Published:Updated:

கவிதைகள்

ஐந்து ருபாய் மதிப்புள்ள பொருள்கள் பத்து ரூபாய் என்றாலும்

பிரீமியம் ஸ்டோரி

சிறப்புப் பரிசு தவா

பசி

மீதமிருக்கும்

உணவின் அளவே

தன் பசியை

கொண்டவள்

அம்மா!

- பா.ரமணி இளங்கோ, சேலம்-4

******

பரிசு ரூ.300

அம்மா...

ஐந்து ருபாய் மதிப்புள்ள

பொருள்கள்

பத்து ரூபாய் என்றாலும்

வாங்கத் தவறுவதில்லை...

நான்,

அம்மாவைப் போலவே

இருக்கும் பெண்களிடம்!

- @ மு.ரினோஜ் முபாரக்

*****

பரிசு ரூ.300

ஆசை

மணமாகி

மறுவீடு வந்த மருமகளுக்கு

மழையில் நனைவது

மிகவும் பிடிக்குமென்ற ஆசையை

மறுதலிக்கிறார் மாமியார்.

இப்போதெல்லாம்

மாடியில் காயப்போட்ட

துணிகளை

மழை வந்த பிறகே

எடுக்கச் செல்கிறாள்

மருமகள்.

- எம்.கலையரசி, சேலம்-7

vikatan
vikatan

பரிசு ரூ.300

மீள்...

பத்தாவது படிக்கையில்

பாட்டி வீடு போகையில்

கேட்பாரற்றுக் கிடந்ததை

உதாசீனப்படுத்திப் பார்த்த

பட்டணத்து வனிதாமணி...

கல்லூரி முடித்து

எம்என்சி வேலை கிடைத்து

கல்யாணமும் ஆனது...

இன்று அமேசானில்

ஆர்டர் பண்ணி வாங்கினாள்

அம்மிக்கல்லையும்

ஆட்டுக்கல்லையும்

ஃபிட்னஸ் தெரபியென!

- லலிதா தங்கவேல், பெருந்துறை

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு