Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

பாரதேந்தர், தன் கவிதைகளில் உலகெங்கும் இருக்கும் கலைகளை அறிந்திடல் வேண்டும் என்னும் பொருள்படும்படியாக எழுதினார்

படிப்பறை

பாரதேந்தர், தன் கவிதைகளில் உலகெங்கும் இருக்கும் கலைகளை அறிந்திடல் வேண்டும் என்னும் பொருள்படும்படியாக எழுதினார்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

பாரதியார் குறித்த நூல்களின் பட்டியல் தமிழ்ச்சூழலில் மூச்சு முட்டும் அளவுக்குப் பெரியது. இவற்றைக் கடந்தும் பல செய்திகள் அவர் வாழ்வில் சொல்லப்படாமலும் எழுதப்படாமலும் இருக்கின்றன. அவையே பாரதி ஆய்வாளர்களை இன்றளவும் கொண்டு செலுத்துகின்றன. அப்படி சமீபத்தில் வெளியான பாரதியியல் நூல்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது, கி.சுப்பிரமணியனின் ‘நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் - மகாகவி பாரதியாருக்கு உதவியவர்கள்' என்னும் புத்தகம்.

குவளைக்கண்ணன், சுரேந்திர ஆர்யா, டாக்டர் நஞ்சுண்டராவ் போன்ற பல நண்பர்கள் குறித்த செய்திகள் பரவலாக அறியப்பட்டவை என்றபோதும், லால்சந்த், மண்டயம் ஸ்ரீநிவாச ஆச்சார்யா, வெல்லச்சுச் செட்டியார் போன்ற சில நண்பர்கள் குறித்த செய்திகள் பலரும் அறிந்திடாதவை. அப்படிப்பட்ட நபர்கள் குறித்த சுருக்கமான அறிமுகமும் அவர்கள் பாரதியின் வாழ்வோடு கொண்ட தொடர்பும் கி.சுப்பிரமணியனின் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாரதி அடைந்திருந்த ஞானம் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது, அவர் கருத்தியல் தாக்கம் கொண்ட இடம் எது என்பதற்கான பல விடைகள் அவற்றில் பொதிந்திருக்கும். அதற்கு உதாரணம் காசியில் வசித்த லால்சந்த் என்ற நண்பர், பாரதிக்கு பாரதேந்த ஹரிச்சந்திரர் என்னும் இந்திக் கவிஞரின் நூல்களை அறிமுகப்படுத்திய நிகழ்வு. பாரதேந்தர் வீரம் செறிந்த பிரபோதினி என்னும் கவிதைகளைப் படைத்தவர். லால்சந்த் சொல்லிச் சொல்லி பாரதிக்கு பிரபோதினி மேல் ஓர் ஈடுபாடு ஏற்பட்டது. பிரபோதினி முழுமையையும் அவர் கற்றார். அது பின்னாளில் பல இடங்களில் பாரதியின் படைப்புகளில் பிரதிபலித்தது.

படிப்பறை

பாரதேந்தர், தன் கவிதைகளில் உலகெங்கும் இருக்கும் கலைகளை அறிந்திடல் வேண்டும் என்னும் பொருள்படும்படியாக எழுதினார். அதுவே பின்னாளில் பாரதியின் கவிதைகளில், ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!' என வெளிப்பட்டது. இப்படிப் பல சுவையான ஆய்வுக்குரிய தகவல்கள் இந்த நூலில் கிடைக்கின்றன. பாரதிக்கு நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் இருந்த 28 பேர் குறித்த தகவல்கள் சுருக்கமாக இந்த நூலில் கிடைக்கின்றன. பாரதியியலில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்தச் சிறிய நூலில் இருந்து, பல புதிய ஆய்வுகள் விரிவடைய எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்...

கி. சுப்பிரமணியன்

ஆதிரைப் பதிப்பகம்

18/36, பழனியப்பா நகர், ராமநாதபுரம்,
கோவை - 45

9940702825

பக்கங்கள்: 140

விலை: ரூ. 100

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism