Published:Updated:

கவிதைகள்

கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

கவிதைகள்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

கண்ணாடி

அப்பத்தாவை பார்க்கச் செல்லும்

ஒவ்வொரு முறையும்

புதிதாய் வாங்க வேண்டுமென

நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது

அப்பாவின் மங்கிய மூக்குக்கண்ணாடி...

முகமெங்கும் பூரிப்பாய் வரவேற்கும்

அம்மாவின் கிழிந்த ரவிக்கை

அடுத்த முறை சீலை ரவிக்கையுடன்

வா எனப் புன்னகைக்கும்

சுடிதாரில் தங்கையைப்

பார்க்க ஆசைப்பட்டபோது

பாத்திரத்தில் பட்சணமும்

பூ வைத்த புடவையுடன் ஆயிரத்து ஒரு ரூபாய்

தாய்வீட்டு சீரென தந்தை நீட்ட...

`வக்கத்த வீட்டின் தீபாவளி சீரா இது..?’

என வசையொலி

முதுகுக்குப் பின்னால்...

- ரா.ஹேமாவதி வெங்கடேசன், மேட்டூர் அணை

கவிதைகள்

முடிவு

கம்மல் வாங்குவதற்கு

கடையையே புரட்டிப்

போடுவேன்...

புடவை தேர்வு செய்ய

நான்கைந்து கடைகளாவது

ஏறி இறங்குவது வழக்கம்...

பொருத்தமான

நகைகளுக்கு அலைவது

பிடித்தமான பொழுதுபோக்கு...

படிப்பும் என் முடிவுபடி...

சம்பந்தம் மட்டும் பேசி

முடிவுசெய்து புகைப்படம் காட்டி

மாப்பிள்ளை என்றார்கள்...

இப்போதும்

திருமண துணிகள் தேர்வு செய்ய

எனக்கு முழு சுதந்திரம்

உண்டென்கிறார் அப்பா...

- வித்யா ஆனந்தகுமார், சென்னை-78

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா,

சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism