
பி.வி.சிந்துவின் வெற்றிக்கான அலசல் அருமை. முதல் பத்தியில் உள்ள வெற்றியின் உஷ்ணம் என்னையும் தொற்றிக்கொண்டது. நேரில் விளையாட்டைக் கண்டுகளித்த உணர்வு.
வாராவாரம் இயக்குநர்கள் கடந்து வந்த பாதையை அழகாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறது ‘டைட்டில் கார்டு’. ‘கிடாரி’ இயக்குநரின் வாழ்வை சுருக்கமாய் அழகாய்ச் சொன்னதற்கு நன்றி.
- ராபா, காஞ்சி.
பி.வி.சிந்துவின் வெற்றிக்கான அலசல் அருமை. முதல் பத்தியில் உள்ள வெற்றியின் உஷ்ணம் என்னையும் தொற்றிக்கொண்டது. நேரில் விளையாட்டைக் கண்டுகளித்த உணர்வு. ஒவ்வொரு வார்த்தையும் வெற்றிக்கான உரத்தைத் தரும் வார்த்தை.கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்!
- பா.கவின். சென்னை 21
கல்வி, மருத்துவம், விவசாயம், போக்குவரத்து இவற்றையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு ஆட்சி நடத்த இங்கே அரசாங்கம் எதற்கு? மக்களாட்சிதான் எதற்கு? ஆட்சியையும் தனியாருக்கே தாரை வார்த்துவிட்டால் தேர்தல் ஆணையமும் பாராளுமன்றமும் சட்டசபைகளும், பஞ்சாயத்துகளும், அரசுப்பணியாளர்களும், இவற்றிற்கெல்லாம் செலவிடப்படும் பில்லியன் கணக்கில் பணமும் மிச்சமாகுமல்லவா?
- நவநீத கிருஷ்ணன், vikatan.com

வேலுமணி பேட்டியில் நிருபர் கிடுக்கிப்பிடியாய்க் கேள்விகளைக் கேட்டிருக் கிறார். அவரும் சளைக்காமல் பதில் சொல்லிச் சமாளித்திருக்கிறார்!
- புண்ணியகோடி, சாலிகிராமம்.
எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா தம்பதி பேட்டி, விஜய்யின் வெற்றிக்கான காரணத்தை விளக்கியது!
- மெர்வின், ஆலந்தூர்.
ஒருபக்கம் சிம்புவை ஆதரித்து சுந்தர்.சி பேட்டி, இன்னொருபுறம் சிம்புவை விமர்சித்து வெங்கட் பிரபு பேட்டி. உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையேப்பா! இதில் ஏற்கெனவே கோஷ்டி சண்டையில் கலகலத்திருக்கும் காங்கிரஸிலும் பத்த வெச்சிருக்கீங்க!
-நிஷாந்தி, புதுக்கோட்டை.
பொருளாதார நெருக்கடி குறித்த தலையங்கம் இரண்டு பக்கங்கள் போடுமளவு பெரிய விஷயம். ஆனாலும் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியிருந்தீர்கள்.
- விசுவநாதன், பொள்ளாச்சி.
`நிலா... தொட்டுவிடும் தூரம்தான்’ சந்திரயான்-2 பற்றிய அருமையான பதிவு.ஆனால், இதுவரை விட்ட சாட்டிலைட்டுகளால்...BSNL-க்கு மட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை.போல!
- ஆர். ரவி. vikatan.com