Published:Updated:

நாணயம் லைப்ரரி : வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய மூன்று சொத்துகள்! - எப்படிச் சேர்ப்பது..?

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் லைப்ரரி

பணத்துக்காக வேலை செய்வது என்ற நிலையை மாற்றி, பணத்தை வேலை செய்ய வைப்பது என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்!

நாணயம் லைப்ரரி : வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய மூன்று சொத்துகள்! - எப்படிச் சேர்ப்பது..?

பணத்துக்காக வேலை செய்வது என்ற நிலையை மாற்றி, பணத்தை வேலை செய்ய வைப்பது என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்!

Published:Updated:
நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் லைப்ரரி
க்கச்சக்கமான பணம், பல ஏக்கர் நிலம், பெட்டி நிறைய தங்கநகைகள்... இவற்றைத் தான் சொத்து என்று நாம் நினைக்கிறோம். ஆனால், எல்லோருமே சேர்க்க வேண்டிய முக்கியமான மூன்று சொத்துகள் இருக்கின்றன. நேரம், பணம், அர்த்தம் என்பவைதான் அந்த மூன்று சொத்துகள். இவற்றைச் சேர்ப்பது எப்படி என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் ‘என்ரிச்’ என்னும் புத்தகத்தைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

பணம் மட்டும் போதுமா?

‘‘வேலை (கேரியர்) என்பது முக்கியம். ஆனால், அதுதான் வாழ்க்கையின் முடிவா, நான் எதைச் சாதிக்க நினைக்கிறேன், என் வாழ்வின் சொத்தாக (legacy) நான் எதை விட்டுவிட்டு செல்வேன், என்னுடைய வாழ்க்கையில் வாழும் தரத்தை (வேலை- = வாழ்க்கைரீதியாக) எப்படி உயர்த்திக்கொள்வேன், எது வெற்றி, பல வகையான இழப்புகளிலிருந்து பாதிப்படையாமல் இருக்க என்னை நான் எப்படிக் காத்துக்கொள்ள தயாராவேன் என்பது போன்ற கேள்விகளுக்கு நான் விடையைத் தேட முயன்றேன். பணத்தைத் தவிர்த்து வாழ்வில் யோசிக்க வேறு ஏதும் இல்லை என்ற நிலையே ஏழைகளிடமும் பணக்காரர்களிடமும் இருக்கிறது. கார்ப்பரேட் எக்சிக்யூட்டிவ்களிடம் இந்த எண்ணம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ஆனால், ஒரு மனிதனுக்கான சொத்து என்பது அவரிடம் இருக்கும் பணம், அவருடைய கைவசம் இருக்கும் நேரம் (சுதந்திரமாகச் செலவழிக்க) மற்றும் இந்த இரண்டையும் சேர்த்து அவர் வாழ்க்கையில் காண நினைக்கும் அர்த்தம் (பிடித்ததைச் செய்து மகிழ) என்ற மூன்றும்தான்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாட் மில்லர். இந்த மூன்றையும் ஒருங்கே பெறுவது எப்படி என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார் அவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேலையில் சலிப்பு ஏன்?

‘‘திங்கள்கிழமை காலையில் வேலைக்குப் போகும்போது, ‘இன்றைய நாளை சிறப்பாக எதிர்கொள்வது எப்படி’ என்று சிந்திக்கிறீர்களா? அல்லது ‘எப்போது வீடு திரும்புவோம்’ என்று யோசிக்கிறீர்களா? உதாரணத்துக்கு, ‘புதிதாய் ஒரு புராஜெக்ட் வந்திருக்கிறது. சவால் நிறைந்த வேலை. இதில் வேலை செய்வது ஒரு பெரிய அனுபவம்’ என்று சொல்லும் மனப்பாங்கில் இருக்கிறீர்களா அல்லது ‘என்னத்தைச் சொல்ல. சம்பளத்துக்காக இந்த வேலைக்குச் செல்கிறேன். பிள்ளைவேறு படித்துக்கொண்டிருக்கிறது. இதில் வீட்டுக் கடன் வேறு. ரிடையர்மென்ட் குறித்து இன்னமும் நான் சிந்திக்கவே இல்லை’ என்று சொல்லும் ரகமா? இதில் பாசிட்டிவான முதல் பதிலைச் சொல்ல நீங்கள் ரொம்பவுமே அதிர்ஷ்ட சாலியாக இருக்க வேண்டும்.

நாணயம் லைப்ரரி : வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய மூன்று சொத்துகள்! - எப்படிச் சேர்ப்பது..?

பணரீதியான பாதுகாப்பின்மை, நேரமின்மை (வேலை, பொழுதுபோக்கு, ஓய்வு என ஒவ்வொன்றுக்கும் தேவையான அளவுக்கு), பிடித்த வேலையானாலும் சரி, சொந்த விஷயமானாலும் சரி, எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஒரே நிலையில் இருத்தல் என்பதே பணியிடத்தில் பெரும் பாலானோர் நிம்மதியும் நிறைவும் இல்லாதிருக்க காரணமாக இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. ஏன்?

ஒரு காலத்தில் வேலை என்பது பணத்துக்கான பாதுகாப்பைத் தருவதாக இருந்தது. இன்றைக்கு அந்தப் பண்பை அது இழந்துவிட்டது. ஏனென்றால், என்றைக்கு வேண்டுமென்றாலும் நம் சம்பளம் குறைக்கப்படவோ, நாம் வேலையை விட்டுத் துரத்தப்படவோ வாய்ப்புள்ளது என்பது நிரந்தரமாகிவிட்டது. நேரமின்மை என்பது நமக்கென்ற நேரம் (பிடித்த விஷயங்கள் செய்ய), தூக்கத்துக்கான நேரம், குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான நேரம், மற்றொரு வேலையை பகுதி நேரமாகச் செய்வதற்கான நேரம் என்று எதுவும் இல்லை என்ற நிலைமையைக் குறிக்கிறது. இதனாலேயே நம் வாழ்க்கையின் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை என்ற எண்ணம் நமக்கு வந்துவிடுகிறது.

நாணயம் லைப்ரரி : வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய மூன்று சொத்துகள்! - எப்படிச் சேர்ப்பது..?

நன்றாகப் பணம் சம்பாதிக்கிற நம்மால், நேரத்தைச் சம்பாதிக்க முடிவதே இல்லை. முன்னேற்றத்தடை என்று நான் சொல்வது பணியிடத்தில் கிடைக்கும் பதவி உயர்வு மட்டுமல்ல, வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் சொந்த இலக்குகள் (குடும்பத்தினருடன் ஒரு இன்பச் சுற்றுலா, நல்ல லொகேஷனில் உள்ள வாடகை வீட்டுக்கு மாறுதல் போன்ற) பலவற்றிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாதிருத்தலும் முன்னேற்றத்தடையே ஆகும்’’ என்கிறார் ஆசிரியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆறு படிநிலைகள்..!

இவற்றுக்கெல்லாம் தீர்வு தான் என்ன என்ற கேள்விக்கு ஆறு படிநிலைகளைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். “மற்றவர்களுடன் இருக்கும் தொடர்பு, நம்முடைய தனிநபர் சுதந்திரம், நம்முடைய அடையாளம், நம்முடைய உள்நோக்கம், சுற்றியுள்ள விஷயங்களில் நம்முடைய தாக்கம், வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் ஒருங்கிணைப்பு, நம்மை உத்வேகம் அடையச் செய்கிற விஷயங்கள், நம்மை முன்னேறத் தூண்டும் விஷயங்கள் என்ற எட்டு வகை விஷயங்கள் நம்முடைய வாழ்வின் சுவை கூட்டுபவையாக இருக்கின்றன.

நாணயம் லைப்ரரி : வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய மூன்று சொத்துகள்! - எப்படிச் சேர்ப்பது..?

இரண்டாவதாக, அவ்வாறு சுவைகூட்டும் விஷயங்களில் எவையெல்லாம் முக்கியமானவை என்பதைக் கண்டறிவது. வாழ்க்கையை அதன் போக்கில் போகவிடாமல் நாம் அதை நிர்ணயிப்பது. ‘‘எது தவிர்க்க முடியாதது, எதை இப்போதே செய்ய வேண்டும், எதைத் தள்ளிப் போடலாம், எதை முடிந்தால் செய்யலாம் என்ற ரீதியாகப் பிரித்துக்கொண்டு முக்கியமான வற்றைக் கண்டறிவது சுலபம். ஏனென்றால், நாம் நமக்கு முக்கியமானவை எதற்கும் அதற்கே உரிய முன்னுரிமையைத் தராவிட்டால் (தர மறுத்தால்/மறந்தால்) நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுடைய முன்னுரிமைப் பட்டியலில் உள்ள விஷயங்களுக்கு நாம் இரையாக்கப்பட்டுவிடுவோம்.

மூன்றாவதாக, இலக்குகளை அடைய முயல்வது. வெறுமனே இலக்கை நிர்ணயித்து விட்டு இருந்துவிடாமல், அதை நோக்கிய பயணம் சரியாகத்தான் போகிறதா என்பதை சரிபார்த்துக் கொண்டேயிருப்பது. பணத்துக்காக வேலை செய்வது என்ற நிலையை மாற்றி பணத்தை வேலை செய்ய வைப்பது என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்வது.

நாணயம் லைப்ரரி : வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய மூன்று சொத்துகள்! - எப்படிச் சேர்ப்பது..?

நான்காவதாக, உங்களுடைய இலக்குகளை நடைமுறைத் திட்டங்களாகச் செயல்படுத்தும் போது வரும் பயத்தை விரட்டியடிக்கப் பழகுவது. ஐந்தாவதாக, வாழ்க்கையின் சுவையை அலுவலகத்திலும் வீட்டிலும் அதிகப்படுத்தும் முயற்சிகளை எடுப்பது. ஆறாவதாக, நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வது. நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதன் அவசியத்தைச் சொல்லும் ஆசிரியர், ‘‘உங்களுடைய நேரத்தின் மீது உங்களுக்கு முழு கன்ட்ரோல் வந்து விட்டவுடனேயே உங்களுடைய வாழ்க்கையின் மீதும் உங்களுக்கு முழு கன்ட்ரோல் வந்துவிடுகிறது’’ என்கிறார்.

தடைகளை உடைத்தெறியுங்கள்..!

இறுதியாக, நம் வாழ்வில் நாம் இந்தவிதமான திட்டமிடுதல்களை தடுக்கும் விஷயங்களைப் பட்டியலிட்டு அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். உதாரணமாக, ‘எங்கே ஆரம்பிப்பதென்று புரியவில்லை’, ‘என் வருமானத்தில் சேமிக்கவே முடியாது. இதில் எப்படி ஃபைனான்ஷியல் செக்யூரிட்டி எல்லாம் சாத்தியம்?’ ‘நான் ரொம்ப பிசி. நான் என் கரியர் உச்சியில் இருக்கிறேன். எப்படி இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வாழ்வது?’ ‘நீங்கள் சொல்வதைப் போல் நடந்துகொள் வதெல்லாம் என் நிறுவனத்தில் சாத்தியமே யில்லை’ என்பது போன்ற பல்வேறு தடைகளை வென்றெடுத்து எப்படி என்ரிச் நடைமுறையை செயல்படுத்துவது என்று இறுதி அத்தியாயத்தில் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

சொந்த அனுபவம் மற்றும் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை அனைவரும் கட்டாயம் படிக்கலாம்!

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism