Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தென்காசியில் இருந்து பாபநாசத்துக்குத் திரும்பும் சாலையின் வடப்பக்கம் இருக்கிற ஒரு கிராமம்.

படிப்பறை

தென்காசியில் இருந்து பாபநாசத்துக்குத் திரும்பும் சாலையின் வடப்பக்கம் இருக்கிற ஒரு கிராமம்.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தென்காசியில் இருந்து பாபநாசத்துக்குத் திரும்பும் சாலையின் வடப்பக்கம் இருக்கிற ஒரு கிராமம். கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் நிறைந்திருக்கிற இந்தக் கிராமத்தில் மக்களின் மனம் கவர்ந்த பேச்சாளனாக இருக்கிற மாடசாமியைச் சுற்றி நகர்கிறது இந்த நாவல்.

நெற்றியின் முன்பகுதியில் சரிந்துவிழும் முடியும் அடர்ந்த மீசையும் தெற்றுப்பல்லுமாக, புதுவேட்டி சட்டையில் கறுப்பு நிறத்துண்டை வல்லோட்டாகப் போட்டுக்கொண்டு கம்யூனிஸ்ட் பேச்சாளராக நமக்கு அறிமுகமாகும் மாடசாமி, காலத்துரத்தலில் தி.மு.க-வுக்குப் போய், பிறகு ம.தி.மு.க-வுக்கு மாறுகிறார். பாராட்டு வார்த்தைகளில் லயித்து கெத்தாக மனம் போகும் திசையில் வாழ்கிற மாடசாமியின் வாழ்க்கை சிரிச்சான் மனைவியிடமும் உமாதேவியிடமும் வீழும்போது திசை மாறுகிறது. இறுதியில் அரசியலே வேண்டாம் என்று செக்யூரிட்டி வேலைக்குப் போகிறார். மொத்த மரியாதையையும் இழந்து குடித்துவிட்டு சாலையில் விழுந்துகிடக்கும் அளவுக்குக் காலம் மாடசாமியைப் பந்தாடுகிறது.

மாடசாமியின் வாழ்க்கையோடு இணைந்து, தென் தமிழகத்தின் அரசியல் களச்சூழலையும் அந்த மனிதர்களின் வெள்ளந்தி வாழ்க்கையையும் அழகிய தமிழில் பதிவு செய்திருக்கிறார் ஏக்நாத்.

படிப்பறை

மாடசாமி மேல் பேரன்புகொண்ட ஒழக்கு, தன் கணவனின் பொறுப்பற்ற தன்மையை ஜீரணித்துக்கொண்டு பீடி சுற்றப்போய் நுரையீரல் நோய்க்கு ஆட்பட்டு இறந்துபோகிற வேணி, மாடசாமியின் எல்லாத் தவறுகளையும் புறந்தள்ளிவிட்டு அவனை நேசிக்கும் கீரைத்தோட்ட ஆச்சி, தன் தோட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதை சகித்துக்கொண்டே மாடசாமியிடம் அன்பு பாராட்டுகிற ஆறுமுகம், இனம்புரியாத அன்பைப் புன்னகையில் வெளிப்படுத்தும் ஆனந்தவள்ளி டீச்சர் என நாவலில் உலவும் அத்தனை பாத்திரங்களும் மனசுக்கு நெருக்கமாக இருக்கின்றன.

எங்கோ இருந்து கட்சித்தலைமை எடுக்கும் கூட்டணி முடிவுகள் எப்படியெல்லாம் கிராமத்து இணக்கத்தைக் கூறு போடுகின்றன என்ற யதார்த்தத்தைக் கதையின் போக்கில் முன்வைக்கும் ஏக்நாத், தென் தமிழக மக்களின் பிழைப்புத்தலமான மும்பை செம்பூரின் வாழ்க்கைப்பாடுகளையும் பதிவு செய்திருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலை, சுனாமி எனக் காலக்குறியீடுகளை மிகச்சரியாகப் பொருத்தி கைபிடித்துத் தென்தமிழக கிராமத்துக்குள் அழைத்துச் செல்லும் இந்த ‘அவயம்’, குறிப்பிடத்தகுந்த வட்டார மொழி நாவல்!

அவயம் - ஏக்நாத்

வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், எண்-9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை- 600078

தொடர்பு எண்: 9940446650

பக்கங்கள்: 288

விலை: ரூ. 320

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism