Published:Updated:

கவிதைகள்

கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

கவிதைகள்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

நட்பின் நொடிகள்

நண்பர்களோடு
குரைத்துப் பேசி
விரும்பியபடியெல்லாம்
விளையாடிக்களிக்கும்
தெரு நாயைக் காணும் ஆவலில்
இரும்பு வேலியின் இடைவெளி வழியாக எட்டி எட்டிப் பார்க்கிறது பங்களா நாய்
புஷ்டியாய் புசுபுசு ரோமத்தோடு
ஓராள் உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் பங்களா நாயை
தொட்டுப் பார்க்கும் ஆவலோடு கிட்டே வருகிறது தெரு நாய்
இரண்டும் சந்தித்து
பரஸ்பரம் வாலாட்டி
நட்பவிழ்க்கும்
நொடிகளில்
நெகிழ்ந்து
இறுக்கம் தளர்க்கிறது இரும்பு வேலி!

- தனம் கண்ணன், புதுக்கோட்டை

கவிதைகள்

கணக்கு

வரிசை தப்பிய புள்ளிக்கும்
கணக்கு தப்பிய நெளிவுக்குமாக
இருமுறை நீர் ஊற்றி அழித்த கோலத்தை
மீண்டும் சரியாகப் போட்டுவிட்டு நிமிர்ந்த என்னை
பார்த்துக்கொண்டிருந்தது,
குருதி சிவப்பு மலர்களுடனான
செம்பருத்திச் செடியின்
கிளைகளிரண்டை இணைக்கும்
நூல் வலையின் நடுவிலிருந்த
சிலந்தி!

அ.லோகமாதேவி, பொள்ளாச்சி

சுதந்திரம்

கடுகு தாளிக்கவும்

சமையலுக்கு காய் வாங்கவும்

கோலம் போடவும்

கொலு வைக்கவும்

அம்மாவின் செவிலியர்

சேவைக்கும் முழு சுதந்திரம் உனக்குண்டு...

பிள்ளைகள் படிப்பையும்

நீயே கவனித்துக்கொள்ளலாம்..

மிச்சமிருப்பது...

தங்க சிலுவையும் கொஞ்சம் ஆணிகளும் மாத்திரமே!

- வித்யானந்த், சென்னை-78

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism