Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

39 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு முத்தமிடக் காத்திருப்பவனின் மனநிலை இது.

படிப்பறை

39 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு முத்தமிடக் காத்திருப்பவனின் மனநிலை இது.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

கீழத்தஞ்சை மற்றும் சென்னை என்னும் இருவேறு பகுதிகளில் வாழும் மனிதர்களையும், அவர்களின் அன்றாடங்களையும் ஆர்ப்பாட்டமில்லாத எளிய மொழியில் சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு. இந்த அன்றாடங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையை எப்படி வடிவமைக்கின்றன என்பதை நோக்கிய விசாரணையாகவும், அது அளிக்கும் கேள்விகள் அல்லது விடைகளின் தரிசனமாகவும் இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன.

நாம் எளிதாகக் கடந்துசெல்லும் அன்றாடத் தருணங்கள் எப்படி உருவாகின்றன என்பது மட்டுமல்லாமல், அந்தத் தருணங்களில் நிற்கும் மனிதர்களின் உளவியலை செந்தில் ஜெகன்நாதன் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்பதே இந்தக் கதைகளைத் தனித்துவமிக்கதாக ஆக்குகின்றன. கோபம், விரக்தி, இயலாமை, காமம், தவிப்பு என கதாபாத்திரங்கள் உணர்ச்சிக்கு ஆட்படுதலின் விவரிப்பு வாசகர்களுக்குத் துல்லியமாகக் கடத்தப்படுகிறது.

படிப்பறை

தேய்வழக்காகிப் போன உவமைகள் அங்கங்கு தென்பட்டாலும், வாசிப்பதை நிறுத்தி ஒருநொடி அதை அசைபோடச் செய்யும் மிக நுண்ணிய அவதானிப்பும், உவமையும் அநேகமாக எல்லாக் கதைகளிலும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. “உள்ளுக்குள் விருப்பமும் தயக்கமும் மல்யுத்தம் நடத்திக்கொண்டிருக்க, வெளியே போர் நிறுத்தத்திற்கு வந்த தேவாலயப் பாதிரியாரைப் போல் சாந்தமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தேன்.” 39 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு முத்தமிடக் காத்திருப்பவனின் மனநிலை இது.

‘எழுதுவதற்குச் சொந்த வாழ்வும் நிலமும் முதன்மையான கச்சாப்பொருள்கள். அதிலிருந்து எழுதும்போது உண்மை துலக்கமாக வெளிப்படுகிறது’ என்று முன்னுரையில் எழுதும் செந்தில், அதை சிறுகதைகளாக மாற்றுவதில் வெற்றிபெற்றிருக்கிறார்.

மழைக்கண்

- செந்தில் ஜெகன்நாதன்

வெளியீடு:

வம்சி புக்ஸ்

19, டி.எம்.சாரோன்,

திருவண்ணாமலை - 606601

9445870995

பக்கங்கள் : 144

விலை : ரூ. 150