Published:Updated:

நாணயம் லைப்ரரி : அலுவலக அரசியல்... மோசமான சூழல்... எதிர்கொள்ளும் சூட்சுமம்!

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் லைப்ரரி

வேலைக்குச் செல்பவர்களுக்கு வெற்றி டிப்ஸ்

முதன்முதலாக வேலைக்குச் செல்பவர்கள் பணியிட வாழ்க்கையை எதிர்கொண்டு, அதை வெற்றிகரமாக நடத்திச் செல்வது எப்படி என்பதைச் சொல்கிறது ‘ஹெள டு கோ டு வொர்க்’ என்னும் புத்தகம். லூசி க்ளேட்டன் மற்றும் ஸ்டீவன் ஹைன்ஸ் என்ற இருவர் இணைந்து எழுதிய இந்தப் புத்தகத்தைதான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

படிப்பை முடித்துவிட்டு முதன்முதலில் பணிக்குச் சென்றபின், அலுவலகச் சூழலைப் புரிந்துகொண்டு எப்படி ஒரு தலைவனாவது, எப்படி வெற்றி பெறுவது என்பதை எடுத்துச் சொல்ல புத்தகங்களே இல்லை. இதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்கின்றனர் ஆசிரியர்கள்.பணிக்குச் சேரும் முன் என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆரம்பித்து, எப்படி ராஜினாமா செய்வது என்பது வரையிலான பல விஷயங்களை அலசுகிறது இந்தப் புத்தகம்.

நாணயம் லைப்ரரி : அலுவலக அரசியல்... மோசமான சூழல்... எதிர்கொள்ளும் சூட்சுமம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“பொதுவாக, வேலைக்குப் போகும் முன் சொல்லப்படும் பல அறிவுரைகளிலிருந்து இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. ‘உனக்கு என்ன தெரிகிறது என்பது முக்கியமில்லை. உனக்கு யாரைத் தெரிகிறது என்பதுதான் முக்கியம்’ என்ற அறிவுரை புரிந்துகொள்ளப்படுகிற விதத்தில் பெரும் தவறு இருக்கிறது. உங்களுடைய பெற்றோர் பெரிய ஆளாக இருந்தால் உங்களுக்கு நல்ல வேலையை வாங்கித் தருவது சுலபம் என்ற விதத்தில் இதை அர்த்தம் செய்துகொள்வது உலக இயல்பு. ஆனால், நீங்கள் எதில் திறமையான ஆளாக இருக்கிறீர்களோ, அந்தத் திறமை தேவைப்படும் இடத்தில் இருக்கிற நபரைத் தெரிந்து வைத்துக் கொள்வதாலேயே நீங்கள் வெற்றி பெற முடியும். அதற்குத்தான் நெட்வொர்க் தேவை என்பதுதான் இதன் நிஜ அர்த்தம்’’ என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

இரண்டாவதாக, “உங்கள் திறமையின் மீது முதலில் நம்பிக்கை வையுங்கள்” என்ற அறிவுரையை மேற்கோள் காட்டும் ஆசிரியர்கள், “உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள் என்பது சரி. ஆனால், அதே நேரம் அலுவல கத்தில் வேலையும் பாருங்கள். உங்கள் திறமையின் மீது அதீத நம்பிக்கையை வைத்துக் கொண்டு, ‘நானெல்லாம் எங்கேயோ இருக்க வேண்டியவன்’ என்று அலுவலகத்தில் வேலையே செய்யாமல் இருந்தால் முன்னேற்றம் என்பது வாழ்வில் வரவே வராது என்று எச்சரிக்கின்றனர்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பழகத் தயங்காதீர்கள்..!

‘‘நான் வேலைக்குச் சேர்ந்துள்ள இடம் சூப்பரான இடம். எனக்குதான் எல்லோ ரிடமும் பழகக் கூச்சமாக இருக்கிறது என்று சொல்லவே கூடாது. ஆரம்ப காலத்தில் ஒரு ஸ்பாஞ்ச் போல, நீங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். கம்ப்யூட் டரையே பார்த்துக் கொண்டிருப்பது, நேரில் பேச வேண்டிய விஷயங் களைக்கூட மெயிலைப் போடுவது, வேலை இல்லாமல் இருக்கும் நேரத்தில் யாரிடமும் பேசாமல் போனை நோண்டிக்கொண்டிருப்பது போன்ற விஷயங்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். புதிய பணியிடத்தில் உள்ள அலுவல்ரீதியான அன்றாட நிகழ்வுகள் ஒரு மேஜிக் போன்றவை. அவை நடக்க நடக்க எவ்வாறு நடக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள அவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நினைவிருக்கட்டும்!

நாணயம் லைப்ரரி : அலுவலக அரசியல்... மோசமான சூழல்... எதிர்கொள்ளும் சூட்சுமம்!

அப்படிப்பட்ட சில நிகழ்வுகளின்போதே யார் எப்படிப்பட்டவர் (திறமை, மேன்மை, குணம் போன்றவற்றில்) என்பது உங்களுக்குத் தெரியவரும். சில நிகழ்வுகளில் நீங்கள் காட்டும் ஈடுபாடே உங்களை மற்றவர்கள் நினைவில் கொள்ள வைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்’’ என்று எச்சரிக்கின்றனர் ஆசிரியர்கள்.

தலைமைப்பண்பு வேண்டும்..!

‘‘தலைமைப் பண்பு என்றால் என்ன? பிறரை பின்தொடர வைக்கும் குணத்துடன் இருத்தல் என்று ஒரே வரியில் சொல்லலாம். பிறரை பின்தொடர வைக்கும் குணங்கள் என்னென்ன? முடிவெடுத்தல், சுற்றியிருப்பவர்களை ஊக்குவித்தல், மகிழ்ச்சி மற்றும் எழுச்சியுடன் செயல்படும் சக்தியைக் கொண்டிருத்தல், எதிலும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் இருத்தல், நேர்மையுடன் செயல்படுதல், சிக்கலான தருணங்களை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருத்தல் போன்ற திறன்களின் கலவைதான் தலைமைப்பண்பு. தலைமை என்பது ஒரு சூப்பர் ஹீரோ வேலை என்பதெல்லாம் மாறி, நாம் அனைவருமே ஒவ்வொரு சிறுசிறு பிரிவுக்குத் தலைவராகலாம் என்ற காலம் வந்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலுவலகத்தில் தலைமை என்பது சம்பள செளகர்யங் களையெல்லாம் தாண்டிய அதைப் பெற்றிருப்பவருக்கே உரிமையான தனிச்சுதந்திரம். சரி. வேலைக்குப் போன ஆரம்பகாலத்திலேயே எப்படித் தலைமைப் பண்பை வெளிக்காட்டுவது என்று கேட்கிறீர்களா? இதில் மட்டும் அவசரப்படவே கூடாது. பணியிடச் சூழல் புரியாத காலத்தில் ஆரம்பத்திலேயே தலைமைப் பண்பை காட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்பி கண்மண் தெரியாமல் போய் எக்குத்தப்பாக சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது’’ என்று எச்சரிக் கின்றனர் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி : அலுவலக அரசியல்... மோசமான சூழல்... எதிர்கொள்ளும் சூட்சுமம்!

வேலைக்குச் சேர்ந்தவுடன்...

பெரிய நிறுவனங்களின் பணிக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மிகமிகத் தெளிவான படிநிலைகளைக் கொண்டிருக்கும். ஆட்களைச் சேர்த்த பின்னால் பணியைத் தொடங்கும் முன் வழங்கப்படும் அறிமுகப் பயிற்சி என்பது நிறுவனம் பற்றித் தெரிந்து கொள்ள பெருமளவில் உதவியாக இருக்கும். நிறுவனம் பெரியதாக இருப்பதால், யாருக்கு என்ன வேலை, என்ன பவர், எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்ப தெல்லாம் திட்டவட்டமாக வரையறுக்கப் பட்டிருக்கும். ஆனால், அதே சமயத்தில் சிறு நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்தால், அந்த நிறுவனத்தில் இதுபோன்ற பயிற்சிகள் இருக்காது. எனவே, நிறுவனத்தின் செயல்பாடு குறித்து நீங்கள் புரிந்துகொள்ள ரொம்பவுமே பிரயாசைப்பட வேண்டியிருக்கும்.

நாணயம் லைப்ரரி : அலுவலக அரசியல்... மோசமான சூழல்... எதிர்கொள்ளும் சூட்சுமம்!

சிறு நிறுவனங்களில் யார் யார் மூளையாகச் செயல்படுகின்றனர், யார் யாருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது, யார் சொன்னால் அனைவரும் தட்டாமல் ஒரு விஷயத்தைச் செய்கின்றனர், யாரிடம் ஒட்டிக்கொண்டால் நம்மை நன்றாகப் பயிற்றுவிற்பார்கள் என்பது போன்ற பல விஷயங்களைப் பணிக்குச் செல்பவர்கள் கூர்ந்து நோக்க வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் விளக்கமாகச் சொல்லியுள்ளனர். இதையும் தாண்டி புதிய பணியாளர்களிடம் பெரு மற்றும் சிறு நிறுவனங்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு மாறுதல்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது எப்படி என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

“நேரம் தவறாமை, ஊக்கத்தொகை, நமக்கான மதிப்பைத் தேடிக்கொள்ளுதல், நாம் காட்ட வேண்டிய உற்சாகத்தின் அளவு, நல்லதொரு மென்டாரைக் கண்டுபிடிப்பது எப்படி, நடை, உடை, பாவனை, தன்னிலை அறிந்து செயல்படுதல் எனப் புதிய வேலையில் அனைவரும் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் அறிந்து செயல்பட வேண்டும்” என விளக்கி யுள்ளார்கள் ஆசிரியர்கள்.

இறுதியாக, பணியிடத்தில் நமக்கு (எவ்வளவு திறமையாக இருந்தாலும்) கெட்ட நேரம் என்பது எப்படி வேண்டுமென்றாலும் வரலாம். அந்தக் கெட்ட நேரத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஆபீஸ் பாலிடிக்ஸில் தவறானவற்றைத் தவிர்ப்பது எப்படி, மோசமான மேலதிகாரிகளை (குணங்கள் என்னென்ன) எதிர்கொள்வது எப்படி, படுகேவலமான பணியிடச் சூழ்நிலையைக் கொண்டிருக்கும் அலுவலகத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கும் நறுக்கென்ற ஐடியாக்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவருமே ஒருமுறை அவசியம் படிக்கலாம்!

- நாணயம் விகடன் டீம்