Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

குரலற்றவர்கள்

படிப்பறை

குரலற்றவர்கள்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

நவீன வாழ்வில் கதைகளைச் சொல்வதற்கு அதுபற்றிய புரிதல் அவசியம். அது வாய்க்காதுபோனால் கேலிக்கூத்தாகிவிடும். அதிலும் ஐ.டி துறை சார்ந்தும் கார்ப்பரேட் வாழ்வியலையும், அதில் உலவாதவர்களும் உணராதவர்களும் கதையாக்கும்போது போலித்தனம் ததும்பும். தம் விருப்புவெறுப்புகளை நிறைத்து அதீத சம்பளம், ஒழுக்கம் பிறழ்ந்த வாழ்க்கை என்று பொதுப்புத்தி விஷயங்களால் கதையை மூழ்கடித்து, ஐ.டி-யில் பணிபுரியும் ஊழியர்கள் என்றாலே இப்படித்தான் என்கிற சித்திரத்தை வாசகருக்கு உருவாக்கிவிடுவார்கள். ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, நவீன இளைஞனின் மனநிலையை அலைக்கழிப்பான வாழ்வியலை, தன் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘குரலற்றவர்கள்’ மூலம் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் ஹரிஷ் குணசேகரன்.

தொகுப்பின் முதல் கதையான ‘மகிழ் மேட்ரிமோனி’ வெகு நவீன காலப் பிரச்னை. நல்ல வேலை, நல்ல சம்பளம் ஆனாலும் திருமணம் ஆகவில்லை. காதலும் கைகூடாதவன் எப்படித் தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க முயல்கிறான் என்பதுதான் கதை. சாதிய, வர்க்கக் கட்டுமானம் எத்தனை வலிமையாக ஒரு தனிமனித வாழ்வைத் தீர்மானிக்கிறது என்பதையும், ஜோதிடம் சார்ந்த எளிய மக்களின் நம்பிக்கை எப்படி வணிகமாகிறது என்பதையும் மிக அழகாக முன்வைக்கும் கதை இது. மேல் படிப்புக்காகச் செல்லும் இளைஞன், வேலையிலிருந்து விரட்டப்படும் இளைஞன், மனைவியின் பழைய காதலனுடனான படங்களைப் பார்க்க நேர்கிறவன், மூச்சு முட்டும் நகர வாழ்க்கையிலிருந்து தப்பித்து ஓட முயல்பவன் என மாறுபட்ட இளைஞர்களின் வாழ்க்கை இந்தத் தொகுப்பு முழுக்க நிறைந்து கிடக்கிறது.

படிப்பறை

இந்தத் தொகுப்பின் பலம் மிக எளிமையும் அழகும் வாய்ந்த மொழி. ஹரிஷ் மிக நுட்பமாக அந்த மனமும் மனிதனும் இயங்கும் சமூகப் பின்புலத்தையும் எழுத்துக்குள் கொண்டுவருகிறார். இதுதான் இந்தத் தொகுப்பின் வெற்றி.

குரலற்றவர்கள்
-
ஹரிஷ் குணசேகரன்
சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு :
வாசகசாலை பதிப்பகம்
சென்னை - 600073

பக்கங்கள் : 124

விலை : ரூ 150

தொடர்பு : 9942633833 / 9790443979