Published:Updated:

நாணயம் லைப்ரரி : மாற்றத்தை எதிர்கொள்ளும் மந்திரம்! - வாழ்க்கையை மாற்றும் உங்கள் கதை!

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் லைப்ரரி

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வதன் மூலமே ஜெயிக்க முடியும்!

ந்த வயதிலும் மாற்றத்தை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். ஆனால், அது எப்படி சாத்தியம் என்பதைத்தான் சொல்கிறது ‘லைஃப் இஸ் இன் தி டிரான்சிஷன்ஸ்’ எனும் புத்தகம். இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் ப்ரூஸ் ஃபெய்லர். எடுத்த எடுப்பிலேயே ஒரு சுவாரஸ்யமான கேள்வியைக் கேட்கிறார் அவர். ‘‘உங்களைப் பற்றிய கதை சொல்ல முடியுமா’’ என்பதே அந்தக் கேள்வி. ‘‘நாம் என்ன அம்பானியா அதானியா, நமக்கேது கதை’ என நம்மில் திரும்பக் பலரும் கேட்போம். இந்தக் கேள்விக்கு ஆசிரியர் தரும் விளக்கத்தைப் பாருங்கள்.

உங்களுக்கும் ஒரு கதை உண்டு..!

“ஒரு சில கணங்கள் அசையாது நின்று உங்களுடைய கதை என்று எதைச் சொல்கிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். கதையா, எப்போது சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? உங்களுடைய பின்னணி குறித்த கதையை நீங்கள் எந்த மாதிரியாகச் சொல்கிறீர்கள் என்பதுதான் அது. முதன்முதலாக ஒரு மனிதரை நீங்கள் சந்திக்கும்போது அவரிடம் உங்களைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த (ஏற்கெனவே பல முறை சென்றிருக்கிற) இடத்துக்குச் செல்லும்போது உங்களுக்கே நீங்கள் சொல்லும் கதை (நினைவலைகள்), உங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட பழைய போட்டோக்களை பார்க்கும்போது மற்றவர்களுக்கு நீங்கள் சொல்லும் கதை, உங்களுடைய வெற்றியைக் கொண்டாடும்போது நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லும் கதை, ஏதாவது ஒரு காரணத்துக்காக நீங்கள் மருத்துவமனையை நோக்கி அவசரமாகப் போகும்போது நீங்கள் சொல்லும் கதை என்பனவற்றைத்தான் நீங்கள் சொல்லும் கதை என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : மாற்றத்தை எதிர்கொள்ளும் மந்திரம்! - வாழ்க்கையை மாற்றும் உங்கள் கதை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீங்கள் யார், எங்கிருந்து வந்தீர்கள், எங்கே செல்லும் கனவுடன் இருக்கிறீர்கள், இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையின் உச்சம், பாதாளம், திருப்புமுனை போன்றவற்றைச் சொல்வதுதான் உங்கள் கதை. நீங்கள் எதை நம்புகிறீர்கள், எதற்காகப் போராடுகிறீர்கள், எது உங்களுக்கு மிகமிக முக்கியம் என்பதை எல்லாம் உள்ளடக்கிய கதை அது. அது உங்களுடைய வாழ்க்கையின் அடிப்படை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தக் கதையை நீங்களே உங்களுக்குச் சொல்லிக்கொள்வதுதான்’’ என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

வாழ்க்கைத் தடம் மாறும்போது...

``உங்கள் வாழ்க்கை என்பது தெளிந்த நீரோடை போன்றது. அது சரியாகப் போகிறவரை உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதில் திடீரென்று ஒரு பெரிய கல் வந்து விழும்போது ஏற்படும் அதிர்ச்சி சரியாவதற்கு பல காலம் ஆகும். உங்கள் வாழ்க்கைக் கதையில் அதிரடியான விஷயங்கள் நடக்கும்போதும், நீங்கள் நினைத்தவை நடக்காது போகும்போதும் அந்தக் கதையை எப்படி மாற்றி அமைக்கிறீர்கள் என்பது இந்தக் கதையில் முக்கிய விஷயம். இப்படி மாற்றி அமைத்தலும் எல்லா வயதிலும் நடக்கும். அது சாத்தியமும்கூட’’ என நமக்குள் நம்பிக்கை ஊற்றெடுக்கிற மாதிரி பேசுகிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மூன்று வகையான கதைகள்

“நம்முடைய கதையைப் பொதுவாக, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ‘வெறும் கையுடன் வந்தோம், பாடுபட்டோம், வெற்றி பெற்றுச் செழித்தோம்’ என்பது ஒருவகை. ‘எல்லாம் இருந்தது, இருந்ததை எல்லாம் தொலைத்து விட்டோம்’ என்பது இரண்டாவது வகை. ‘என் வாழ்க்கை அளவற்ற ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக உள்ளது’ என்பது மூன்றாவது வகை.

நாணயம் லைப்ரரி : மாற்றத்தை எதிர்கொள்ளும் மந்திரம்! - வாழ்க்கையை மாற்றும் உங்கள் கதை!

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கை தாறுமாறான மாற்றங்களைச் சந்திக்க வாய்ப்புள்ள ஒரு விஷயம் என்பதைப் புரிந்துகொண்ட குழந்தைகளே அவர்களுடைய வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களைச் சுலபத்தில் எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்று சொல்கிறது ஓர் ஆய்வு.

இந்தக் கதை சொல்லும் விஷயம் வெறும் கதை மட்டுமல்ல, மருத்துவம் சம்பந்தப்பட்டதும்கூட. Narrative gerontology, narrative adolescence மற்றும் narrative medicine என்பது போன்ற மருத்துவத்துறைகள் இப்போது நடைமுறைக்கு வரத் தொடங்கிவிட்டன. இதிலிருந்து தெரிவது என்ன? இக்கட்டான சூழ்நிலைகளில் நம்முடைய வாழ்க்கையின் கதையை நினைவுகூர்ந்து அதை மீண்டும் கட்டமைப் பதன் மூலமே நம்மால் மீண்டும் நம் வாழ்க்கையை நாம் நினைக்கும் விதத்தில் மாற்றியமைக்க முடியும்” என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : மாற்றத்தை எதிர்கொள்ளும் மந்திரம்! - வாழ்க்கையை மாற்றும் உங்கள் கதை!

வாழ்க்கையைக் கட்டமைக்கும் கலை!

“நம் மனதில் இருக்கும் நம்முடைய ‘நம்மைப் பற்றிய கதை’, நம் குடும்ப அங்கத்தினர்களின் மத்தியில் இருக்கும் குடும்பக்கதை மற்றும் நம்மைச் சுற்றியிருப்பவர் களின் கதை என்ற எதிர்பார்ப்பு களின் கலவையுமே நம்மை வழிநடத்துவதற்கு ஏதுவாக இருக்கிறது. நாம் இதை எந்த அளவுக்கு ஒப்புக்கொள்கிறோமோ, அதைவிட ஒருபடி அதிகமாக அவை நம்மைப் பாதிக்கிறது.

இன்றைக்கு நம் வாழ்க்கையை டெக்னாலஜி, அரசியல், ஆன்மீகம் போன்ற பல்வேறு விஷயங்கள் மாற்றிமையக்க முயல்கிறது. ஆனால், நம்மிடம் இதுபோன்ற விஷயங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அடிப்படை உபகரணங்கள்கூட இல்லை. வெறுமனே தன்னம்பிக்கை, முயற்சி என்ற பழைய உபகரணங்களைக் கொண்டே அன்றாடம் புதிது புதிதாக முளைக்கும் தடைகளைக் கையாள நினைக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாழ்க்கை என்பது..!

வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஏற்றாற்போல் நம்மை நாம் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய நியதி. அதுவும் இந்தக் கட்டமைக்கும் கலையில் நாம் கைதேர்ந்தவராக மாற வேண்டும் என்பதுதான் இன்றைய சூழல். வாழ்க்கையின் போக்கைச் சீர்குலைக்கும் விஷயங்களை ஒரு மனிதனின் வாலிப பருவம் முதல் ஓய்வுபெறும் காலம் வரை கணக்கிட்டல், அது கிட்டத்தட்ட மூன்று டஜன் எண்ணிக் கையில் இருக்கின்றன. அதாவது, 12 - 18 மாத காலத்துக்கு ஒன்று என சராசரியாக வாழ்க்கையைச் சீர்குலைக்கும் விஷயத்தை மனிதன் எதிர்கொள்கிறான்.

நாணயம் லைப்ரரி : மாற்றத்தை எதிர்கொள்ளும் மந்திரம்! - வாழ்க்கையை மாற்றும் உங்கள் கதை!

வாழ்க்கை நடுக்கம் என்ற ஒன்று நம் அனைவரின் வாழ்விலுமே வரும். இதைச் சமாளிப்பதற்கான வழிமுறை களைக் கடைப்பிடிப்பது தானாக நடக்கிறதா அல்லது கட்டாயத்தின் பேரில் நடக்கிறதா என்பதிலேயே மாற்றத்தின் போக்கு இருக்கும். இதனாலேயே இதற்கான வழிவகைகளை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

சக்திமிக்கவர்களாக ஆக்குங்கள்!

நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் கதைகளை மாற்றிக்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கியுள்ளது இந்தப் புத்தகம். வாழ்க்கை நேர்கோட்டில் அமைவதில்லை. அதேபோல், மாற்றங்களும் நேர்கோட்டில் அமைவதே யில்லை. மாற்றங்கள் என்பது நிகழ, நீங்கள் நினைப்பதைவிட நீண்ட நாள்கள் ஆகும். வாழ்வில் மாற்றங்கள் வரும் தருணங்களே சுயசரிதைகளில் முக்கியத்துவம் பெறும் தருணங்களாக இருக்கிறன. மாற்றம் என்பது வாழ்வின் அத்தியாவசியமான ஒரு நிகழ்வாகும்.

நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் கதைகளே நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்குகிறது. கதைகள் மனிதர்களை இணைக்கிறது. கதைகளே நம்மை ஊக்குவிக்கவும் செய்கிறது. அதுவே நம்மை நம் குறிக்கோளை நோக்கி கவனம் வைத்து ஒரு காரண காரியத்துடன் செயல்படத் தூண்டுவதாய் இருக்கிறது” என்று கூறி புத்தகத்தை நிறைவு செய்கிறார்.

மாற்றம் அதிவேகமாக நிகழும் இந்த உலகில் மாறிக்கொள்வதன் அவசியத்தையும் மாற்றத்தின் மூலம் வெற்றிபெற்றவர்களின் கதையையும் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.

நாணயம் விகடன் டீம்