Published:Updated:

படிப்பறை

இப்போது உயிரோடிருக்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
இப்போது உயிரோடிருக்கிறேன்

நோய்மையை இமையம் விளக்கிச் செல்லும் பகுதிகளில் உணர்வுகளுக்குள் சில்லென்று ஊசி பாய்கிற அவஸ்தை வந்து செல்கிறது

படிப்பறை

நோய்மையை இமையம் விளக்கிச் செல்லும் பகுதிகளில் உணர்வுகளுக்குள் சில்லென்று ஊசி பாய்கிற அவஸ்தை வந்து செல்கிறது

Published:Updated:
இப்போது உயிரோடிருக்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
இப்போது உயிரோடிருக்கிறேன்

தமிழின் சமகாலப் படைப்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இமையம். அவரது சமீபத்திய படைப்பான ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவல் தனி கவனம் கோருகிறது.

மெடிக்கல் மாஃபியா குறித்து ஒவ்வொரு நாளும் நம்மில் சிலர் பேசியும் எழுதியும் விவாதித்தும் வந்தபோதும் அதன் மிகப்பெரிய வலிமையை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பது சந்தேகம்தான். அதைக் குறித்தே நாவல் பேசுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைக்க வேண்டிய தமிழரசனுக்குத் திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போகிறது. ரைஸ்மில் நடத்தும் அப்பா, பள்ளியில் படிக்கும் தங்கை, வீடே உலகம் என இருக்கும் அம்மா இவர்களின் சின்ன உலகத்தை நோய் புரட்டிப் போடுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.மகனின் உயிரைக் காப்பாற்ற சென்னைக்கு ஓடுகிறார் தந்தை. அங்கே அவனுக்கு டயாலிஸிஸ் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது. அப்போதும் உடல் நிலை முன்னேற்றம் அடையாத சூழ்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அது அத்தனை எளிமையான நடைமுறையாக இல்லை. இவை அனைத்தையும் தாண்டி இவை அனைத்துக்குமாக வசூலிக்கப்படும் கட்டணம் ஒரு தலைமுறையின் சம்பாத்தியத்தையே கோருகிறது. ஆனாலும் யாரின் நோயும் புலம்பலும் அழுகையும் ஓய்ந்தபாடில்லை.

படிப்பறை

நோய்மையை இமையம் விளக்கிச் செல்லும் பகுதிகளில் உணர்வுகளுக்குள் சில்லென்று ஊசி பாய்கிற அவஸ்தை வந்து செல்கிறது. சில நேரங்களில் மருத்துவ வளாகத்தில் சுற்றித் திரிவதைப்போன்ற அவஸ்தையும் ஒருசேர உண்டாகிறது. நாவலில் இப்படி ஒரு குறிப்பு. “டயாலிஸிஸ் பேஷண்ட் பொறுத்தவரை பணம் எவ்வளவு இருக்கோ அவ்வளவு நாள் உசுரோட இருக்கலாம். உசுரோட இருக்கிறதுக்கு அதிர்ஷ்டம் வேணும். சீக்கிரம் செத்துப்போறதுக்கு அதவிட அதிகமா அதிர்ஷ்டம் வேணும்” என்று ஒரு நோயாளியின் அட்டெண்டர் சொல்லும்போது நிதர்சனம் முகத்தில் அறைகிறது.

ஏன் இன்னும் நல்ல மருத்துவம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது என்னும் வருத்தமும், அரசு மருத்துவமனைகள் சீராக இருந்தால் ஏன் தனியாரை நாடப்போகிறார்கள் என்னும் கோபமும் நாவலை வாசித்து முடிக்கும்போது நம்முள் எழுவதைத் தவிர்க்கவே முடியாது. இது நம் அமைப்பில் இருக்கும் குறை. இதற்கு எதிரான கலகக் குரலாகத்தான் இந்த நாவல் விளங்குகிறது. இதுதான் புலம்பலுக்கும் நல்ல இலக்கியத்துக்குமான வேறுபாடு.

இமையத்தின் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவல் இதுவரை வெளியான அவரின் நாவல்கள் அடைந்த உயரங்களையும் தரிசனங்களையும் தாண்டி நிற்கிறது.

இப்போது உயிரோடிருக்கிறேன் - இமையம்

வெளியீடு:

க்ரியா
புதிய எண்: 2 பழைய எண்: 25
17வது கிழக்குத் தெரு
காமராஜர் நகர்
திருவான்மியூர்
சென்னை - 41

தொடர்பு எண்: 7299905950

விலை: ரூ.345

பக்கங்கள்: 256

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism