Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இமானுவேல் சேகரன் கொலை தென்மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அருங்குளம், கீழத்தூவல் பகுதிகளில் பல உயிர்கள் பறிபோயின.

படிப்பறை

இமானுவேல் சேகரன் கொலை தென்மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அருங்குளம், கீழத்தூவல் பகுதிகளில் பல உயிர்கள் பறிபோயின.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் தங்க நகைகள் அணியக்கூடாது; பூ வைக்கக்கூடாது; மஞ்சள் பூசக்கூடாது; குழந்தைகளைப் படிக்க அனுப்பக்கூடாது; மண்பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் தென்மாவட்டங்களில் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட காலத்தில் பிறந்து, அந்த அவலத்தை அகற்றக் களமாடியவர் இமானுவேல் சேகரன். பள்ளிக்காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, அம்பேத்கரின் அறிவுரையை ஏற்று ராணுவத்தில் இணைந்து, ஒரு கட்டத்தில் ஹவில்தார் பணியைத் துறந்து மக்கள் பணியாற்ற வந்து, படுகொலைக்கு உள்ளான இமானுவேல் சேகரனின் வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகப் பேசுகிறது இந்த நூல். இமானுவேல் சேகரனின் நண்பர்கள், உறவினர்கள், அவர் காலத்தில் வாழ்ந்தவர்களின் நேரடி அனுபவங்கள், சாட்சியங்களோடு இந்த நூலை எழுதியிருக்கிற தங்க.செங்கதிர், அரசு நடத்திய அமைதிக்கூட்டத்துக்கு இமானுவேல் சேகரன் செல்வதில் தொடங்கி படுகொலை வரை சம்பவங்களை வார்த்தைகளால் கோத்துக் காட்சிகளாக அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

படிப்பறை

‘ஒடுக்கப்பட்ட வகுப்பார் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி, தம் சொத்துகளையெல்லாம் விற்று காலம் முழுவதும் தம் மக்களுக்காகக் களத்தில் நின்று போராடிய இமானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டபிறகு அவர் குடும்பம் எதிர்கொண்ட துயரங்களையும் இந்த நூல் பேசுகிறது. தன் கணவன் மேல் தீரா அன்புகொண்ட மனைவி அமிர்தம் கிரேஸ் பலநாள் தன் கணவனின் கல்லறையிலேயே துவண்டு கிடந்த நிகழ்வுகளை வாசிக்கும்போது கண்கள் கசிகின்றன. முதல்வராக இருந்த காமராஜர், நான்கு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கிரேஸ் பட்ட சிரமம் அறிந்து, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கியதோடு, கிரேஸுக்கு என்றே ஒரு தொடக்கப்பள்ளியை ஆரம்பித்துப் பணி ஆணை வழங்கியதைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது.

இமானுவேல் சேகரன் கொலை தென்மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அருங்குளம், கீழத்தூவல் பகுதிகளில் பல உயிர்கள் பறிபோயின. அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. வழக்கு அங்குமிங்குமாகப் பயணித்தது. வழக்கறிஞர்கள் வழக்கிலிருந்து விலகினார்கள். இரண்டாண்டுகள் நடந்த வழக்கின் இறுதியில் மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இமானுவேல் சேகரனின் வாழ்க்கையைப் பேசும் போக்கில் தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் பதிவு செய்யும் இந்தநூல், சாதிய அமைப்புகள் மேலெழுந்துவரும் சூழலில் முக்கியமானது.

ஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன் - தங்க.செங்கதிர்

வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,

எண் : 9, பிளாட் எண்: 1080 A,

ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை-600078

அலைபேசி: 99404 46650

பக்கங்கள்: 112

விலை : ரூ.130