Published:Updated:

படிப்பறை

நிலைத்த பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
நிலைத்த பொருளாதாரம்

நிலைத்த பொருளாதாரம்

படிப்பறை

நிலைத்த பொருளாதாரம்

Published:Updated:
நிலைத்த பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
நிலைத்த பொருளாதாரம்

பொருளாதாரத்துக்கும் மனித வாழ்க்கைக்கு மான தொடர்பை இயற்கையின் வழியில் முழுமையாகப் புரிந்து கொண்டு, அதன் நிலைத் தன்மைக்கான சாத்தியங்களை ஆராய்ந்தவர் ஜே.சி.குமரப்பா. குமரப்பா வலியுறுத்திய பசுமைப் பொருளியலை நோக்கியே உலக உருண்டை இப்போது உருளத் தொடங்கி யிருக்கிறது. இயற்கையைப் பழங்குடிகளின் கண்கொண்டு பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கும் குமரப்பாவின் பொருளாதாரக் கொள்கை, உலகெங்கும் உள்ள பொருளாதார நிபுணர்களின் கவனத்தை ஈர்த்தது.

காந்தியின் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் வடித்துக்கொடுத்த குமரப்பா, கிராமப் பொருளாதாரத்தை வளர்ப்பதன் மூலமாகவே ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்று வலியுறுத்துகிறார். ஜபல்பூர் மத்திய சிறையில் இருந்தபடி குமரப்பா எழுதிய ‘Economy of Permanence’ என்ற நூல் உழைப்பு, வேலை, சம்பளம், அரசு, சொத்துரிமை, இயற்கை, பரிமாற்றம், பணம், பகிர்வு, நுகர்வு, சுரண்டல் பற்றி யெல்லாம் முழுமையாகப் பகுப்பாய்வு செய்கிறது.

படிப்பறை

கொரோனா போன்ற பேரிடர்கள் மனிதகுலத்தைத் துவம்சம் செய்துவரும் நிலையில் உலகெங்கும் குமரப்பா மீண்டும் வாசிக்கப் படுகிறார். தகுந்த நேரத்தில் Economy of Permanence நூலைத் தமிழில் அழகிய கட்டமைப்பில் வெளியிட்டிருக்கிறது தன்னறம். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான அ.கி.வேங்கட சுப்ரமணியன் இயல்பான மொழியில் இதைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.

‘சாலைகள் அமைப்பதோ கிணறுகள் தோண்டுவதோ வேதியுரங்களை வழங்குவதோ ஊரக மேம்பாட்டின் குறியீடு அல்ல... திட்டங்களைச் செயல் படுத்துவதற்கு முன்பு, சில ஏழை உழவர்களை அழைத்து அவர்களின் விலா எலும்புகளை எண்ண வேண்டும். திட்டங்களைச் செயல்படுத்திய பின் அவர்களை மீண்டும் அழைத்து, பரிசோதிக்கையில் அவர்களின் விலா எலும்புகளை மூடும்படியான சதை வளர்ந்தி ருந்தால் அதுதான் திட்டத்தின் உண்மையான வெற்றி’ என்று எழுதுகிறார் குமரப்பா. காந்தியே சொல்வதுபோல, இந்த நூலை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்ள முடியாது. இரண்டு அல்லது மூன்றுமுறை கவனமாகப் படிக்கவேண்டும்.

நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி.குமரப்பா,

தமிழில் அ.கி. வேங்கட சுப்ரமணியன்

வெளியீடு: தன்னறம் நூல்வெளி,

குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை- 635307, கிருஷ்ணகிரி மாவட்டம்.

தொடர்பு எண்: 9843870059,

www.thannarame@gmail.com

பக்கம்: 160,

விலை: ரூ. 180

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism