Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

எல்லாம் நன்மைக்கே - தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரைகள்

படிப்பறை

எல்லாம் நன்மைக்கே - தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரைகள்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தந்தை பெரியார், அவர் வாழ்ந்த காலத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆளுமைகள் குறித்து எழுதிய இரங்கல் அறிக்கைகள், உரைகளின் தொகுப்பு இந்நூல். பெரியாருடன் நேரடித் தொடர்பிலிருந்த பத்திரிகையாளர் சு.ஒளிச்செங்கோ இந்நூலைத் தொகுத்திருக்கிறார்.

பனகல் அரசர், பி.டி தியாகராயர், சிங்காரவேலர், சின்னத்தாயம்மாள், நாகம்மாள் (பெரியாரின் முதல் மனைவி), வ.உ.சி., திரு.வி.க., பகத்சிங், காந்தியடிகள், நேரு, அம்பேத்கர், அண்ணா, ராஜாஜி, கொமால் பாஷா, ஸ்டாலின் உள்ளிட்ட 32 ஆளுமைகளின் இரங்கல் குறிப்புகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘குடி அரசு', ‘விடுதலை', ‘புரட்சி', ‘பகுத்தறிவு’ ஆகிய இதழ்களில் இந்த இரங்கல் குறிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

இரங்கல் குறிப்புகளின் தலைப்புகளுக்கு மரணம், மறைவு, இறந்தார், காலமானார் போன்ற வழக்கமான சொற்களால் அன்றி, சின்னத்தாயம்மாள் ‘முடிவு’, செங்கோடையன் ‘முடிவெய்தினார்', சக்லத்வாலா ‘சாய்ந்தார்', சிதம்பரம் ‘சிதைவு’, தோழர் ஏகாம்பரம் ‘பிரிவு’ எனப் பெரியாரின் சொற்தேர்வு பிரமிக்க வைக்கிறது.

‘நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? [...] நாகம்மாள் மறைவு ஈடுசெய்யமுடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்ராயமல்ல. பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களானால், அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள்... ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக’ என்று ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற தலைப்பில் பெரியார் தன் மனைவிக்கு எழுதிய இந்த இரங்கல் குறிப்பு வாசிப்போரைக் கலைத்துப்போடுகிறது.

`அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்லவேண்டும்’ என்று அண்ணாவின் மறைவு குறித்துக் கரையும் பெரியார், `சமுதாயத் தொண்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த என்னை முழுக்க முழுக்கச் சமுதாயத் தொண்டனாக ஆக்கிய பெருமை இராஜாஜி அவர்களுக்கே உரியதாகும்’ என்று இராஜாஜியின் இரங்கல் குறிப்பில் உருகுகிறார்.

படிப்பறை

தந்தை பெரியார் போன்ற ஆளுமைகள் பேசிய, எழுதிய ஒவ்வொரு சொல்லும் வரலாற்று ஆவணம் என்கிற வகையில், அவர் எழுதிய இந்த இரங்கல் குறிப்புகளும் இன்றளவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

எல்லாம் நன்மைக்கே - தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரைகள்

தொகுப்பாசிரியர்: சு.ஒளிச்செங்கோ

வெளியீடு: தமிழ்வெளி

#1, பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர்,

மலையம்பாக்கம், சென்னை - 600122

தொடர்புக்கு: +91 9094005600

பக்கங்கள்: 112

விலை: ரூ.120