Published:Updated:

கடிதங்கள்

வெற்றிக்கான சீக்ரெட்!

கடிதங்கள்
கடிதங்கள்

சிரஞ்சீவி பேட்டியில் இருக்கும் கமல், ரஜினிக்கான அறிவுரை உணர்வுபூர்வமானது.

- சிவகுமார், புதுக்கோட்டை

சிரஞ்சீவியின் விரிவான பேட்டி சினிமா, அரசியல் என்று பல விஷயங்களைத் தொட்டிருந்தது சிறப்பு. தெலுங்கில் ஓர் உச்ச நட்சத்திரம் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் மனம் திறந்து பேசியிருந்தார் சிரஞ்சீவி.

- கார்த்திகா, விழுப்புரம்.

‘புறக்கணிப்புகள் என்னைத் துவளச் செய்ததே இல்லை. அது என்னை இன்னும் வேகமாக வெறியோடு உழைக்க வைத்தது’ - ஜாக் மாவின் வெற்றிக்கான சீக்ரெட் இதுதான்.

- மைக்கேல் கோதண்டராமன்

ந்தப் பேய் வெப் சீரிஸ் கட்டுரை படிக்கும்போதே அச்சம் எழுகிறது பாஸ்.

- K T மணிகண்டன்.

ஆர்.எம்.வீரப்பனின் பேட்டி என்னுள் பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறது. விகடனுக்கு நன்றி!

- பயில்வான் ரங்கநாதன்

கடிதங்கள்

ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய கீழடிக் கட்டுரையை ஆங்கிலத்தில் வெளியிட்டு, பல இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

- பிரபு, மயிலாடுதுறை

`குளத்தை மீட்டால் குற்றவாளியா’ என்னும் கட்டுரை மீண்டும் இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதைக் காட்டுகிறது.

- சங்கர் கணேஷ்

டேட்டிங் ரூட்டு தலயா. இப்படியெல்லாமா தொழில் இருக்கிறது?

- லக்ஷமண், திருச்சி

‘அன்பே தவம்’ தொடர் வெறுமனே ஆன்மிகத் தொடர் மட்டுமல்ல; நம் மரபில் இருக்கும் பல அறம் சார்ந்த விஷயங்களை அழுத்தமாகச் சொன்ன தொடர். மதத்தைத் தாண்டியும் மனித நேயம் தேவை என்பதை அழகான மொழிநடையில் கூறிய தவத்திரு.குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் அவர்களுக்கு நன்றிகள்!

- சாதனா, சேலம்.