தரவில்லாம இருந்தாலும், நிறைய முறை கார்ப்பரேஷனில் இருந்து கடையை அப்புறப்படுத்தி, புத்தகங்களைக் கொண்டுபோய்விடுவாங்க.

Published:Updated:
ஆழ்வார் தாத்தா - ஜூலி
பிரீமியம் ஸ்டோரி
ஆழ்வார் தாத்தா - ஜூலி

சென்னையின் முக்கியச் சந்திப்புகளில் ஒன்றான மயிலாப்பூர் லஸ் முனை எப்போதும்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் பரபரப்புக்கு மத்தியில், நூல் அடுக்குகளில் புதைந்துள்ள அமைதியைத் தாங்கி நிற்கிறது ‘ஆழ்வார் புத்தகக் கடை.’ தமிழ்நாட்டில் பழைய புத்தகக் கடைகளின் மையமான சென்னையில், பழைய புத்தகக் கடைகளின் அடையாளமாக விளங்கிய, வாசகர் களால் ‘தாத்தா கடை’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஆழ்வார் கடை, அவரது காலத்துக்குப் பிறகு இப்போது எப்படி இருக்கிறது?

“அப்பா அவரோட 13 வயசுல மெட்ராஸுக்கு வந்தாங்க. அங்க, இங்கன்னு சின்னச் சின்ன வேலைகள் பார்த்துட்டு இருந்தப்ப, இந்த மயிலாப்பூர் லஸ் ஏரியாவுல பழைய பேப்பர் வியாபாரம் ஆரம்பிச்சாங்க. அப்போ ‘பராசக்தி’, ‘மனோகரா’ன்னு சின்னச் சின்ன ரோல்ல சினிமாவுலயும் நடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, அவரோட ஆர்வம் எல்லாம் புத்தகங்கள் மேலதான் இருந்திருக்கு. புத்தகக் கடை வைக்கணும்னு ஆசைப்பட்ட அப்பாவுக்கு, அமர்தாஞ்சன் ஓனர் தான் முதன்முதல்ல கடை வச்சுக் கொடுத்தாங்க” என்று கடையின் வரலாற்றை விவரிக்கத் தொடங்கு கிறார், கடையைத் தற்போது நடத்திவரும் ஆழ்வாரின் நான்கு மகள்களில் ஒருவரான ஜூலி.

“புத்தகங்களைக் காப்பாத்த ஸ்டாலின் மனசு வைக்கணும்!”

“லஸ் கார்னர்ல இருந்த கடையை, கொஞ்ச வருஷத்துக்குப் பிறகு காமதேனு தியேட்டர் எதிர்ல இப்போ இருக்கிற இடத்துக்கு அப்பா மாத்தினார். மெட்ராஸ் முழுக்க சைக்கிள்லயே போய் புத்தகங்கள் வாங்கிட்டு வந்திருக்கார். பேரறிஞர் அண்ணா எல்லாம் நம்ம கடைல வந்து புத்தகங்கள் வாங்கியிருக்காங்க; எத்தனையோ ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க நம்ம கடை வாடிக்கையாளர்கள்தான்; நம்ம கடைல புத்தகங்கள் வாங்கிப் படிச்சு பெரிய அதிகாரியானவங்க ரொம்ப பேர். நிறைய வக்கீலுங்க வீட்டுக்கு அப்பாவே போய் புத்தகங்கள் கொடுத்துட்டு வருவார். இப்படிப் பெரிய ஆளுங்க எல்லாம் தெரிஞ்சிருந்தாலும், அப்பாவுக்குப் புத்தகங்கள் தவிர வேற எந்த ஆசையும் இல்லாதனால... இவங்ககிட்ட எல்லாம் அப்பா எதுவும் கேட்டதே இல்ல” என்று கடையின் இயல்பையும், தன் தந்தையின் இயல்பையும் ஜூலி விவரிக்கிறார்.

“யாருக்கும் தொந்தரவில்லாம இருந்தாலும், நிறைய முறை கார்ப்பரேஷனில் இருந்து கடையை அப்புறப்படுத்தி, புத்தகங்களைக் கொண்டுபோய்விடுவாங்க. ஆனா, அப்பா அதையெல்லாம் போராடி மீட்டுடுவார். நாங்க இங்கதான் பிறந்தோம்; செங்கல்கள் இல்லாம புத்தகங்களால கட்டப்பட்ட வீட்ல நாங்க வளர்ந்தோம். வளர்ந்தபிறகுதான் தனியா வீடு பாத்து குடியேறினோம்; இப்ப நாலு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு, குழந்தைங்க வளர்ந்துட்டாங்க. அப்பா, அம்மா இருந்தவரை உறுதுணையா இருந்துச்சு. இப்ப நானும் குழந்தைகளும் தனியா தான் இருக்கோம்” மௌனமாகிறார் ஜூலி.

“அப்பா 13 வயசுல ஆரம்பிச்ச கடை, 95 வயசுல அவர் சாகுற வரைக்கும் இதுதான் அவரோட உயிரா இருந்துச்சு. அப்பா, அம்மா காலத்துக்கு அப்புறம் கடையை மூடிடக் கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தோம். கஷ்டமோ, நஷ்டமோ நாம தொடருவோம்னு நடத்த ஆரம்பிச்சோம். சின்ன வயசுல கடை திருவிழா மாதிரி இருக்கும்; ஜனங்க இருந்துட்டே இருப்பாங்க. ஆனா, இன்னிக்கு ஆன்லைன், டிஜிட்டல்னு வந்துட்டதால புத்தகங்களோட வரவும் கம்மியாகி, வியாபாரமும் ரொம்பக் குறைஞ்சிடுச்சு. பழைய புத்தகம் தானேன்னு விலையை ரொம்பக் குறைச்சுக் கேட்கிறாங்க... ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறதே பெரிய சிரமமா இருக்கு” ஜூலியின் முகத்தில் பரவுகிறது வறண்ட புன்னகை.

ஆழ்வார் தாத்தா
ஆழ்வார் தாத்தா

“இப்ப மெட்ரோ வேற வருதுன்னு சொல்றாங்க. இங்கிருந்து காலி பண்றதுன்னா, எங்க போறதுன்னு தெரியல. மயிலாப்பூர்ல ஒரு கடை பார்க்க முடியல; அட்வான்ஸ் தொகையே லட்சத்துல கேட்கிறாங்க. முதல்வர் ஸ்டாலின் இப்ப புத்தகங்களைப் பரிசாக் கொடுக் கணும்னு சொல்லிருக்காங்க; தலைவர்களைச் சந்திக்கும்போது அவங்களும் புத்தகங்களைத்தான் பரிசாக் கொடுக்கிறாங்க. எங்க வாழ்க்கைக்கு ஆதாரமே புத்தகங்கள் தான். இன்னிக்குச் சூழல்ல எங்க வாழ்க்கை நிலையில்லாம இருக்கு. எங்க கடைக்கு நிரந்தரமான ஒரு இடம் ஏற்படுத்திக் கொடுத்தா போதும், எங்களுக்குத் துணை இல்ல, வேற வழியும் தெரியல... முதல்வர் எங்களுக்கு உதவி எங்க வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்படுத்தித் தரணும்ங்கிற கோரிக்கையை இதன் மூலமா முன்வைக்கிறேன்” ஜூலியின் கண் களில் வேண்டுதல் நிறைந்திருக்கிறது.