Published:Updated:

கவிதைகள்

கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

கவிதைகள்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

கம்பீரம்

தும்பிக்கையால் வேரோடு மரம் பெயர்க்கும்

மதம் பிடித்தால்

எதிரில் இருப்பவர்களைப் பந்தாடும்

காட்டுக்கே கம்பீரம் யானை

என்றெல்லாம் படித்த

நான்காம் வகுப்பு மலர்விழி

கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை

கோயிலில் பத்து ரூபாய் பார்த்ததும்

தலைதொட்டு ஆசீர்வதித்த

கணேசனை யானையென...

வித்யானந்த், சென்னை-78

கவிதைகள்

நிசப்த இரைச்சல்

இடைவிடாது குரைக்கும்

அந்தத் தெருநாயின்

சப்தத்தால்

ஆழ்நிலை உறக்கம்

கெட்டதாய்

புரண்டு படுக்கும்

அவ்வீட்டில்

யாருமே கவனிக்கவில்லை

தாத்தாவின்

நீண்ட நாளைய இருமல்

நின்றுபோன நிசப்தத்தை!

- ஜெய்பிரசாத், மதுரை-17

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism