கரும்பு தானம்!

மகான் துகாராம் பொறுமை நிறைந்தவர். அவர் மனைவியோ கோபக்காரி. ஒருநாள், வயலுக்குச் சென்ற துகாராம், கரும்புக் கட்டுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

வழியில் கேட்டவர்களுக்கெல்லாம் தன்னிடம் இருந்த கரும்புகளைக் கொடுத்துக்கொண்டே வந்தார். இறுதியில் ஒரே ஒரு கரும்பு மட்டுமே மிஞ்சியது. அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் துகாராம்.

நடந்ததை அறிந்த அவர் மனைவி, கடுங்கோபம் கொண்டாள். துகாராமின் கையில் இருந்த கரும்பைப் பிடுங்கி, அவர் முதுகில் ஓங்கி அடித்தாள். அடித்த அடியில் கரும்பு முறிந்து, இரண்டு துண்டானது.

அடி வாங்கிய நிலையிலும் கோபப்படாத துகாராம், மனைவியிடம் கூறினார்

‘`அன்பே... ஒரு கரும்பை இருவர் சாப்பிடுவது எப்படி என குழம்பினேன். இப்போது, நீ அதை இரண்டாக்கிவிட்டாய். வா, ஆளுக்கு ஒன்றாகக் கடித்துச் சாப்பிடலாம்!’’

- ஆர்.பிருந்தா ரமணி, மதுரை-20

தாமிரபரணியும் செயலிழந்ததா?

பாரதியார் தனது பாடல்களை, தேவார இசைப் பாடகரான சுந்தர ஓதுவாமூர்த்தியிடம் கொடுத்து இசையோடு பாடச் சொல்லிக் கேட்பதுண்டு.

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்து, பாரதியார் பாடல் இயற்ற... அந்தப் பாடலுக்கு சுந்தர ஓதுவாமூர்த்திகள் இசையமைத்துப் பாடுவது வழக்கம்.

ஒருநாள், சுந்தர ஓதுவாமூர்த்தி பாடி முடித்ததும் ‘சரே’லென்று எழுந்த பாரதியார், ஆற்றுக்குள் இறங்கி ஓடும் நீரைத் தொட்டுத் திரும்பினாராம். இதைக் கண்ட சுந்தர ஓதுவாமூர்த்திக்கு வியப்பு!

அவர், ‘`திடீரென ஓடிச்சென்று, ஆற்று நீரைத் தொட்டுவிட்டு வருகிறீர்களே... ஏன்?’’ என்று பாரதியாரிடம் கேட்டார்.

உடனே, ‘`நண்பரே! உமது பாடலைக் கேட்டு மெய்ம்மறந்த நான் செயலிழந்து போனேன். இந்தத் தாமிரபரணி நதியும் என்னைப் போன்றே செயலிழந்து போயிருக்குமோ என்று ஒரு சந்தேகம். எனவேதான் ஓடிச்சென்று ஆற்றின் ஓட்டத்தை சோதித்துத் திரும்பினேன்!’’ என்றாராம் பாரதியார்.

- ஏ.கே.என், திருப்பட்டினம்