கூட்டுப்புழுக்கள்
கூட்டுப்புழு எப்படி
பட்டாம்பூச்சியாகிறதென்று
தங்கைக்கு பாடம்
எடுத்துக்கொண்டிருந்தாள் அம்மா!
பட்டாம்பூச்சி கூட்டுப்புழு ஆன கதை
தெரியுமென்றேன் அவள் வாங்கிய கோப்பைகளைப் பார்த்துகொண்டே...
ரசம் கொதிப்பதாய்
சமையலறைக்கு எழுந்தாள்.
என் பார்வையை அனிச்சையாய் தவிர்த்து!
- வித்யா ஆனந்தகுமார், சென்னை-78
**********
அவள்
இன்று அவளுக்கு
சம்பள தினம்.
பள்ளி செல்லும் தம்பி
பருவ வயதில் தங்கை
ஈஸி சேரில் ஓர் ஓரமாய்
வயதான அப்பா.
வழக்கமாக எழுதும்
மாத மளிகைச் சாமான்கள்
பட்டியலை ஒவ்வொன்றாய்
எழுதத் தொடங்குகிறாள்.
முகப் பவுடர்,
குளியல் சோப்பு,
ஹேர் ஆயில்,
லிப்ஸ்டிக் என
அவளுக்கென பிரத்யேகமாக
எழுதுகிற பொருள்கள் பட்டியலில்
இந்த மாதம் முதல்
புதிதாகச் சேர்ந்திருக்கிறது
`ஹேர் டை!’
எஸ்.இந்திரா, மதுரை-16
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகவிதை படைப்பவரா நீங்கள்..?
உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com