Published:Updated:

"அந்த ஸ்டாலினுக்கும் இந்த ஸ்டாலினுக்கும் ஒரு ஒற்றுமை..."- உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டில் சத்யராஜ்

'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ்

"ஸ்டாலின் 5 வயதாக இருக்கும் போதும் சரி, உதயநிதி பிறந்த போதும் சரி கலைஞர் சிறையில் இருந்திருக்கிறார். வாழ்வின் உண்மையான ஹீரோ கலைஞர்!" - சத்யராஜ்

"அந்த ஸ்டாலினுக்கும் இந்த ஸ்டாலினுக்கும் ஒரு ஒற்றுமை..."- உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டில் சத்யராஜ்

"ஸ்டாலின் 5 வயதாக இருக்கும் போதும் சரி, உதயநிதி பிறந்த போதும் சரி கலைஞர் சிறையில் இருந்திருக்கிறார். வாழ்வின் உண்மையான ஹீரோ கலைஞர்!" - சத்யராஜ்

Published:Updated:
'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ்
தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ஸ்டாலினின் தன்வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வாழ்த்துரை அளித்துப் பேசிய நடிகர் சத்யராஜ் தன்னுடைய அனுபவத்தோடு, தான் நூலில் படித்து ரசித்த சில பகுதிகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் சாராம்சம் இங்கே...
'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ்
'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ்

"முதல்வர் ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் கொடுத்து படிக்கச் சொன்னார். பக்கத்திற்குப் பக்கம் குறிப்பெடுக்கிற மாதிரி ஆனது. அந்தளவிற்கு சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைந்து இருக்கின்றன. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனச் சொல்லும் போது கலைஞரின் முகம் தெரிந்தது என ஸ்டாலின் சொன்னார். எவ்வளவு நெகிழ்ச்சியான தருணம். ஸ்டாலினை விட கலைஞர் எனக்கு நெருக்கமான பழக்கம். அவரோடு 'பாலைவன ரோஜாக்கள்', 'மண்ணின் மைந்தன்' என இரண்டு படங்கள் பணியாற்றி உள்ளேன். இது ஸ்டாலின் வரலாறா இல்லை தலைவர் கலைஞர் வரலாறா எனச் சந்தேகம் வருமளவிற்கு கலைஞர் பற்றி அத்தனை செய்திகள் இருக்கின்றன.

பிள்ளைகள் குறிப்பிட்ட வயது வரைக்கும் அப்பாவை ஹீரோவாக பார்ப்பாங்க. அப்புறம் அப்பா இதை செஞ்சுருக்கலாம், அதை செஞ்சுருக்கலாம் எனப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் எப்போதும் தலைவனாக தந்தையைப் பார்த்திருக்கிறார் ஸ்டாலின். 'தந்தை ஒரு தலைவன்' என்று படத்திற்கு கூட பெயர் வைக்கலாம்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஸ்டாலின் 5 வயதாக இருக்கும் போதும் சரி, உதயநிதி பிறந்த போதும் சரி கலைஞர் சிறையில் இருந்திருக்கிறார். வாழ்வின் உண்மையான ஹீரோ. 'பராசக்தி' படத்தில் வருவது போல ஊருக்கு ஊரு குணசேகரன்கள் இருந்தனர். அப்போதெல்லாம் பராசக்தி வசனங்கள் பேசுவதே ஒரு பெருமைக்குரிய விஷயம். நிறைய இனிமையான நினைவுகளை எழுதியிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு முதலில் அய்யாதுரை என்கிற பெயரை பெரியார், அண்ணா நினைவாக வைக்க விரும்பினார் கலைஞர். ரஷ்யாவில் புரட்சி நடந்ததால் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த ஸ்டாலினுக்கும் இந்த ஸ்டாலினுக்கும் ஒரு ஒற்றுமை. ரஷ்யாவில் ஸ்டாலின் ஆட்சியில்தான், ஆட்சியில் இருந்து மதம் விலக்கப்பட்டது. அதேதான் இங்கும் நடக்கிறது.

'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் மற்றும் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின்
'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் மற்றும் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின்

புத்தகம் விறுவிறுப்பாக இருக்கிறது. பல இடங்களில் சிரிக்கவும் உணர்ச்சி வசப்படவும் ரசிக்கவும் முடிகிறது. அஞ்சுகம் அம்மையார் ‘தாலின்’ என்று அழைப்பது, எம்ஜிஆரை சார் என்று அழைத்ததற்கு கலைஞரிடம் எம்ஜிஆர் ஸ்டாலினைப் பற்றி சொன்னது, ஸ்டாலின் முடி வைத்திருப்பதை சிவாஜி 'என்ன தஞ்சாவூர் கோபுரம் போல இருக்குது'ன்னு பிடித்து உலுக்கியது எனப் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நூல் முழுவதும் இருக்கின்றன. மிசாவை வைத்து மட்டும் ஒரு படம் எடுக்க முடியும் போல! இதன் இராண்டாம் பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்" என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism