கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான சிறு முயற்சி இந்தப் புத்தகம்.

ஓர் அறைக்குள் நம்மைப் பூட்டி வைக்கும் இந்தக் கொரோனா காலத்தில் அனைவருமே இறுக்கமான மனதுடன்தான் சுழன்றுகொண்டிருக்கிறோம். நமக்கே அப்படியெனில் விளிம்பு நிலையில், மனநல பாதிப்புடன் இருக்கும் உள்ளங்களைப் பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கிறது `ஷ்’ இன் ஒலி.

ஸ்கிசோபெர்னியாவுடன் (பிளவுபட்ட மனநோய்) வாழ்ந்த தன் மாமா செங்கின் வாழ்க்கையையும் அவரை முப்பது ஆண்டுகள் பார்த்துக்கொண்ட தன் அம்மாவின் வலியையும் தன் முதல் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் டேனியல் லிம். 1961-1994 வரையிலான சிங்கப்பூரை விழுங்கிய உலகமயமாக்கலின் பின்புலத்திலும்கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தச் சிறிய தேசம் பெரிதாக எதையும் செய்ததில்லை என்னும் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது இப்புத்தகம். சிங்கப்பூரின் ஒரே மனநல மருத்துவமனையும் அதன் இரும்புக்கம்பி அறைகளும் நாம் அவர்களை எப்படி நடத்தினோம் என்பதற்கான சிறு சான்று.

படிப்பறை
படிப்பறை

30 ஆண்டுகள் ஸ்கிசோபெர்னியா பாதித்த ஒருவரைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவர்களின் காதுகளில் ஒலிக்கும் குரல்கள்தான் அவர்களின் எஜமானன். ஆனால், அந்தக் குரல்களை சுமக்கப்போவது பாதிக்கப்பட்ட நபரின் குடும்பமும்தான். செங்கைப் பார்த்துக்கொள்ளும் அவன் அக்கா, அவளின் குடும்பப் பொறுப்புகளையும் மீறிச் செய்யும் செயல்கள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதாக விரிகிறது. அனைத்துத் துன்பங்களையும் கடந்து, திமிறிக்கொண்டு எழும் அன்பு, உடைந்துபோன செங்கை அவரின் கடைசிக்காலம் வரை அழைத்துச் செல்கிறது. துயர்மிகு வலியைப் பதிவு செய்யும் இந்த நினைவின் துகள்கள், நமக்கு அச்சத்துக்குப் பதிலாய் அன்பையும் நம்பிக்கையும் போதிக்கின்றன. சிறுமியாக, தன்னை பாதித்த இவ்விஷயங்கள் குறித்து 2014-ம் ஆண்டு ஆங்கிலத்தில் The sound of SCH எனத் தன் நினைவுக்குறிப்புகளை வெளியிட்டார் லிம். அந்த வலிகளை அப்படியே தமிழ்ப்படுத்தியிருக்கிறார் பத்மஜா நாராயணன். மொழிபெயர்ப்பில் இருக்கும் சில குறைபாடுகளையும் கடந்து இந்த நூல் அதன் வலியை நம்முள் கடத்துகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான சிறு முயற்சி இந்தப் புத்தகம்.

`ஷ்’ இன் ஒலி

The sound of SCH
டேனியல் லிம்
தமிழில் : பத்மஜா நாராயணன்

வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்

பக்கங்கள்: 160
விலை: ரூ.190


போன்: 04652 - 278525