Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 14 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

உதயகுமார் சுருக்கமாகச் சொல்லி முடித்ததும்... ``இவ்வளவு பிரச்னை இருக்கா இதுல? இதெல்லாம் அந்த பென்சில் கம்பெனி முதலாளியை எதிர்த்துக்கிட்டுதானே செய்றிங்க?’’

வெந்து தணிந்தது காடு - 14 - பட்டுக்கோட்டை பிரபாகர்

உதயகுமார் சுருக்கமாகச் சொல்லி முடித்ததும்... ``இவ்வளவு பிரச்னை இருக்கா இதுல? இதெல்லாம் அந்த பென்சில் கம்பெனி முதலாளியை எதிர்த்துக்கிட்டுதானே செய்றிங்க?’’

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

அபர்ணாவின் வீட்டை நோக்கி டாக்சி விரைந்துகொண்டிருந்தது. காடையன் அருகில் அமர்ந்திருந்த வெட்டுக்கிளியின் இடுப்பில் லேசாக முழங்கையால் இடித்து ‘கேளு’ என்பதுபோல ஜாடை காட்ட... வெட்டுக்கிளி, முன்னால் அமர்ந்திருந்த உதயகுமாரிடம் குறைந்த குரலில், ``சார்... இப்ப எங்க போயிட்டிருக்கோம்?’’ என்றான்.

``இங்க அபர்ணான்னு ஒரு லாயர் எனக்குத் தெரிஞ்சவங்க. அவங்ககிட்ட எல்லா விவரமும் போன்ல சொல்லிட்டேன். கன்னியப்பனை எப்படி மீட்கலாம்னு சரியான யோசனை சொல்வாங்க’’ என்றான் உதயகுமார், போனில் வாட்ஸ்அப் செய்திகளைப் படித்தபடி.

``தம்பி... கையில் லட்ச ரூபா ரொக்கமா இருக்கு. மேற்கொண்டு தேவைப் பட்டாலும் போன் பண்ணா நம்ம கணக்குல போட்டுவிடச் சொல்லி ஏற்பாடு பண்ணிட்டுதான் வந்திருக்கோம்’’ என்று காடையன் சொல்ல... உதயகுமார் அருகில் டிரைவரை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு, ``அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்’’ என்றான்.

‘`செலவு பத்தி கவலைப்பட வேணாங்கறதுக்காகச் சொன்னேன்.’’

‘`அப்பறம் பேசிக்கலாம்னு சொன்னேன் காடையன்’’ என்று மீண்டும் அழுத்திச் சொன்னான் உதயகுமார்.

ஒரு ரயில்வே கேட் குறுக்கிட... காத்திருந்த வாகனச் சங்கிலியில் இவர்களின் டாக்சியும் இணைந்து நின்றதும், உதயகுமார் டாக்சியை விட்டு இறங்கி நின்று அமுதாவின் எண்ணைப் போட முயன்றபோது அமுதாவே அழைக்க, ``ஹலோ அமுதா’’ என்றான்.

``எனக்கு உங்க மேல கோபம்...’’ என்றாள் அமுதா.

‘`அய்யோ... ஏன்?’’

‘`உங்கப்பா எங்கப்பாகிட்ட சம்மதம்னு சொல்லி, அதை அவரு எங்கிட்ட சொல்லிதான் தெரிஞ்சிக்கணுமா... நீங்க சொல்லக் கூடாதா?’’

‘`நம்ப மாட்டிங்க. இப்பதான் எனக்கு வாட்ஸ்அப்ல அண்ணி செய்தி அனுப்பிச்சிருந்தாங்க. நீங்க கூப்புடலைன்னா இப்ப நான் கூப்பிட்டிருப்பேன். போனைக் கையில் எடுத்தேன். நீங்க கூப்புடறிங்க.”

‘`அப்படின்னா கோபம் வாபஸ்.’’

``எங்கப்பா சரி சொல்லிடுவார்னு எனக்குத் தெரியும். இப்ப எவ்வளவு ஹேப்பியா ஃபீல் பண்றேன் தெரியுமா? மை டியர் ஃப்யூச்சர் பொண்டாட்டியை உடனே பார்க்கணும் மாதிரி இருக்கே.”

‘`நான் ஃப்ரீயாதான் இருக்கேன். வீடியோ கால் செய்யவா?’’

``நான் ஃப்ரீயா இல்லையே...’’

‘`பார்க்கணும்னு நானா சொன் னேன்?’’

``ஏன்... உங்களுக்கு பார்க்கணும்னு இல்லையா?”

‘`நீங்கதான் ஃப்ரீயா இல்லையே.’’

``ஆக்சுவலா இப்ப நான் திருப்பதி யில் ஒரு டாக்சில போயிட்டிருக் கேங்க. ஈவினிங் ஃப்ரீயா கூப்புட றேங்க.’’

``இன்னும் என்ன வாங்க போங் கன்னுட்டு?’’

‘`இப்ப உரிமையோட சொல்ல லாம்ல அமுதா... ஐ லவ் யூ.”

‘`மீ டூ. திருப்பதியில் என்ன?’’

‘`ஒரு ரகசிய வேலை...’’

``ஃப்யூச்சர் பொண்டாட்டிகிட்ட சொல்லக்கூடிய ரகசியமா? சொல்லக் கூடாத ரகசியமா?’’ 

‘`தப்பில்லை. சொல்லலாம்...”

வெந்து தணிந்தது காடு - 14 - பட்டுக்கோட்டை பிரபாகர்

உதயகுமார் சுருக்கமாகச் சொல்லி முடித்ததும்... ``இவ்வளவு பிரச்னை இருக்கா இதுல? இதெல்லாம் அந்த பென்சில் கம்பெனி முதலாளியை எதிர்த்துக்கிட்டுதானே செய்றிங்க?’’

‘`ஆமாம். அவரை மட்டும் இல்ல... அவருக்கு சப்போர்ட்டா இருக்கற என் ஆபீஸ் சீனியருக்கும் தெரியாம செய்ய வேண்டியிருக்கு.’’

‘`ஜாக்கிரதையா இருங்க. அவங் களைப் பகைச்சிக்கறதால உங்களுக்கு எதுவும் பிரச்னை வந்துடப் போகுது...’’

‘`பயந்தா எந்த நல்ல விஷயத்தையுமே செய்ய முடியாதே அமுதா. ஒரு காட்டிலாகா அதிகாரியா காட்டைப் பாதுகாக்க வேண் டியதுதானே என் கடமை? என் உத்தியோக எல்லைக்கு உட்பட்ட காட்டை மட்டும்தான் காப்பாத்துவேன்னு எப்படி இருக்க முடியும்? ஆந்திரால காடு அழிஞ்சாலும் அதுவும் அர சாங்க சொத்துதானே? அது மட்டும் இல்ல... காடு நல்லா இருந்தாதான் நாடு நல்லா இருக்க முடியும்னு உனக்கு சொல்ல வேண்டியதில்லை.’’

‘`தன் வேலையை மட்டும் பார்த்துட்டுப் போனாப் போதும்னு சுயநலமா இல்லாம இப்படி சமூகத்தைப்பத்தி சிந்திக்கிறீங்களே... பெருமையா இருக்கு உங்களை நினைக்க...’’

``சரியாப் புரிஞ்சிக்கிட்டதுக்கு சந்தோஷம் அமுதா.’’

‘`ஆமாம்... நீங்க மீட் பண்ணப் போற லாயர் அபர்ணா, அந்த அபர்ணாவா?’’

‘`எந்த அபர்ணா?’’

‘`காலேஜ் டைம்ல. அந்த அபர்ணா தானே?’’

‘`கரெக்ட்.’’

‘`தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தவங்க, எப்படி தொடர்பு எல்லைக்கு உள்ளே வந்தாங்களாம்?”

``என்ன ஒரு ஷார்ப் மெமரி உனக்கு? பல பேரை விசாரிச்சு போன் நம்பர் பிடிச்சு பேசினேன்.’’

‘`பல வருஷம் கழிச்சு மீட் பண் றிங்க. இப்ப நீங்க சிங்கிள் இல்லை. எங்கேஜ்ட். அதை மனசுல வெச்சிக் கங்க உதய்.’’

‘`அம்மாடி! என்ன ஒரு பொறாமை!’’

``இது பொறாமை இல்லை. பொசசிவ்னெஸ். இனிமே நீங்க மை மேன்பா. ஒன் அண்ட் ஒன்லி டு அமுதா.’’

‘`பழைய க்ரஷ் எல்லாம் இப்ப சுத்தமா கிடையாது அமுதா.’’

‘`நம்பறேன்.’’

``சார்... டிராஃபிக் கிளியராகிடுச்சு. ஏறுங்க” என்று டாக்சி டிரைவர் குரல் கொடுக்க...

‘`நான் ஈவினிங் கூப்புடறேன் அமுதா’’ என்று போனை அணைத்து ஏறிக்கொண்டான் உதயகுமார்.

பிரின்ட்டிங் பிரஸ்ஸிலிருந்து ஸ்கூட்டரில் தன் வீட்டுக்கு வந்த தமிழ்மணி சிந்தனையோடு நடந்து அமைதியாக அமர்ந்தார்.

அவர் வந்துவிட்டதை ஸ்கூட்டர் சத்தத்தி லேயே அறிந்துகொண்ட அமுதா மாடி யறையிலிருந்து உற்சாகமாக இறங்கி வந்தவள் அவரின் முகம் பார்த்து குழம்பி னாள்.

‘`என்னாச்சுப்பா?’’ அருகில் வந்து அமர்ந்தாள்.

``மாப்பிள்ளையோட அப்பா சம்மதம் சொன்னதும் அவ்வளவு சந்தோஷப் பட்டேன். உடனே உனக்கு போன் செஞ்சு சொன்னேன்.’’

``அதுக்கென்ன?’’

``உதயகுமார் பத்தி ஒரு தப்பான நியூஸ் காதுக்கு வருதும்மா’’

``என்னப்பா?’’

``லஞ்சம் வாங்கறாராம்...’’

``சான்ஸே இல்லை.”

``எதை வெச்சிம்மா சொல்றே?’’

``உங்க மனசைக் கலைச்சது யாரு? அதைச் சொல்லுங்க முதல்ல.”

``மருது காட்டூர்ல பென்சில் ஃபேக்டரி வெச்சிருக்கற என் ஃபிரெண்டு ஜெயபால்.’’

``மொதல்ல உங்க ஃபிரெண்டு நல்ல வரா, கெட்டவரான்னு உங்களுக்குத் தெரியு மாப்பா?’’ 

``நல்லவன்தாம்மா.”

``உங்களுக்குத் தெரியலைப்பா. அவரும் அவர் மகனும் சேர்ந்து ஆந்திரால பெரிய அளவுல செம்மரம் வெட்டி இல்லீகலா கடத்திக்கிட் டிருக்காங்க. அதுக்கு ஆப்பு வைக்கிறதுக்கு உதய் ஸ்டெப்ஸ் எடுத்துக்கிட்டு இருக்காரு. அப்படி இருக்கறப்ப அவர் எப்படி இவரைப் பத்தி நல்ல வார்த்தை சொல்லுவாரு?’’

``இதெல்லாம் உனக்கு?’’

``உதய்தான் சொன்னாரு. இப்பக்கூட அவருக்கு எதிரா ஒரு காரியம் நடத்தறதுக்காகத் திருப்பதிக்குப் போயிருக்காருப்பா’’ என்றவள் விவரமாகச் சொன் னாள்.

``அவ்வளவு பெரிய அயோக்கியனா அவன்? பல வருஷத்துக்கு முன்னாடி பழக்கம். அப்பறம் டச் இல்ல. அதனால் எனக்கு எதுவும் தெரியலை. உதய் சமூக அக்கறை கொண்டவர்னு தெரியறப்போ ரொம்ப ஆனந்தமா இருக்கும்மா. இனிமே யார் எது சொன்னாலும் மனசு கலங்க மாட்டேன். நல்லவேளையா அவசரப்பட்டு நான் சம்மந்திக்கு போன் எதுவும் போட்டுடலை.’’ 

``அப்பா...’’

``சொல்லும்மா...’’

``அவர் எச்சரிக்கை செஞ்சதையும் மீறி நீங்க நடத்தப்போற எங்க கல்யாணத்துல அந்தாளு ஏதாச்சும் குழப்பம் செய்வானோன்னு கவலையா இருக்குப்பா.’’

``ஏம்மா... என் செல்வாக்கை குறைச்சலா எடை போட்டு வெச்சிருக்கியா? நான் கோடி கோடியா பணம் சம்பாதிக்கலை. ஆனா, எல்லா பெரிய இடத்துலயும் தொடர்பு வெச்சிருக்கேன்மா. நினைச்சா நாளைக்கே சி.எம் அப்பாயின்ட்மென்ட் வாங்க என்னால் முடியும். அவன் எப்படிப் பட்டவன்னு புரிஞ்சிடுச்சு. இனிமே டபுள் மடங்கு எச்சரிக்கையோட இருப்பேன். அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். எதைப்பத்தியும் கவலைப்படாம நீ சந்தோஷமா இரும்மா” என்றார் தமிழ்மணி உத்தரவாதமாக.

அபர்ணாவின் வீட்டின் முன் பகுதியில் இருந்த அவளின் அலுவலக அறையின் வாசலில் இவர்களுக்காகக் காத்திருந்த ஒரு ஜூனியர் இளைஞன் மலர்ச்சியுடன் வர வேற்றான். கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றான்.

அகலமான ஹாலில் நான்கைந்து மேஜை களில் கம்ப்யூட்டர் டெர்மினல்களுடன் பலர் இயங்கிக்கொண்டிருக்க... காடையனையும், வெட்டுக்கிளியையும் பிறகு, உள்ளே அழைப்பதாகச் சொல்லி அவள் பெயர் போட்ட அறைக்குள் உதயகுமார் மட்டும் பிரவேசித்தான். அழகாகவும் உறுத் தாத நிறங்களிலும் அலங்கரிக்கப் பட்டிருந்த அறையின் காற்றில் வாசனை திரவியம் மிதந்தது.

எழுந்து நின்று புன்னகையுடன் கைகுலுக்கிய அபர்ணா, கல்லூரி காலத்தில் பார்த்ததைவிடவும் அழகாகத் தெரிந்தாள். மொடமொட காட்டன் புடவையும், கழுத்தை ஒட்டிய கண்ணியமான பிளவுஸும் கண்ணாடியும் கம்பீரம் சேர்த்தது.

வெந்து தணிந்தது காடு - 14 - பட்டுக்கோட்டை பிரபாகர்

அவள் காட்டிய எதிர் நாற்காலி யில் அமர்ந்த உதயகுமார், ``மொதல்ல ஒரு ஹேப்பி நியூஸைச் சொல்லிட றேன் அபர்ணா. இப்ப வர்ற வழில தான் கன்ஃபர்மாச்சு. எனக்கு கல் யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு. பொண்ணு பேரு அமுதா. கள்ளக் குறிச்சி. டீச்சர்’’ என்றான்.

``அதுக்கொரு தடவை கைகுலுக் கணுமே’’ என்று அழுத்தமாகக் கைகுலுக்கி விடுவித்த அபர்ணா, ``போட்டோ வெச்சிருப்பியே... மொதல்ல காட்டு” என்றாள்.

மொபைலில் காட்டியதும், ``சூப்பரா இருக்கா உதய். பர்ஃபெக்ட் மேட்ச். என் கல் யாணத்துக்குத்தான் உன்னால் வர முடியலை. உன் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா வருவேன்பா” என்றாள்.

``அவசியம் வரணும். இப்ப என்ன பிளான்?’’

``இந்த மாதிரி மேட்டர்ஸை டீல் பண்றதுக்கு இங்க ரெண்டு மூணு மனித உரிமைகள் அமைப்பு இருக்கு. அதுல லாயர் இளவரசன்னு எனக்கு நல்ல பழக்கம். பயங்கரமான போராளி. கம்யூனிஸ்ட். கவிதை எழுதுவான். மேடைகள்ல பேசுவான். திடீர் திடீர்னு சாலை மறியல் அது இதுன்னு கொடி பிடிச்சிக்கிட்டு இறங்கிடுவான். அப்பப்ப அரெஸ்ட் செஞ்சு வெளியில விடுவாங்க. ரெண்டு தடவை ஜெயிலுக்குப் போயிட்டும் வந்திருக்கான். இங்க கொஞ்சம் பாப்புலர்கூட. அவன்கிட்டதான் கம்ப்ளீட்டா விசாரிச்சேன்.’’

``என்ன சொல்றார்?’’

``டாஸ்க் ஃபோர்ஸ்ல பெரிய பெரிய ஆபீஸர்ஸையே அவனுக்குத் தெரியும்னு சொன்னான். பத்தே நிமிஷத்துல அங்கேர்ந்து தகவல் விசாரிச்சிட்டான். கன்னியப்பன் மேல இன்னும் எந்தக் கேஸும் போடலை. ரெண்டு நாளா சும்மா கஸ்டடில வெச்சு விசாரிட்டுதான் இருக்காங்க.”

``இது தப்பில்லையா?’’

``தப்புதான். கேட்டா இப்பதான் அரெஸ்ட் செஞ்சோம்னு சொல் வாங்க. கன்னியப்பனை அரெஸ்ட் செஞ்சு கூட்டிக்கிட்டுப் போன ஹோட் டல் வாசல்ல சிசிடிவி கேமரா இருக்காம். அந்த ஃபுட்டேஜ் எடுத் துட்டா அதை வெச்சு அந்த ஆபீஸரை ஒருவழி செஞ்சிட முடியும்னு சொல் றான்.’’

``செய்யலாமே...’’

``இன்னொரு ரூட்டும் இருக்கு உதய்...’’

``அரெஸ்ட் செஞ்சு கஸ்டடில வெச் சிருக்கற ஆபீஸருக்கு மேல ஹையர் அத்தாரிட்டில சூரிய பிரகாஷ்னு ஒரு ஆபீஸராம். அவரு பக்கா ஜென்டில் மேன். ஸ்ட்ரைட் ஃபார்வர்ட். அவரு ஒரு போன் செஞ்சு சொன்னாலே கன்னியப்பனை விட்ருவாங்களாம்.”

``பின்னே என்ன? அப்படியே செய்ய லாமே...”

``சூரியபிரகாஷ் உன்னை மீட் செய்யணும்னு சொல்றார். ரெண்டு நிபந்தனை இருக்காம். அதுக்கு நீ ஒப்புக்கணுமாம்.”

``அவ்வளவு பெரிய ஆபீஸருக்கு நான் என்ன செய்ய முடியும்? அப்படி என்ன கண்டி ஷன்ஸ் அபர்ணா?’’ என்றான் உதயகுமார் ஆர்வமாக.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism