Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

திருமணம் தாண்டிய உறவுகள், அதன் நீட்சியான உளவியல் சிக்கல்கள் குறித்தும் இந்த நூல் நிறைய பேசுகிறது.

படிப்பறை

திருமணம் தாண்டிய உறவுகள், அதன் நீட்சியான உளவியல் சிக்கல்கள் குறித்தும் இந்த நூல் நிறைய பேசுகிறது.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

பேசாப்பொருளாக இருக்கும் காமத்தை ஒரு பெண் எதிர்பார்ப்பிலிருந்தும் உணர்விலிருந்தும் பேசும் நூல் லதாவின் ‘கழிவறை இருக்கை.’ இருபாலினத்துக்கும் காமம் குறித்து வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஆக்கிரமிப்பாளர்களாக மாறும் ஆண்கள் பெண்களைக் கழிவறை இருக்கைகளாகக் கருதிக் கழிவுகளை வெளியேற்றுகிறார்கள். பரிபூரணமாக இருக்கவேண்டிய காமம், பெண்கள்மீதான ஆதிக்கமாகவே நிறைவுறுகிறது. இதை மிகவும் வெளிப்படையாக நூலெங்கும் விவாதிக்கிறார் லதா.

உணவு, உடை, இருப்பிடம்போல காமமும் வாழ்தலுக்கான தேவை. அதுகுறித்துப் பேசவும் விவாதிக்கவும் நிறைய இருக்கிறது. உலக இயக்கத்தின் மைய இழையாக அதுவே இருக்கிறது. ஆனால், இங்கே அதைப்பற்றிப் பேசுவதே அருவருப்பானது என்ற எண்ணத்தை விதைத்துவிட்டார்கள். குறிப்பாக பெண்கள் அதுபற்றிப் பேசவே கூடாது என்பதுதான் நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிற கற்பிதம். மிக விரிவாக எழுதப்பட்ட 32 கட்டுரைகளின் வழி, அந்தக் கற்பிதத்தை உடைத்துச் சுக்குநூறாக்குகிறார் இவர்.

படிப்பறை

காமம் குறித்த நூலென்றாலும் வார்த்தைகளை அவ்வளவு நயமாகக் கையாள்கிறார் லதா. ‘குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையில் பெற்றோர்களின் பங்கு' கட்டுரையில் பாலியல் கல்வி குறித்த அவசியத்தை முன்வைக்கிறார். குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறார். ‘பெண்ணும் சமூகமும்' என்ற கட்டுரையில், பெண்களை இந்தச் சமூகம் எப்படிப் பாலியல் பிண்டமாகப் பார்க்கிறது என்று விவரிக்கிறார். ‘கழிவறை இருக்கை' கட்டுரை, இந்த நூலின் உயிர்ப்பைச் சுமந்துகொண்டிருக்கிறது. ஆண்கள் காமத்தை எதிர்கொள்ளும் விதத்தில் தொடங்கி பெண்களின் உணர்வுகளை எப்படியெல்லாம் காயப்படுத்துகிறார்கள் என்ற விவரிப்பாக நீள்கிறது இந்தக் கட்டுரை.

திருமணம் தாண்டிய உறவுகள், அதன் நீட்சியான உளவியல் சிக்கல்கள் குறித்தும் இந்த நூல் நிறைய பேசுகிறது. ஆணாதிக்க மனநிலையையும் பெண்களின் பழைமைவாத நம்பிக்கைகளையும் முன்னே நிறுத்தி மிகப்பெரும் வாழ்வியல் முரணை விவாதிக்கிறது இந்த நூல். ‘The Toilet Seat' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்து பெரிதும் கவனம் ஈர்த்த இந்த நூலை எல்லோரும் வாசிக்க வேண்டும்; குறிப்பாக ஆண்கள்!

கழிவறை இருக்கை

லதா

வெளியீடு : நோராப் இம்ப்ரிண்ட்ஸ், எண் 19/5, நவரத்தினம், ருக்மணி சாலை, பெசன்ட் நகர், சென்னை-600090

தொடர்பு எண்: 9790919982

பக்கங்கள்: 224

விலை : ரூ. 225

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism