Published:Updated:

சூப்பர் மேனேஜராக உங்களை முன்னேற்றும் சூட்சுமங்கள்! - தலைமைத் திறனுக்கான பாடங்கள்!

தலைமைத் திறனுக்கான பாடங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தலைமைத் திறனுக்கான பாடங்கள்!

MBA BOOKS

ரு நிர்வாகியாக (மேனேஜராக) நிர்வாக அடுக்குகளில் (hierarchy) வேகமாக முன்னேறும் தகுதிகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்குமே உண்டு. அந்த தலைமைப் பண்பைப் பெறுவது எப்படி என்பதைச் சொல்கிறது பீட்டர் விட்டிங்க்டன் (Peter Whittington) எழுதிய லீடர்ஷிப் ஸ்கீல்ச் ஃபொர் த பிகினர் ( Leadership Skills for the Beginner) என்கிற புத்தகம்.

தலைவருக்கு நேர்மை முக்கியம்...

‘‘லீடர்ஷிப் (தலைமைப் பண்பு) மற்றும் டீம் வொர்க் (குழு மனப்பான்மை) என்ற இரண்டும் எங்கே ஆரம்பிக்கிறது? இந்த இரண்டுமே உங்களுக்குள்ளேயே இருந்து உருவாகும் விஷயம்தான். சிலருக்கு இது இயல்பாகவே இலகுவாக வந்துவிடுகிறது. சிலருக்கு இது குறித்த விளக்கம் மற்றும் பயிற்சி எனப் பலவும் தேவைப்படுகிறது. இதற்கெல்லாம் அடிநாதமாக இருப்பது நேர்மை. நேர்மையை அடிப்படையாகக் கொண்ட நபராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் உங்கள் பணி தொடர்பான பயணத்தில் எப்போதுமே நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நேர்மையானவராக இருப்பீர்கள். உங்களுக்கு நீங்களே நேர்மையாகவும் அறம் தவறாமலும் (honesty and integrity) நீங்கள் நடந்து கொள்ள ஆரம்பிக்கும் தருணத் திலேயே தலைமையேற்கும் தகுதியை நீங்கள் பெற்றுவிடுகிறீர்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

சூப்பர் மேனேஜராக உங்களை முன்னேற்றும் சூட்சுமங்கள்! - தலைமைத் திறனுக்கான பாடங்கள்!

நேர்மை என்பதை முதல் நாளிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டியது மிகமிக அவசியம். பணியிடத்தில் எவ்வளவு பேர் பொய், பித்தலாட்டங்களில் சகஜமாகப் ஈடுபடுகின்றனர் என்பதைப் பார்த்தால், உங்களுக்கு எரிச்சல்தான் வரும். அது மட்டுமா, அவர்களுக்கு அலுவலகத்தில் என்ன மாதிரியான மரியாதை கிடைக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதிலிருந்தே நீங்கள் தலைமைப் பண்பு என்பதற்கான தேவைகளை சுலபத்தில் புரிந்துகொள்ளலாம்.

மேலே சொன்ன குணாதிசியங் களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதும் மிகமிக அவசியமாகும். இப்படித் தொடர்ச்சியாக இந்தக் குணாதிசியங்களைக் கொண்டு அதன் அடிப்படையில் நடந்து கொண்டிருந்தால் மட்டுமே உங்களுடன் இருப்பவர்கள் நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்கள் நம்மைத் தலைவராக ஏற்று நாம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், முதலில் நாம் நம்மை சரிசெய்துகொள்ள வேண்டும். முதலில் நம்மிடம் இருக்கும் குறை நிறைகளை ஆராய்ந்து அவற்றைச் சரிசெய்துகொண்ட பின்னரே நம்மால் தலைமையேற்றல் என்ற நிலையை நோக்கி நகர முடியும்.

அகங்காரம் தலைவருக்கு அழகல்ல...

நாம் அனைவருமே பிறவியிலேயே கொஞ்சம் அகங்காரத்தைக் கொண்ட வர்களாகவே பிறக்கிறோம். நாம் வளரவளர அவ்வப்போது சில சாதனைகளைச் செய்கிறோம். அந்தச் சாதனைகளால் நாம் பெருமைகொள்கிறோம். இந்த விதப் பெருமைகள் நம்முடைய அகங் காரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வளரச் செய்கிறது. இதில் பிரச்னை என்னவென்றால், அகங்காரம் என்பது ஓரளவுக்குமேல் போகும் போது அது நம்முடைய முடிவெடுக்கும் நடவடிக்கைக்குள் (திறன்) நுழைய ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில்தான் தவறான முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகிறது. தலைமைப் பண்பு என்பது மற்றவர்களைத் தைரியத்துடன் முடுவுகளை எடுக்கச் சொல்லும் நிலையைக் கொண்டது. இப்படி உடனிருப்பவர்களை முடிவெடுக்க ஊக்குவிக்கும் நாமே அகங்காரத்தில் வசப்பட்டு முடிவு களை எடுப்பவர்களாக இருந்தால் என்னவாகும்? நம்மைப் பின்பற்று பவர்களும் சுலபத்தில் அதே போன்று அவரவர்களுடைய அகங்காரத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள் இல்லையா? அதனாலேயே ஒரு லீடராக நாம் நம்முடைய அகங் காரத்தின் அளவைக் கண்டறிந்து அதைக் கட்டுக்குள் வைக்க முயல வேண்டும். அப்படிச் செய்யும்போது மட்டுமே நாம் எடுக்கும் முடிவுகள் நம்முன்னே இருக்கும் செய்திகள் மற்றும் டேட்டாக்களைக் கொண்டு எடுக்கப்படுவதாக இருக்கும். அது போன்று எடுக்கப்படும் முடிவுகளே மிகச் சரியானதாகவும் இருக்கும்.

சூப்பர் மேனேஜராக உங்களை முன்னேற்றும் சூட்சுமங்கள்! - தலைமைத் திறனுக்கான பாடங்கள்!

திட்டங்களை விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்...

ஒரு லீடராக என்ன செய்ய நினைக் கிறோம் எதை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்பதைத் தெளிவு படுத்திக் கூறுவது மிகமிக அவசியம். உங்கள் தலைமையை ஏற்று, உங்களைத் தொடரும் நபர்களுக்கு நீங்கள் எதை (எந்த மாதிரியான பர்ஃபாமன்ஸ்/சப்போர்ட்/செயல்பாடு போன்றவை) அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெளிவாகப் புரிந்தால் மட்டுமே அவர்களால் சிறப்பனதொரு பங்களிப் பைத் தரமுடியும். எனவே, என்ன மாதிரியான சிறப்பான திட்டங் களை ஒரு தலைவனாக உங்களால் தீட்ட முடிந்தாலுமே அதை விளக்கமாக மற்றவர்களுக்கு புரியும்படி சொல்லும் கலையை வளர்த்துக்கொண்டால் மட்டுமே சிறந்ததொரு தலைவனாக உங்களால் திகழ முடியும்.

அலுவலகத்தில் பணியாற்றும் போது உண்மை, நேர்மை, அறம் தவறாமை, யாரையும் ஏமாற்ற நினைக்காத குணத்துடன் செயல்படுவதே தலைமைப் பண்புக்குத் தேவையான அடிப்படை குணங்கள்!

வெற்றிக்கு வழிவகுக்கும் குழு மனப்பான்மை...

குழுவாகச் செயல்படும் திறனே நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும். ஒரு குழு மிகச் சிறப்பான செயல்பாடு கொண்டதாக எப்போது மாறும் என்றால், அனைவரும் ஒரு மனதாக ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்படும்போது தான். சிறப்பான செயல்பாட்டைக் கொண்ட குழுக்களின் செயல்திறன் என்பது அதன் உறுப்பினர்கள் கொண்டிருக்கும் தனித்தனியான செயல்திறனைக் கூட்டினால் வரும் செயல்திறனைக் காட்டிலும் மிக அதிக அளவிலான செயல்திறனைக் கொண்டிருக்கும்.

குழு என்பது எதற்காக ஊக்குவிக்கப்படுகிறது என்றால், நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் ஒவ்வொருவருமே எல்லா விஷயங்களிலும் சிறப் பான திறமையைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், நிறுவனத்தின் வெற்றிகரமான செயல்பாட்டுக்குப் பல்வேறு திறமைகள் ஒருங்கே வேண்டி யிருக்கும். இந்தச்சூழலை எதிர்கொள்ளத்தான் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

சிறப்பான தகவல் பரிமாற்றம்...

குழுவில் இருக்கும் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்த திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி ஒவ்வொரு வரும் ஒரு சிறப்பான திறனைக் கொண்டிருக்கும்போது அனைவரும் ஒருமனதாக இணைந்து செயல்பட ஆரம்பித்தால், வெற்றி என்பது மிகவும் சுலபமான ஒன்றாகிவிடும்.

நிறுவனத்தின் ஆரம்ப நிலை லீடராக நீங்கள் இருக்கும்போது உங்களுடைய குழு உறுப்பினர்கள் சாதாரணமான பணியாளர் களாக இருப்பார்கள். உங்கள் பதவி உயர்ந்து உயர்ந்து உச்சிக்குச் செல்லும்போது, உங்களுடைய குழுவின் உறுப்பினர்கள் அனைவருமே ஒரு குழுவின் லீடராகவும் தலைமைப் பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

லீடர்ஷிப் என்பது வேலைவாங்கும் பணியல்ல. நிறுவனத்தின் கொள்கை, நோக்கம், எதிர்பார்ப்பு போன்றவற்றை விளக்கி ஒரு முன்னுதாரணமாக இருந்து பணியாளர்களை ஊக்குவிப்பதே லீடர்ஷிப்பாகும்.

இந்தக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் தீர்க்கமானதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும். மேலும், இந்தவித உயர்மட்டக்குழுவில் எடுக்கப் பட்ட அந்த முடிவுகள் அது எடுக்கப்பட்டதற்கான அடிப்படை நோக்கம் என்பது சிறிதளவும் மாறாதபடி சென்றடைய வேண்டும் என்பதால் இந்த உயர்மட்டக் குழுவினருக்கு இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் (Communication) என்பது மிகவும் தெளிவானதாக இருக்க வேண்டும் என்பது மிகமிக அவசியம்.

லீடர்ஷிப் திறன் என்பது...

இறுதியாக, ‘‘எல்லா மேனேஜர் களும் லீடர்ஷிப் திறனைக் கொண்டிருப்பார்கள் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். நிர்வாகம் என்பது பணம், பொருள் மற்றும் மனித வளத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடையும்படிச் செயல்படுத்துவதாகும். நிர்வாகம் (நிர்வாகி) என்பது இதைக் கொண்டு செய்யுங்கள் என்று சொல்லி வேலை வாங்கும் பணியாகும்.

லீடர்ஷிப் என்பது வேலைவாங்கும் பணியல்ல. நிறுவனத்தின் கொள்கை, நோக்கம், எதிர்பார்ப்பு போன்றவற்றை விளக்கி ஒரு முன்னுதாரணமாக இருந்து பணியாளர்களை ஊக்குவிப்பதே லீடர்ஷிப்பாகும்.

சில சமயங்களில் மேனேஜருக்கும் லீடருக்கும் உள்ள வித்தியாசம் மிக மிகக் குறைவாகக் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு இருக்கும்.

ஒரு லீடராக நல்ல நிர்வாகம், நல்ல வழிநடத்துதல், நல்ல தலைமை என்ற மூன்று நிலைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம். தன்னை ஒரு லீடராக நீங்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

மாற்றங்களைக் கொண்டு வருவது, மனிதர்கள் திறனை மேம்படுத்தி வளர்த்தெடுப்பது, நம்மை நாமே வழிநடத்திச்செல்வது , எந்த விஷயத்திலும் தீர்க்க தரிசனத்தைப் பெற முயல்வது போன்றவற்றை விளக்கமாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை எம்.பி.ஏ படிக்கும் மாணவர்களாக மட்டுமே நிர்வாகத் துறையில் சிறந்து விளக்க நினைக்கும் அனைவரும் அவசியம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்

எந்தத் தகவலை யார் மூலம் சொல்ல வைப்பது?

ரு குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல் பரிமாற்றத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். எனவே, எந்த விதமான செய்தியை யாரிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமோ, அதற்கேற்ற திறன் கொண்டிருக்கும் நபர்களை அந்தத் இடத்தில் சரியாக உபயோகித்துக்கொள்ள தலைமைக்குத் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

சரியாகச் சொல்லுதல், புரிந்துகொள்ளும்படி சொல்லப்படு கிறதா என்பதைச் சரிபார்த்தல், பிறர் கூறுவதை முழுமனதாகச் செவிகொடுத்துக் கேட்டல் என்ற மூன்றுமே தகவல் பரிமாற்றம் என்பதில் முக்கியமான அங்கங்களாகும்.

பிட்ஸ்

ம் நாட்டில் 2019 நவம்பரில் 1.22 லட்சம் டன் இறக்குமதி ஆன பாமாயில், கடந்த நவம்பரில் வெறும் 10 ஆயிரம் டன் மட்டுமே இறக்குமதி ஆகியிருக் கிறது.