Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

குழந்தைகளுக்கான கதைகள்போல் இருக்கும் சில கதைகள் அனைவருக்குமான பல செய்திகளைக் கொண்டிருக்கிறது. வாசிப்பதற்கு சிரமமான திருகல் நடையில்லை.

படிப்பறை

குழந்தைகளுக்கான கதைகள்போல் இருக்கும் சில கதைகள் அனைவருக்குமான பல செய்திகளைக் கொண்டிருக்கிறது. வாசிப்பதற்கு சிரமமான திருகல் நடையில்லை.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தமிழ் நவீன இலக்கியத்தில் காலந்தோறும் புதியவகை எழுத்துமுறைகள் பரிசோதிக்கப்பட்டுவருகின்றன. எதார்த்தவாத எழுத்து, மேஜிக்கல் ரியலிச எழுத்து, அ-நேர்கோட்டு எழுத்து என்று பல்வேறுவகையான எழுத்துமுறைகளில் இலக்கியங்கள் உருவாகின்றன. அதேபோல் புனைவிலக்கியத்தின் வடிவங்களும் வேறுபட்டிருக்கின்றன. கவிதையில் ஹைக்கூ என்னும் வடிவம் புதிய மன உணர்வுகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில், கடைசிவரியில் ஒரு திருப்பம் என்பதாக நீர்த்துப்போயிருக்கிறது. ஆனால் குறுங்கதைகள் சிறிய வடிவத்தில் புதிய அனுபவத்தைச் சொல்லும் முயற்சியாக நிலைத்திருக்கின்றன. மண்டோ முதல் சமீபத்திய தமிழ் எழுத்தாளர்கள் வரை பலரும் குறுங்கதை என்னும் வடிவத்தை முயன்றிருக்கிறார்கள். அந்தவகையில் சமூகவலைதளத்தில் எழுதி கவனம் பெற்ற குறுங்கதைகளை நூலாக்கியிருக்கிறார் முபீன் சாதிகா.

இதில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளும் விசித்திரமான வினோதமான உலகத்தை முன்வைக்கும் மாய எதார்த்தக் கதைகளே. பாட்டி சொல்லும் கதைகள் அருகிப்போன காலத்தில் புதிய உள்ளடக்கங்களுடன் உலகமெங்கும் மாய எதார்த்தக் கதைகள் எழுதப்படுகின்றன. வெறுமனே புனைவு, புராணிகம் என்பதைத் தாண்டி புதிய வகை அனுபவங்களையும் அரசியலையும் கொண்டிருப்பதே இந்தக் கதைகளின் தனித்துவம்.

படிப்பறை

ஒவ்வொரு கதையும் அதிகபட்சம் நூறு வார்த்தைகளைக் கொண்டவை. ஆனால் அதற்குள் வெவ்வேறுவகையான உலகங்களும் பயணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லை என்பதால் கதைகளை வாசிக்கும் வாசகர்கள் தம்முடன் பொருத்திக்கொள்ள முடியும். முருகன் போன்ற தமிழ்த்தொன்மங்களில் இருந்து காப்காவின் ‘உருமாற்றம்’ போன்ற பிறமொழிகளில் எழுதப்பட்ட கதைகளில் உள்ள பாத்திரங்கள் வரை கொண்டு புதிய கதைகளை எழுதியிருப்பதும் சுவாரஸ்யமானது.

குழந்தைகளுக்கான கதைகள்போல் இருக்கும் சில கதைகள் அனைவருக்குமான பல செய்திகளைக் கொண்டிருக்கிறது. வாசிப்பதற்கு சிரமமான திருகல் நடையில்லை. எளிமையான நடையில் அதேநேரம் ஒரு மாய உலகத்தில் பயணிக்க வைப்பதால் குழந்தைகளும் பெரியவர்களும் படிப்பதற்கு ஏற்ற புத்தகமிது.

நூறு புராணங்களின் வாசல் - முபீன் சாதிகா

வெளியீடு : நன்னூல் பதிப்பகம், மணலி, திருத்துறைப்பூண்டி

தொடர்பு எண் : 9943624956

பக்கங்கள் : 128

விலை : ரூ. 130

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism