Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 11 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு - 11 - பட்டுக்கோட்டை பிரபாகர்
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு - 11 - பட்டுக்கோட்டை பிரபாகர்

என்னப்பா சேலத்துல கலெக்டர் ஆபீஸ்ல ரொம்ப பெருசா போராட் டம் நடத்தப் போறிங்க போலிருக்கே

வெந்து தணிந்தது காடு - 11 - பட்டுக்கோட்டை பிரபாகர்

என்னப்பா சேலத்துல கலெக்டர் ஆபீஸ்ல ரொம்ப பெருசா போராட் டம் நடத்தப் போறிங்க போலிருக்கே

Published:Updated:
வெந்து தணிந்தது காடு - 11 - பட்டுக்கோட்டை பிரபாகர்
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு - 11 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“இந்தத் தடவை என் பையனை ஜாமீன்ல வரமுடியாத மாதிரி கேஸ் போட்டு உள்ளே தள்ளப் போறதா பென்சில்காரரு சொல்றார் சார். அவனுக்கு பதினைஞ்சு நாள்ல கல்யாணம் வெச்சிருக்கேன். வெட்டுக்கிளியோட பொண்ணைதான் பேசி பரிசம் போட்டோம்’’ என்றான் காடையன்.

உதயகுமாருக்கு பிரச்னையின் தீவிரம் உறைத்தது. இவர்களோடு இத்தனை நாள்கள் இணக்கமாக இருந்த பென்சில்காரர் திடீரென ஏன் முறைத்துக் கொள்கிறார்? தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவருக்கும் அவர் பையனுக்கும் கோடி கோடியாய் சம்பாதித்துக்கொடுக்கும் கூட்டத்தினரோடு என்ன பிணக்கு?

“இப்போ வரைக்கும் அவரோட சுமுகமாதானே போயிட்டிருக்கு... பின்னே ஏன் திடீர்னு வஞ்சம் வெச்சிப் பேசறார்?’’ என்றான் வாட்சர் சுந்தரம், உதய குமாரின் எண்ணத்தை அப்படியே படித்தது போல.

“கலெக்டர் ஆபீஸ் வாசல்ல எங்க ஊருக்கு ரோடு கேட்டு ஒரு பெரிய போராட்டம் நடத்தணும்னு மீட்டிங் போட்டு பேசினோம். தம்பிகூட கலந்துகிட்டு ஊக்கப்படுத்திப் பேசுனாரு. அந்த விஷயம் அவரு காதுக்குப் போயிடுச்சு’’ என்றான் வெட்டுக்கிளி.

``அதெப்படி உங்களுக்குத் தெரியும்? அதைப் பத்தி ஏதாச்சும் அவரு பேசுனாரா?’’ என்றான் உதயகுமார்.

காடையனும் வெட்டுக்கிளியும் சொல்லலாமா, வேண்டாமா என்பதுபோல ஒருவரையொருவர் தயக்கத்துடன் பார்த்துக் கொண் டார்கள்.

``என்னவா இருந்தாலும் சொல் லுங்க...”

“ `என்னப்பா சேலத்துல கலெக்டர் ஆபீஸ்ல ரொம்ப பெருசா போராட் டம் நடத்தப் போறிங்க போலிருக்கே... புதுசா ஒரு தலைவன் வேற கிடைச் சிருக்கான் போலிருக்கே... அப்படி'னு நக்கலடிச்சுப் பேசுனாரு சார்.’’

``உங்க ஊர்ல நைட்ல நடந்த ரகசிய மான மீட்டிங் பத்தி அவருக்கு எப்படி நியூஸ் போச்சு? அப்படின்னா உங்களுக்குள்ளேயே உங்களுக்கு எதிரா செயல்படற ஒருத்தன் இருக்கணும்.”

``மேட்டுப்பாதை பாண்டி வேலையாதான் இருக்கும்’’ என்றான் காடையன்.

``யார் அது?’’

வெந்து தணிந்தது காடு - 11 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“மீட்டிங்ல எதிர்த்து எதிர்த்து வீம்புக்குன்னு பேசிட்டிருந்தானே... அவன்தான் சார். பென்சில்காரருக்கு வேண்டியவன். அவனுக்கு மட்டும் தீபாவளி, பொங்கல்னா பணம், புதுத் துணின்னு ஸ்பெஷலா கவனிப்பாரு...’’

``அவன் கையைக் காலை உடைச்சு வீட்ல படுக்க வெச்சாதான் சரியா வரும் சார்’’ என்றான் ஆத்திரமாக வெட்டுக்கிளி.

“இப்போ ஆந்திரா போலீஸ்ல மாட்டி யிருக்கிற உன் மாப்பிள்ளையை எப்படி வெளில கொண்டு வர்றதுன்னு மட்டும் யோசிப்பா. கல்யாணம் நடக்கணுமில்ல’’ என்று அதட்டினான் உதயகுமார்.

``பென்சில்காரரு அவர் பையன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும் சார். அங்கே யோகேஷ், ஆக வேண்டியதைப் பார்த்துடுவாரு. ஒண்ணு கேஸே போடாம விட்ருவாங்க. இல்ல... ஜெயில்ல போடாம ஜாமீன்ல விட்ரு வாங்க.’’

``அவருதான் கோபமா இருக்காரே...’’ என்றான் சுந்தரம்.

``எங்க வெட்டுக்கூலியில பணம் பிடிச்சிக் கங்கன்னும் சொல்லிப் பார்த்துட்டோம் சார். ஒப்புக்க மாட்டேங்கறார். அவரு கோபத்துல ஒரு வார்த்தை சொன்னார் சார். `புதுசா முளைச்சிருக்கானே ஒரு தலைவன்... அவனைப் போய்ப் பாருங்க... எதுக்கு எங்கிட்ட வர்றீங்க’ன்னு சொன்னாரு’’ என்றான் வெட்டுக்கிளி.

``அவரோட கோபம் என் மேலதான். உங்க ஊர்ப் பிரச்னையில் நான் அக்கறை எடுத்துக் கறேன் இல்ல... அதான் அவருக்கு காண்டு. அந்தக் கோபத்தை உங்ககிட்ட காட்றாரு” என்றான் உதயகுமார்.

“அதனாலதான் சார் உங்ககிட்ட வந்தோம்.’’

“இப்ப நான் என்ன செய்யணும்?’’

“பென்சில்காரரைப் போய்ப் பாருங்க தம்பி. இனிமே எங்க விவகாரத்துல தலையிட மாட் டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. அப்ப தான் அவரு எங்க பிரச்னையைத் தீர்ப்பாரு.”

``ஓகோ... நிஜமாவே உங்க ஊர் பிரச்னையில் நான் அக்கறை காட்ட வேணாம்னு மனசாரச் சொல்றிங்களா காடையன்?’’

“தம்பி. அதெப்படி மனசார சொல்ல முடியும்? இத்தனை வருஷத்துல இங்க வேலை பார்த்த ஒரு ஆபீஸருக்கும் எங்களைப் பத்தி துளி கரிசனம்கூட இல்லாதப்ப நீங்களாவே ஆர்வமா மெனெக்கெடறிங்க... உங்களை சாமி மாதிரிதான் நினைக்கிறோம். ஆனா, நல்லதுக்குத்தான் காலமில்லையே... எங்க தலையெழுத்து எப்படியோ அப்படி வாழ்ந் துட்டுப் போறோம்... விட்ருங்க தம்பி’’ என்ற காடையனுக்குக் குரலடைத்தது.

``உங்க வீட்டுக் கல்யாணம் நடக்கணும். அதுக்காக ஊரோட நன்மை எப்படியோ போகட்டும்னு நினைக்கறிங்களே காடையன், அது தர்மமா தெரியுதா?” என்றான் உதயகுமார்.

``அய்யா... அப்படி சொல்லாதிங்க. ஊருக் காக என் உசுரையும் குடுப்பேன். ஆனா, புள்ளை மேல பாசம் வெச்ச மனசு கேக்க லய்யா. என் புள்ளையை அடிச்சு உதைச்சு சித்ரவதை செய்வாங்கய்யா. ஒண்ணுக்கு பத்தா கேஸ் எழுதி ஏழெட்டு வருஷம் உள்ளே போட்ருவாங்கய்யா. என் குடும்பத்துக்கு ஒரே வாரிசுய்யா.’’

``உங்க பையன் பேரென்ன? இப்ப அவனை யாரு எந்த போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சிருக் காங்க? இந்த விவரமெல்லாம் தெரியுமா?’’

``கன்னியப்பனுங்க. அரெஸ்ட் செஞ்சது வெங்கல்ராவுன்னு ஒரு ஆபீஸர். அந்தாளு சரியான பொறுக்கி. பணம் பணம்னு அலைவான். ஆந்திரால மட்டும் நாலு பங்களா கட்டிட்டான். இப்ப என் பையனை திருப்பதி யில் டாஸ்க் ஃபோர்ஸ் ஆபீஸ்ல விசாரணைக் குன்னு வெச்சிருக்காங்க. இன்னும் கேஸ் எழுதலை. கோர்ட்டுக்குக் கொண்டு போகலை.’’

மோவாயைத் தடவியபடி யோசித்தான் உதயகுமார்.

``மரம் வெட்டிட்டிருந்தப்ப பிடிச்சாங்களா?’’

“நீங்க வேற... அந்தக் காட்டுக்குள்ள கொஞ்ச தூரம்தான் எந்த போலீஸ்காரனும் ஃபாரஸ்ட்காரனும் வர முடியும். நாங்க எறங்கறது ரொம்ப உள்ளங்க சார். சிறுத்தை, கரடியெல்லாம் நடமாடுற எடம். எப்பவுமே மரத்தை வெட்டி பட்டையை உறிச்சு காட்டுக்கு வெளில லாரி நிறுத்தி வெச்சிருக்கற ஸ்பாட்டுக்கு எடுத்துட்டு வர்றப்ப... இல்லன்னா வெட்றதுக்காக காட்டுக்குள்ள போற சமயம் தான் பிடிப்பாங்க. பல சமயம் எங்க கையில் சரக்கே இருக்காது. இருந்ததா சோடிச்சிக்கு வாங்க. ஊருக்குள்ள பஸ்ஸுல போயிட்டிக் கறப்பல்லாம் இறக்கி பிடிச்சிட்டுப் போயிருக் காங்க.”

``உங்க பையனை எந்தச் சூழ்நிலையில் பிடிச்சிருக்காங்க?’’

``இது கொடுமை சார். இருபது நாளா காட்டுக்குள்ள வேலையை முடிச்சிட்டு சரக்கை சொன்ன ஸ்பாட்ல ஏத்தி விட்டுட்டு திருப்பதிக்குப் போயி மொட்டை போட்டுட்டு மறுநாள் புறப்பட இருந்தான் சார். லாட்ஜுல தங்கியிருந்தவனை தேடிப்பிடிச்சு கூட்டிட்டுப் போயிருக்காங்க.’’

``அதெப்படி?’’

``அவனோடு போன மாதையன் மாட்டிருக் கான். அவனை அடிச்சு விசாரிச்சப்ப வலி தாங்காம இவனைப் போட்டுக்குடுத்திருக்கான்.’’

``இந்தக் கேஸ் நிக்காதே...’’

``ஆனா, லாட்ஜுல அவனைப் பிடிச்சதா கேஸ் எழுத மாட்டாங்க. லாரில் சரக்கை ஏத்திட்டிருந்தப்ப பிடிச்சதா எழுதி, ஒப்புக்கச் சொல்லி அடிச்சு, உதைச்சு கையெழுத்து வாங்கிடுவாங்க.”

``சரி... நான் பென்சில்காரரை சந்திச்சுப் பேசறேன்.’’

``உங்களுக்கு கோபம், வருத்தம் எதுவும் இல்லையே தம்பி?’’

``அதெல்லாம் ஒருபக்கம் இருக்குதான். இப்போ உங்க பையன் சேதாரம் இல்லாம வர்றதுதான் முக்கியம்’’ என்றான் உதயகுமார்.

ஜெயபால் அவர் கட்டிக்கொண்டிருந்த ஒரு கெஸ்ட் ஹவுசின் கட்டட வேலைகளை இரண்டாம் தளத்தில் நின்று பார்த்தபடி இன்ஜினீயருடன் பேசிக்கொண்டிருக்க... அவருக்கு மட்டும் குடை பிடித்தான் ஒருவன்.

பைக்கில் வந்து இறங்கின உதயகுமாரை மேலிருந்து பார்த்தவர் கண்டுகொள்ளாமல் தன் உரையாடலைத் தொடர்ந்தார்.

பூசப்படாத படிகளில் ஜாக்கிரதையாக ஏறி இரண்டாம் தளத்துக்கு வந்த உதயகுமார்... புன்னகையுடன் கைகூப்பியபடி அவரை நெருங்கி, ``வணக்கம் சார். பென்சில் ஃபேக்டரிக்குப் போயிருந்தேன். இங்க இருக்கறதாச் சொன்னாங்க” என்றான்.

``பேசிட்டிருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்றிங்களா?’’ அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இன்ஜினீயரிடம் தொடர்ந்து ஜன்னல்களின் டிசைன் பற்றிப் பேசத் தொடங்கினார்.

கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நின்றான் உதயகுமார். அரை மணி நேரம் செட்டிநாட்டின் கட்டடக் கலை, ராஜஸ் தானின் கட்டடக் கலை என்று வேண்டுமென்றே வெட்டியாகப் பேசிவிட்டு, பிறகு மெதுவாக அவன் பக்கம் திரும்பினார்.

``என்ன ஆபீஸர் சார், என்ன விஷயம்?’’

``நான் எதுக்கு வந்திருக்கேன்னு உங்களுக்கே தெரியும். காடையன் மகன் திருப்பதியில் மாட்டியிருக்கான். அவனுக்கு பதினைஞ்சு நாள்ல கல்யாணம். உங்களுக்காக உழைச்சவன். இரக்கத்தோட நடந்துக்கறதுதான் தர்மம் சார்.’’

வெந்து தணிந்தது காடு - 11 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``கொஞ்சம் இருங்க சார்... எக்ஸ்பிரஸ் ஸ்பீட்ல நீங்க பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டே போறிங் களே... யாரு காடையன்? அப்படி யாருமே என் பென்சில் ஃபேக்டரில் வேலை செய்ய லையே...’’

“நமக்குள்ள இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் வேணாம் சார்... நான் போலீஸ் இல்லை. எந்த விசாரணைக்கும் வரலை. இங்கே குறிஞ்சிக்காட்டுல வாழுற ஜனங்களை சேஷாசலம் காட்டுக்கு செம்மரம் வெட்ட அனுப்பி வைக்கிறது யாருன்னு உலகத்துக்கே தெரியும். இங்கேயும் சரி. ஆந்திராலயும் சரி. அரசாங்கம் சம்பந்தப்பட்ட அத்தனை எடத்துலயும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கு. ரெகுலரா பல இடங்களுக்கு கட்டிங்கும் போகுது. அதனால் உங்க மேலயும், உங்க பையன் மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க. அப்பப்ப மாட்டிக்கிறது அப்பாவி ஜனங்க தான். உங்களுக்காக உழைக்கிற, அடி உதை வாங்கற, ஜெயிலுக்குப் போயிட்டு வர்ற, சமயத்துல உயிரையே கொடுக்கற அவங் களோட நல்லது கெட்டதுக்கு நீங்கதானே சார் பொறுப்பேத்துக் கணும்?’’

அவனை ஆழமாகப் பார்த்தார் ஜெயபால். நக்க லாகக் கைதட்டினார்... ``நல்லாப் பேசறிங்க. அப்படியே புல்லரிக் குது எனக்கு. அரசியலுக்குப் போனா உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கு சார்.’’

``கிண்டல் எல்லாம் வேணாம். சீரியசா பேசுங்க சார்.’’

``இவ்வளவு தூரம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசறிங்களே... இதுல உங்களுக்கு என்ன சார் சம்பந்தம்? இதுக்குதான் உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருதா?’’

“சம்பளத்துக்கு நான் செய்ய வேண்டிய வேலையை சரியாதான் செஞ்சுகிட்டிருக்கேன். இது சக மனுஷங்க மேல நியாயமா காட்ட வேண்டிய மனிதாபிமானம் சார்.’’

``அந்த மனிதாபிமானத்தைத் தூக்கிக்கிட்டு ஆந்திராவுக்குப் போயி நீங்களே அவனை மீட்டுக்கிட்டு வந்துடுங்களேன் சார்.’’

``அங்க நீங்க சொன்னா எதுவும் நடக்கும்.’’

``நான் எதுக்கு சொல்லணும்? எங்கிட்ட வேலைபாத்துக்கிட்டே எனக்கு ஆப்பு வைக் கிறதுக்கு திட்டம் போடுவானுங்க. அவனுங் களுக்கு நான் இரக்கம் காட்டணுமா? இதுக்கு சிபாரிசுக்கு நீங்க எதுக்கு வர்றிங்க?’’

``ஊருக்கு ரோடு வரணும்னு போராடினா, அது எப்படி உங்களுக்கு எதிரான விஷயமாகும்?’’

``அட... உங்களுக்கு எதுவுமே தெரியாதில்ல... நான் என் வாயால சொல்லணுமா? எதுவுமே புரியாமதான் அவனுங் களைத் தூண்டிவிடுறிங்களா?”

``சரி... நேரடியாவே பேசிட லாம். உங்க பையன் கிட்டப் பேசி கன்னியப்பனை விட்டுடச் சொல்லுங்க சார்... நான் இனிமே இந்த விவகாரத்துல தலை யிடலை”

``நான் எப்படி நம்பறது?’’

``பத்திரம் எழுதி கையெழுத்துப் போட்டா தர முடியும்?’’

அவனை ஊடுருவிப் பார்த் தார் ஜெயபால். தலையைக் குறுக்கில் அசைத்தார்.

``எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்துல அவனுங்க பாதிக்கப்பட்டாதான் இனிமே ஜென்மத்துக்கும் என்னை எதிர்த் துக்கக் கூடாதுன்னு புத்தி வரும். நீங்க போலாம்’’ என்றவர், அவனை விட்டுவிட்டு விலகி நடக்க... உதயகுமாருக்கு ஆத்திரம் எகிறியது.

அவரோடு எத்தனை பெரிய பகை ஏற் பட்டாலும் சரி... அவர் தயவு இல்லாமலேயே கன்னியப்பனை வெளியே கொண்டுவந்து அவர் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று மனதில் உறுதி ஏற்பட்டது.

‘இதை எப்படி செய்யப் போகிறேன்?’

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism