Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

கோவையிலிருந்து அரக்கோணம் வந்து ரெய்ச்சூர் மெயில் வண்டியில் தன் பயணத்தைத் தொடங்குகிறார் நரசிம்மலு.

படிப்பறை

கோவையிலிருந்து அரக்கோணம் வந்து ரெய்ச்சூர் மெயில் வண்டியில் தன் பயணத்தைத் தொடங்குகிறார் நரசிம்மலு.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

கோவையைச் சேர்ந்த நரசிம்மலு நாயுடுவை ‘தமிழ்ப்பயண இலக்கியத்தின் தந்தை' என்று குறிப்பிடுகிறார்கள். 1885-ல் பம்பாயிலும் 1886-ல் கல்கத்தாவிலும் நடந்த இந்துஜன சமூக மகாசபை மற்றும் காங்கிரஸ் சபைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காகச் சென்ற வழக்கறிஞரான நரசிம்மலு, அந்தப் பயணம் தந்த அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார். வறட்சியான பயணக்குறிப்புகள் போலின்றி, தான் கண்ட காட்சிகளின் பின்புலம் ஆராய்ந்து மிகவும் சுவாரஸ்யமான மொழியில் எழுதப்பட்ட அந்த நூலைத் தேடியெடுத்து மீண்டும் பதிப்பித்திருக்கிறார் ந.முருகேசப்பாண்டியன்.

மொழி, இனம், மதம் கடந்து தேசத்தை இணைக்கும் ரயில் பயணம் தந்த அனுபவத்தில் ஆரம்பித்து, இந்தியாவின் வடபகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்குப் பயணித்து தட்பவெப்பம் முதல் உணவுகள் வரை அனைத்தையும் சுவையுறப் பதிவு செய்திருக்கிறார் நரசிம்மலு. தன் பயணத்தை திவ்விய தேச யாத்திரை என்று குறிப்பிடுவது ஏன் என்று விளக்கும் நரசிம்மலுவின் முன்னுரையே அவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கச் சற்று கடுமையாகத் தெரிகிற மொழி, வாசிக்கத் தொடங்கியதும் இணக்கமாகிவிடுகிறது.

படிப்பறை

வடநாட்டிற்குப் பயணம் செல்பவர்களுக்கு நரசிம்மலு தரும் ‘விசேஷக் குறிப்புகள்’ ஒவ்வொன்றும் ‘வழிகாட்டுதல்’ என்கிற நோக்கத்தோடு சேர்த்து அந்தக்கால இந்தியாவையும் அதன் பழக்க வழக்கங்களையும் நமக்குக் காட்டுகின்றன. புகைவண்டி ஸ்டேஷன்களில் இனாம் கொடுப்பதன் சாதக பாதகங்களை விவரிப்பது அதன் ஒருசோற்றுப் பதம்.

கோவையிலிருந்து அரக்கோணம் வந்து ரெய்ச்சூர் மெயில் வண்டியில் தன் பயணத்தைத் தொடங்குகிறார் நரசிம்மலு. ரெய்ச்சூர், மன்மார், ஷாக்பூர், ஜப்பல்பூர் வழியே அலஹாபாத்தை அடையும் அவரின் பயணம் அங்கே ஒரு சின்ன இளைப்பாறல் கொள்கிறது. அந்நகரின் லட்சணம், உணவு, பூர்வகதைகள், பிரயாகையில் நடக்கும் பேய் ஓட்டும் வழிபாடு, கங்கை - யமுனை சங்கமம் என வரலாற்றையும் சமகாலத்தையும் இணைத்து அவர் சொல்லிச்செல்கிற செய்திகள் தாத்தாவின் கரம்பிடித்துக்கொண்டே பயணிக்கும் உணர்வைத் தருகின்றன. காசி, கயா, ஹிமாச்சல மலை, வடமதுரை, பிருந்தாவனம், டெல்லி, லாகூர், கோதாவரி நதியென அவரது பயணம் விரிந்துகொண்டே போகிறது.

வெறும் பயண இலக்கிய நூலாக மட்டுமின்றி, பதினெட்டாம் நூற்றாண்டு வடஇந்தியாவின் வாழ்க்கைமுறையைக் குறுக்குவெட்டாக தேர்ந்தவொரு எழுத்தாளனின் பார்வையில் முன்வைக்கிறது இந்த நூல்.

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் - சே.ப.நரசிம்மலு நாயுடு

வெளியீடு :
டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர் மேற்கு, சென்னை-600078

தொடர்பு எண் : 8754507070

பக்கங்கள்: 536

விலை: ரூ.600