Published:Updated:

படிப்பறை

ஷோலே நீறு பூத்த நெருப்பு
பிரீமியம் ஸ்டோரி
ஷோலே நீறு பூத்த நெருப்பு

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே மூன்று காதல்கள் உருவாகின. அமிதாப் - ஜெயா பாதுரி காதல், கல்யாணம் வரைக்கும் வந்திருக்கிறது

படிப்பறை

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே மூன்று காதல்கள் உருவாகின. அமிதாப் - ஜெயா பாதுரி காதல், கல்யாணம் வரைக்கும் வந்திருக்கிறது

Published:Updated:
ஷோலே நீறு பூத்த நெருப்பு
பிரீமியம் ஸ்டோரி
ஷோலே நீறு பூத்த நெருப்பு

இந்திய சினிமா வரலாற்றில் சில படங்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. 1975-ல் ஷோலே படம் ஏற்படுத்திய பரபரப்பு, உடைத்தெறிந்த ரெக்கார்டுகள் பல. மொழி புரியாதபோதும் தமிழகத் திரையரங்குகளில் தறிகெட்டு ஓடிய படங்களில் ஷோலேக்கும் இடம் உண்டு. சினிமா நம்மீது ஏற்படுத்தும் தாக்குதல் கொஞ்சநஞ்சமல்ல. `குங்குமம்' படத்தில் சிவாஜியின் பெயர் ஷங்கர். அப்படத்தைப் பார்த்த அம்மா ஒருவர் தனக்கு மகன் பிறந்தால் ஷங்கர் எனப் பெயர் வைப்பேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம்; அந்த மகன்தான் இயக்குநர் `ஷங்கர்.'

ஒவ்வொரு வெற்றிபெற்ற சினிமாவிற்குப் பின்னாலும் நாம் அறியாத கதையிருக்கிறது. சுவாரஸ்யமான நிஜக் கதைகளை எடுத்தாண்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜியா. இன்றைக்கும் இந்தியாவின் முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷோலேவின் அத்தனை விவரங்களும் பகிரப்படுகின்றன. ஷோலே எப்படி பெரும் திரைப்படமாக உருவானது எனவும், அதில் நடித்த தர்மேந்திரா, அமிதாப், ஜெயா பாதுரி, ஹேமா மாலினி, அம்ஜத் கான் போன்றவர்கள் எப்படி அடுத்த கட்டத்திற்குப் போனார்கள் என்றும், அதில் எவ்வாறு புதிய பாணி சினிமா வழிமொழியப்படுகிறது என்றும் விவரித்திருக்கிறார்.

படிப்பறை

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே மூன்று காதல்கள் உருவாகின. அமிதாப் - ஜெயா பாதுரி காதல், கல்யாணம் வரைக்கும் வந்திருக்கிறது. புகழ்பெற்ற கதையாசிரியர்களான சலீம் - ஜாவேத் மத நல்லிணக்கத்தை இந்தப் படத்தில் அவ்வளவு நளினமாக கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள். இந்தப் படத்தில் தன்னை நடிக்க வைப்பதற்கான தயக்கங்கள் இருந்தபோது அதையறிகிறார் அமிதாப். உடன் தர்மேந்திராவைச் சந்தித்துத் தன் நிலைமையை எடுத்துரைக்க, தர்மேந்திரா அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இந்த நன்றியறிதலை மேடைகளில் இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார் அமிதாப்.

இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் திரைக்கதை புதிதாக இருக்கிறது, நுணுக்கங்களும் புதிதாக இருக்கிறது என்று பாலு மகேந்திரா கூறியிருந்தார். வன்முறையைக்கூட கண்கள் கூசாமல் காட்டிய படம் ஷோலேதான் என்று இயக்குநர் மகேந்திரன் பாராட்டியிருந்தார். ஹாலிவுட்டைப் போல மிரட்டலாக ரயில் சண்டைகள் எடுக்கப்பட்ட விதம், `ஏ தோஸ்தி’ பாடலை எடுக்க 21 நாள்கள் ஆனது என்று படத்தைப் பற்றி மட்டுமல்லாமல், எமர்ஜென்சி காலம், சென்சார் பிரச்னைகள் என அன்றைய அரசியல் சூழலையும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகம் சினிமாவையும் அதன் பாதிப்பையும் நட்சத்திரங்களின் வாழ்க்கையையும் பேசுகிறது.

இதுபோல் ஒவ்வொரு முக்கிய சினிமாவின் பின்கதைகளையும் எழுதிப் பார்க்கலாம். அதற்கு இந்தப் புத்தகம் நல்ல ஆரம்பம்.

ஷோலே நீறு பூத்த நெருப்பு

- ஜியா

வெளியீடு : மர்யம் பதிப்பகம்

36, தாக்கர் தெரு, புரசைவாக்கம்

சென்னை - 84

பக்கங்கள்: 204

விலை ரூ.: 180

தொடர்புக்கு: 98409 07358