Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 13 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

‘`உன்னை கான்டாக்ட் செய்யவே முடியலை. போன் நம்பர் மாத் திட்டே. என் கல்யாணத்துக்கு நீ வருவேன்னு எதிர்பார்த்தேன்.”

காலை 7 மணி சுமாருக்கு திருப் பதிக்கு ரயில் வந்து சேர்ந்தது. திரு மலைக்குச் செல்லும் பக்தர்களும், வெங்கடாஜலபதியைத் தரிசித்துவிட்டு மலையிலிருந்து இறங்கிய மொட்டைத்தலை பக்தர்களும் பிளாட்பாரமெங்கும் உலா வினார்கள். நகரம் ஒரு புதிய தினத்தின் பரபரப்புக்கு தெலுங்கில் பேசியபடி தயாராகிக் கொண்டிருந்தது.

ஆட்டோ பிடித்து ஏற்கெனவே பதிவு செய்திருந்த ஹோட்டலுக்குப் பயணித் தார்கள் உதயகுமாரும் காடையனும் வெட்டுக்கிளியும்.

ஹோட்டலுக்கு வந்து இரண்டு அறை களுக்கான சாவிகளை வாங்கிக் கொண்டு ஒன்றை காடையனிடம் நீட்டினான் உதயகுமார்.

‘`குளிச்சிட்டு ரெடியா இருங்க. நான் போன் பண்றேன்.’’

‘`கன்னியப்பனை கைது செஞ்சு கஸ்டடியில் வெச்சிருக்கற அந்தப் போலீஸ் ஆபீஸரையா பார்க்கப்போறோம் தம்பி?’’

‘`இல்லை. நான் சொல்றேன்’’ என்றான்.

தன் அறைக்கு வந்து தொலைக்காட்சியில் செய்தி சேனல் அமைத்துக்கொண்டு பாத்ரூம் சென்று பல் துலக்கினான். அங்கே இருந்த கெட்டில், பவுடர் பால், காபி தூள், சர்க்கரை கொண்டு காபி போட்டுக்கொண்டு அறையை ஒட்டிய பால்கனிக்கு வந்து நின்று பருகினான். ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான்.

புறப்படுவதற்கு முதல் தினம் அபர்ணாவின் போன் எண்ணை பல நண்பர்களிடம் விசாரித்துப் பெற்றதும், பெரிய தயக்கத்துக்குப் பிறகு, அவளை அழைத்துப் பேசியதும் அவன் மனதில் அலையடித்தன.

‘`மிஸஸ் அபர்ணா ரவிச்சந்திரன் பேசறிங்களா?’’

‘`ஆமாம். நீங்க?’’

‘`உதயகுமார். நாம ஒரே காலேஜ்ல...’’

‘`ஓ மை காட்! ஹல்ல்லோ உதய்... எப்படி இருக்கே? எவ்ளோ நாளைக்கு அப்புறம் உன் குரலைக் கேக்கறேன்...’’ அவள் குரலில் தொற்றிய அதீத உற்சாகத்தைத் துல்லியமாக உணர முடிந்தது.

“நல்லா இருக்கிங்களா அபர்ணா?’’

‘`ஹேய்... இதென்ன வாங்க போங்கன்றே?

கூல் மேன். அப்போ கூப்பிட்ட மாதிரியே வா போன்னே பேசு. அந்நியமா இருக்கு. எனக்கு

உன் மேல கொஞ்சம் கோபம் தெரியுமா?’’

வெந்து தணிந்தது காடு - 13 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘`ஏன்?’’

‘`உன்னை கான்டாக்ட் செய்யவே முடியலை. போன் நம்பர் மாத் திட்டே. என் கல்யாணத்துக்கு நீ வருவேன்னு எதிர்பார்த்தேன்.”

‘`பத்திரிகை எனக்கு வரலை அபர்ணா.’’

‘`அதெப்படி வராம போகும்? ஸ்ரீவில்லிப்புத்துர் அட்ரஸ்தானே?’’

‘`அப்போ நான் டேராடூன்ல டிரெய் னிங்ல இருந்தேன். எனக்கு வர்ற தபால் எல்லாம் ரீடைரக்ட் செஞ்சுகிட்டிருந்தாங்க. அதுல மிஸ்ஸாகியிருக்கும்.’’

“என்ன டிரெய்னிங் உதய்? அப்பாவோட பால்கோவா பிசினஸைத்தான்

நீ பார்த்துட்டிருக் கேன்னு நினைச்சுக்

கிட்டிருக்கேன்.”

“இல்லை. ஃபாரெஸ்ட் டிரெய்னிங் அபர்ணா. இப்போ நான் டெப்டி ரேஞ்சரா சேலம் டிஸ்ட்ரிக்ட்ல மருது காட்டூர் சரகத்துல வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்.”

‘`அப்படியா... வெரிகுட். மேரேஜ்?’’

‘`இன்னும் இல்லை. பார்த்துக்கிட்டிருக் காங்க.”

‘`திருப்பதி வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும் உதய்.’’

‘`நிச்சயமா. டு பீ வெரி ஃபிராங்க்... நீ திருப்பதியில் இருக்கேன்னு யாரோ எப்பவோ சொன்ன நினைவு இருந்ததால்தான் தீவிரமா பல பேர்கிட்ட விசாரிச்சு உன் நம்பர் பிடிச் சேன். நீ ஒரு லாயரா பிராக்ட்டிஸ் பண்றது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு.’’

‘`பரவால்ல... இப்பவாச்சும் என் ஞாபகம் வந்துச்சே...’’

‘`ஆமா... நீ தனியா பிராக்ட்டிஸ் பண்றியா... இல்ல...’’

‘`தனியாதான் பிராக்ட்டிஸ் பண்றேன். நாலு ஜூனியர்ஸ் இருக்காங்க. கிரிமினல் கேஸஸ்தான் எடுத்துக்கிட்டிருந்தேன். இப்போ ஃபேமிலி கேஸஸ்தான் நிறைய டீல் பண்ணி கிட்டிருக்கேன். இதுல சர்வீஸ் சாட்டிஸ் ஃபேக்‌ஷன் இருக்குப்பா.’’

‘`உன் ஹஸ்பண்ட்?’’

‘`அவர் ஒரு ஷேர் புரோக்கர். இங்கதான் இருந்தார். இப்போ மும்பைல பெரிய ஆபீஸ் போட்ருக்கார். இங்கேயும் அங்கேயும் பறந்து கிட்டிருப்பார்.’’

‘`குழந்தைங்க?’’

“இன்னும் பிளான் பண்ணலை.’’

‘`தப்பா நினைக்காதே அபர்ணா. ஆக்ச்சு வலா எனக்கு திருப்பதியில் ஒரு லீகல் ஹெல்ப் வேண்டியிருக்கு.’’

‘`பார்த்தியா... அப்போ இது அஃபிஷியல் கால். பர்சனல் கால் இல்ல. அப்படித்தானே?’’ என்றவள், அவனை சங்கடப்படுத்த விரும் பாமல் உடனேயே, “சும்மா கிண்டல் செஞ் சேன். சொல்லு உதய். இங்க என்ன வேலை ஆகணும் உனக்கு?’’

உதயகுமார் கன்னியப்பனின் விவகாரம் முழுவதும் விரிவாகச் சொன்னதும்...

‘`அவன் செம்மரம் வெட்ட வந்ததும் நிஜம். வெட்டினதும் நிஜம். அந்த சமயம் மாட்டலை. மாட்டின தோஸ்து போட்டுக் கொடுத்ததும் லாட்ஜுல வெச்சு அரெஸ்ட் செஞ்சிருக்காங்க. எப்படியும் அவன் சட்டப்படி கிரிமினல் தானே... அவனுக்காக எதுக்கு நீ மெனெக் கெடறே உதய்? லெட் ஹிம் ஃபேஸ் த பனிஷ் மென்ட்னு விட்ற வேண்டியதுதானே...’’

“இல்ல அபர்ணா. இங்க ஒரு ஊரையே திருத்த வேண்டியிருக்கு. ஏகப்பட்ட அநியாயம் நடந்துகிட்டிருக்கு. செம்மரம் வெட்றதுக்கு ஆளுங்களை மொத்த மொத்தமா அனுப்பிக் கிட்டிருக்கறதுல இந்த ஊர் முக்கியமானது. சும்மா கிரிமினல்ஸைப் பிடிக்கிறதும், தண்டிக் கிறதும் மட்டுமே நடந்துகிட்டிருந்தா இந்தப் பெரிய ஸ்கேமை நிறுத்த முடியாது. வேரை அறுக்கணும்.’’

‘`அதுக்கு?”

“செம்மரம் ஸ்கேண்டில்ல முக்கியமான விஷயமே அதை வெட்டி லாரிக்குக் கொண்டு வந்து சேர்க்கற கூலிப்படைதான். கட்டர் ஸோட சப்ளையை கட் செஞ்சாலே க்ரைம்ஸ் குறையும். குறிஞ்சிக்காடுன்ற கிராமம் என் கன்ட்ரோல்ல வருது. கன்னியப்பனை மட்டும் கேஸ் இல்லாம மீட்டுக்கிட்டு வந்துட்டா இனிமே செம்மரம் வெட்றதுக்கு யாரும்

போக மாட்டோம்னு எனக்கு பிராமிஸ் செஞ்சிருக்காங்க.’’

“இந்தக் கோணம் நல்லாருக்கே.”

“இதையெல்லாம்விட இன்னொரு காரணமும் இருக்கு. அந்த கன்னியப்பனுக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சு பரிசம் போட்டு கல்யாண ஏற்பாடுகள் நடந்துகிட்டிருக்கு.

இந்த நேரத்துல...’’ 

“புரிஞ்சிக்கிட்டேன். என்னடா ஒரு நியாய மில்லாத விஷயத்துல நீ இறங்க மாட்டியேன்னு நினைச்சேன். செம்மரம் வெட்றதை கன்ட் ரோல் செய்றதுக்காக போலீஸ் டிபார்ட்

மென்ட், ஃபாரெஸ்ட் டிபார்ட்மென்ட் ரெண்டையும் ஒருங்கிணைச்சு அமைச்சதுதான் டாஸ்க் ஃபோர்ஸ். அங்கேயும் சில பேர் தப்பு செஞ்சிட்டுதான் இருக்காங்க.’’

‘`அவங்க அத்தனை பேரும் ஸ்ட்ரிக்ட்டா இருந்தா இதை சுத்தமா நிறுத்த முடியும் அபர்ணா. ஆனா, அப்படி இருக்க முடியாது. இருக்கவும் விட மாட்டாங்க. இதுல சின்ன லெவல், பெரிய லெவல்னு பல அரசியல்வாதி களும் சம்பந்தப்பட்ட பெரிய நெட்வொர்க்.’’

‘`தெரியும். நீ எப்போ வர்றே?’’

‘`நாளைக்கு...’’

‘`வா உதய். இதை எப்படி டீல் செய்யலாம்னு நான் யோசிக்கிறேன். சீனியர்ஸ்கிட்ட கன்சல்ட் செஞ்சு வைக்கிறேன்.”

‘`தேங்ஸ் அபர்ணா.’’

‘`தேங்ஸ்லாம் சொன்னா உதைப்பேன் படவா.’’

‘`அட்ரஸ் அனுப்பறியா?’’

“மேப்பும் அனுப்பறேன். என் வீட்டுக்கே வந்துடு. என் வீட்லயே தங்கலாம்.”

‘`இல்லம்மா. நான், கன்னியப்பன் அப்பா, மாமனார் இவங்களோட வர்றேன். ஏற்கெனவே ஹோட்டல்ல ரூம்ஸ் புக் பண்ணிட்டேன். பரவால்ல. வந்துட்டு போன் செய்றேன்.’’

‘`காலையில் பதினோரு மணிலேர்ந்து ஒரு மணி வரைக்கும் நான் கோர்ட்ல இருப்பேன். பத்து மணிக்கு வந்தா ஓக்கே.’’

“சரி...’’ சிகரெட்டை அணைத்துவிட்டு மணி பார்த்து பதறி அவசரமாகக் குளிக்கச் சென்றான் உதயகுமார்.

பென்சில் ஃபேக்டரியின் அலுவலகத்தில் முகத்துக்கு மேல் ஒரு முழம் உயரம் கொண்ட சொகுசு நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயபால் தன் எதிரில் அமர்ந்து ஸ்ட்ரா போட்ட ரோஸ் மில்க்கைக் குடித்துக்கொண்டிருந்த ரேஞ்சர் ருத்ரபாண்டியன் குடித்து முடிக்கக் காத்திருந்தார்.

கர்ச்சீப்பால் உதடுகளை ஒற்றிக்கொண்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தார் ருத்ர பாண்டியன். 

“தகவல் நிஜம்தானா ருத்ரா?’’

‘`ஆமாம் சார். கல்யாணம் சம்பந்தமா லீவுன்னு தான் எனக்கு சொன்னான்.’’

‘`கூட காடையன், வெட்டுக்கிளி ரெண்டு பேரும் போயிருக்கறது நிஜம்தானா?’’

‘`ஆமாம் சார். பாண்டியோட தகவல் சரியாதான் இருக்கும்.’’

‘`என் பையன்ட்ட நேத்தே பேசிட்டேன். கன்னி யப்பன் மேல கேஸ் போட்ரச் சொல்லு. அவனை வெளியில் எடுக்கறதுக்கு நம்ம லாயர்ஸ் யாரையும் ஏற்பாடு செய்ய வேணாம்னு சொல்லிட்டேன். இவனுங்க அங்க போய் என்ன புடுங்கப் போறா னுங்க?’’

‘`வேற லாயர்ஸை வெச்சு ஜாமீன்ல எடுக்கலாமே சார்.’’

“உதய் எங்கிட்ட நேரா வந்து பேசிப் பார்த்தான். ராங்கியாவே இருக்கு அவன் பேச்சு. நான் பிடி கொடுக்கலை. விருட்டுன்னு போனான். இவன் ஏன் அவனுங்களுக்கு வக்காலத்து வாங்கறான்? மக்கள் தலைவ னாகி எலெக்‌ஷன்ல எதுவும் நிக்கப்போறானா என்ன?’’

‘`கவர்ன்மென்ட் சர்வென்ட் எலெக்‌ஷன்ல நிக்க முடியாதே.”

“ராஜினாமா செஞ்சிட்டு நின்னுட்டுப்போறான். அவனுக்குத்தான் குடும்பத் தொழில் இருக்கே. காசு, பணத் துக்கு பஞ்சம் இல்லையே. பசையான பார்ட்டிதான்.’’

‘`எங்கிட்டயும் ராங்காதான் சார் நடந்துக்கறான்.”

‘`அவனை இந்த ஊரை விட்டே துரத்தியடிச்சிடு வோமா?’’

‘`அவனை வேலையை விட்டே துரத்தறதுக்கு பிளான் போட்டு வெச்சிருக்கோம் சார் நானும் இன்ஸ்பெக்டர் கரிகாலனும்.”

‘`என்ன பிளானு?’’

‘`அழகா செட்டப் செஞ்சு லஞ்ச ஒழிப்புத் துறையில் பிடிச்சுக் கொடுத்து மானத்தை வாங்கலாம்னு பேசி ஆளையும் செட் செஞ்சிட்டோம் சார்.’’

‘`பின்னே செய்ய வேண்டியதுதானே... நாள், நட்சத்திரம் பார்த்துக்கிட்டு இருக்கிங் களா?’’

‘`அவனுக்குக் கல்யாணம் நிச்சயமாகற மாதிரி இருக்கு சார். அது நிச்சயமானதும் நடத்தினா கோலாகலமா இருக்கும்னு பார்த் தேன்.’’

“கள்ளக்குறிச்சில ஒரு பொண்ணு பார்த்தா னேய்யா... என்னாச்சு?’’

‘`தெரியலிங்க...”

‘`தெரிஞ்சிகிட்டாப் போச்சு. அந்தப் பொண் ணோட அப்பா தமிழ்மணியை எனக்குத் தெரியுமே. எனக்கு தானே போன் செஞ்சு இவனைப் பத்தி விசாரிச்சார். அப்போ இவனைப் பத்தி எதுவும் தெரியல. அதனால் நல்லபடியா சொல்லித் தொலைச்சேன்.’’

ஜெயபால் போன் எடுத்து தமிழ்மணியை அழைத்தார்.

“தமிழ்மணி பேசறேன். நல்லா இருக்கிங்களா ஜெயபால்?’’

“இருக்கேன். ஃபாரெஸ்ட் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கற ஒரு மாப்பிள்ளையப் பத்தி விசாரிச்சிங்க. அப்புறம் என்ன தகவல்னு சொல்லவே இல்லையே...”

‘`அவங்க வந்தாங்க. பார்த் தாங்க. எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிடுச்சு. ஒரு சின்ன பிரச்னையில் முடிவுக்கு வராம இருக்கு.’’

‘`அப்படி என்னங்க பிரச்னை? ரொம்ப கேக்கறாங்களா?’’

‘`அது இல்ல. எந்த முறைப்படி கல்யாணம்னு முடிவாகலை. அவங்க அய்யர் வெச்சு செய் யணும்னு சொல்றாங்க. நான் சீர்திருத்த முறையில் செய்யணும்னு சொல்றேன். நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்து ரெண்டு முறையும் வெச்சிக்கலாம்னு சொன்னேன். இப்பதான் பத்து நிமிஷம் முன்னாடி பைய னோட அப்பா போன் பண்ணி அவங்களுக்கும் சம்மதம்னு சொன்னார். அடுத்து நிச்சய தார்த்தம் செய்யணும்னு சொல்லியிருக் காங்க.’’

‘`நல்ல வேளை... இன்னும் நிச்சயமாகலை. எங்களுக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிடுங்க.’’

‘`அய்யோ! ஏன்?” பதறினார் தமிழ்மணி.

‘`அன்றைக்கு நீங்க கேட்டப்ப சரியா விசாரிக்காம சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டேன். இப்போ அதே ஃபாரெஸ்ட் ஆபீஸ்ல விசாரிச்சா கதை கதையா சொல்றாங்க.”

‘`என்ன சொல்றாங்க?’’ என்றார் தமிழ்மணி அதிர்ச்சியுடன்.

“கேரக்டர் சரியில்லையாம். வந்து கொஞ்ச நாள்லயே சகட்டுமேனிக்கு லஞ்சம் வாங்கறா னாம்!’’ என்றார் ஜெயபால் ருத்ர பாண்டி யனைப் பார்த்து கண்ணடித்தபடி.

- தொடரும்...காலை 7 மணி சுமாருக்கு திருப் பதிக்கு ரயில் வந்து சேர்ந்தது. திரு மலைக்குச் செல்லும் பக்தர்களும், வெங்கடாஜலபதியைத் தரிசித்துவிட்டு மலையிலிருந்து இறங்கிய மொட்டைத்தலை பக்தர்களும் பிளாட்பாரமெங்கும் உலா வினார்கள். நகரம் ஒரு புதிய தினத்தின் பரபரப்புக்கு தெலுங்கில் பேசியபடி தயாராகிக் கொண்டிருந்தது.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism