Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

எஸ்.சுஜாதாவின் பார்வையிலேயே விரிகிறது நாவல். ராமநாதபுரத்திலிருக்கும் ஒரு பள்ளி விடுதிக்கு வந்து சேர்கிறாள் ஒன்பதாவது படிக்கும் சுஜா

படிப்பறை

எஸ்.சுஜாதாவின் பார்வையிலேயே விரிகிறது நாவல். ராமநாதபுரத்திலிருக்கும் ஒரு பள்ளி விடுதிக்கு வந்து சேர்கிறாள் ஒன்பதாவது படிக்கும் சுஜா

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தலைப்பிலேயே நாவல் நிகழும் களத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிடுகிறார் எழுத்தாளர் எஸ்.சுஜாதா. பள்ளிப்பருவத்தில் விடுதி வாழ்க்கை என்பது நரகம். ஒருபுறம் வீடு, பெற்றோர், சகோதர சகோதரிகள் குறித்த ஏக்கம் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும்; மற்றொருபுறம், அடக்குமுறைக்கு நிகரான விடுதிக் கட்டுப்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமும் அதுவரை ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டிராத புதிய வாழ்க்கை முறையும் ஆளையே அசைத்துப் பார்த்துவிடும். இந்த அவஸ்தைகளெல்லாம் பின்னாள்களில் ஆனந்தமாக அசைபோடும் நினைவுகளாக மாறிவிடுவதென்னவோ ஆச்சர்யமான உண்மை. விடுதி வாழ்க்கையை அனுபவித்தவர்கள் மட்டுமே இதை அறிவார்கள். இந்த உணர்வை வெகு நேர்த்தியாக, அழுத்தமாக வாசகர்களுக்குக் கடத்திவிடுகிறார் இந்நூலாசிரியர்.

எஸ்.சுஜாதாவின் பார்வையிலேயே விரிகிறது நாவல். ராமநாதபுரத்திலிருக்கும் ஒரு பள்ளி விடுதிக்கு வந்து சேர்கிறாள் ஒன்பதாவது படிக்கும் சுஜா. அந்த விடுதிச் சூழல், அங்கே அவள் சந்திக்கும் சக மாணவிகள், வார்டன், ஆசிரியைகள், ஹெச்.எம்., வாட்ச்மேன் என அத்தனை மனிதர்களும் நமக்கும் பரிச்சயமாகிவிடுகிறார்கள். பள்ளி விடுதிகளுக்கே உரித்தான சாபக்கேடு அங்கும் உண்டு. புளித்த வாடையடிக்கும் இட்லி தொடங்கி அசுத்தமான கழிவறை, கலங்கலாகக் கிடக்கும் தண்ணீர்த் தொட்டி, பிரார்த்தனை, மாணவிகளே விடுதியையும் வகுப்பறைகளையும் சுத்தம் செய்யும் அவலம்... அத்தனையும் நாவலின் போக்கிலேயே நமக்குக் காட்சிகளாகப் பதிவாகிவிடுகின்றன.

படிப்பறை

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படும் சித்ரா; இறை ஊழியத்துக்குத் தயார்ப்படுத்தப்படும் ஆக்னஸ்; பெற்றோரை இழந்து, விடுதி வாழ்க்கைக்கே தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட ஸ்டெல்லா என இதில் இடம்பெறும் மனுஷிகள் நம்முள்ளும் நிறைந்துபோகிறார்கள்.

பாத்திரங்கள் குறித்த வர்ணனை இல்லை, விடுதிச் சூழலை இன்னும் சற்று விரிவாக விவரித்திருக்கலாமோ என்று தோன்றினாலும், எளிய நடை தரும் விறுவிறுப்பான வாசிப்பு அனுபவம், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

ஆண்ட்ரூஸ் விடுதி - அறை எண் ஏதுமில்லை

எஸ்.சுஜாதா

வெளியீடு: தமிழ்வெளி

# 1 - பாரதிதாசன் தெரு,
சீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை - 600 122.
செல்: 9094005600.

பக்கங்கள்: 104

விலை: ரூ.100