Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 18 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

ருத்ரபாண்டியன் அன்றைக்குச் செய்ய வேண்டிய அலுவல்களைப் பற்றி எழுதி வைத்திருந்த பட்டியல் காகிதத்தை எடுத்துப் பார்த்தார்

வெந்து தணிந்தது காடு - 18 - பட்டுக்கோட்டை பிரபாகர்

ருத்ரபாண்டியன் அன்றைக்குச் செய்ய வேண்டிய அலுவல்களைப் பற்றி எழுதி வைத்திருந்த பட்டியல் காகிதத்தை எடுத்துப் பார்த்தார்

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

``பாண்டி... குறிஞ்சிக்காட்டுக்கு நீ தலைவனாகணும்டா. அதுக்கு நான் என்ன சொன்னாலும் செய்வியா?’’ என்றார் ஜெயபால்.

``யாரையாச்சும் போட்டுத் தள்ளணும்னாலும் நான் ரெடிங் கய்யா... என்ன செய்யணும் சொல்லுங்க” என்றான் பாண்டி.

ஜெயபால், இன்ஸ்பெக்டர் கரிகாலனைப் பார்த்தார். ``நம்ம பிளானைச் சொல்லுய்யா கரி காலா’’ என்றார்.

``இத பாரு பாண்டி... உசுரை எடுக்கற வேலையெல்லாம் இப்ப வேணாம். தேவைப்படறப்ப சொல்றேன். இப்ப நீ என்ன செய்யணும்னா... உங்க ஊர் பஞ்சாயத்தைக் கூட்டு. தலை வரை மாத்தணும்னு பிராது கொடு.’’

``காரணம் கேப்பாங்களே!’’

``ஆந்திராவுக்கு மரம் வெட்டப் போகக் கூடாதுன்னு எடுத்த தீர்மானத்துல எனக்கு ஒப்புதல் இல்லை. என்னை மாதிரி எக்கச் சக்கமான பேருக்கு பிடிக்கல. ஆனா, வெளில சொல்ல முடியாம தவிக்கிறாங்க. அப்படின்னு சொல்லு.’’

``அதாங்க நெஜம்.’’

``தலைவருக்கு போட்டி வைங்க... அதுல அவரு ஜெயிச்சி வந்தா நான் வாயை மூடிக் கிறேன்னு சொல்லு. போட்டி போடறேன்னு சொல்லு.’’

``அது சொல்லிடலாமுங்க. ஆனாலும் கூட்டிக்கழிச்சிப் பாத்தா அந்தாளுக்குத்தான் ஆதரவு அதிகமா வரும். நான் போட்டில தோத்து போயிடுவங்க.”

``கைதூக்கிதானே தலைவரை தேர்ந்தெடுப் பீங்க?’’

``ஆமாங்கய்யா.’’

``உனக்கு ஆதரவா கை தூக்கப்போற ஒவ்வொருத்தனுக்கும் மொத நாளே சொளையா பணம் கொடுத்துடலாம். காசுக்கு கவிழாத மனுஷன் எவன் இருக்

கான் இன்னிக்கு?’’ - பாண்டியின் முகம் பல்ப் போட்டது மாதிரி பிரகாசமானது.

“எவ்ளோ கொடுப்பிங்கய்யா?’’ தயங்கிக் கேட்டான் பாண்டி.

``எவ்ளோ கொடுத்தா சரியா வரும்?’’ என்றார் ஜெயபால்.

``ஒரு பத்தாயிரம்யா!’’

``பத்தாயிரமா?’’

``ஜாஸ்தியா கேட்டுட்டனா?’’

``தலைக்கு ஒரு லட்சம் தர்றதா இருக் கேன்டா முட்டாள்!’’

“கடவுளே! ஒரு லட்சமா? ஒரு ஆளுக்காய்யா? அய்யா... நான் எழுதித் தர்றேன்... ஒரு லட்சம் கொடுத்தா ஊர்ல இருக்கற மொத்தப் பயலுவலும் என்னைத் தலைவனாக்கிடு வானுங்கய்யா” - படாரென்று அவர் காலில் விழுந்தான் பாண்டி.

``உடனே கால்ல விழறே பாரு... பெருசா வருவடா... கவுன்சிலராகி, எம்.எல்.ஏ-வாகி மந்திரியானாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல’’ என்று அவனை செல்லமாகக் காலால் உதைத் தார் ஜெயபால்.

வெந்து தணிந்தது காடு - 18 - பட்டுக்கோட்டை பிரபாகர்

மருது காட்டூர் வனச்சரக அலுவலகம். ருத்ரபாண்டியன் பைக்கில் வந்து இறங்கிய போது கைகட்டி ஓரமாக உட்கார்ந்திருந்த பழங்குடி ஆட்கள் இரண்டு பேர் அவசரமாக எழுந்து வணக்கம் வைத்ததைக் கண்டு கொள்ளாமல் விரைப்பாக உள்ளே நுழைந்தார்.

அவர் தன் அறைக்குச் சென்று மின்விசிறி போட்டுக்கொண்டு அமர்ந்ததும் வாட்சர் சுந்தரம் ஓட்டமாக வந்து வணக்கம் வைத்தான்.

பிளாஸ்ட்டிக் தண்ணீர் பாட்டில் எடுத்தார். அது காலியாக இருப்பதைப் பார்த்து சுந்தரத் தின் மீது வீசினார்.

``தண்ணிகூட பிடிச்சு வைக்காம என்னடா புடுங்கிட்டிருக்கே?”

‘இது என் வேலை இல்ல சார்’ என்று என்றா வது ஒரு நாள் சொல்லிவிட வேண்டும் என்று வழக்கம்போல நினைத்துக்கொண்டு பாட்டி லுடன் தண்ணீர் பிடிக்கச் சென்றான் சுந்தரம்.

ருத்ரபாண்டியன் அன்றைக்குச் செய்ய வேண்டிய அலுவல்களைப் பற்றி எழுதி வைத்திருந்த பட்டியல் காகிதத்தை எடுத்துப் பார்த்தார். குண்டூசி எடுத்து பல் இடுக்குகளில் சுத்தம் செய்து துப்பியபடி படித்தார்.

சுந்தரம் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து வைத்ததும், “வாசல்ல யாருய்யா அவனுங்க?” என்றார்.

``சந்தன மரத்துல கிளை வெட்டி முதுகுல செருகிட்டுப் போனானுங்க. நான்தான் பிடிச்சேன்.’’

``எவ்ளோ தேறும்?’’

``மூணு, நாலு கிலோ தேறும்ங்கய்யா.’’

“யோவ்... எடையைக் கேக்கல... காசு வெச்சிருக்கானுங்களா? எவ்ளோ தேறும்னு கேட்டேன்.”

``நான் கேக்கல.”

``ஏன் கேக்கல? போய்க் கேளு.’’

“இல்ல சார்... உதய் சாருக்குத் தெரிஞ்சா வம்பாயிடும்.’’

``என்னய்யா வம்பாயிடும்? அவன் உத்தமனா இருந்தா, அவன் வரைக்கும் வெச்சிக்கட்டும். நீ போயி கேளு.’’

``வரச் சொல்றேன். நீங்களே கேட்டுக்கங்க.’’

``ஓ... அவ்ளோ தூரத்துக்குப் போயிடுச்சா? இந்த ஆபீஸ்ல யார்யா பெரிய அதிகாரி அவனா, நானா?’’

சுந்தரம் அமைதியாக நின்றான். அவனை முறைத்துப் பார்த்த ருத்ரபாண்டியன்,

“அவரு புத்தரு. நீ அவருக்கு சிஷ்யரா? திருந் திட்டிங்களாக்கும்... போடா... போடா... அவனுங்களை வரச்சொல்லு. நானே பேசிக் கிறேன்’’ என்றார்.

சற்று நேரத்தில் உள்ளே வந்த அவர்கள் இருவரையும் முதலில் அறையின் கதவை மூடிவிட்டு வரச் சொன்னார்.

``நாலஞ்சு கிலோ தேறும்னு சொன்னாரே வாட்சர்...’’

``அய்யா... அவ்ளோல்லாம் வராதுங்க. அய்யா... சும்மா மருந்துக்கு ரெண்டு கிளை உடைச்சோமுங்க...’’

``மருந்துக்கா?”

``ஆமாங்க. வெயில் கொப்பளத்துக்கு மேல போட்டா எரிச்சல் தெரியாதுங்க.”

``ஓ... இதை நீங்க நாட்டு மருந்துக்கடையில் விக்கப்போறதில்லை? யார்கிட்டடா காது குத்தறிங்க? சரி... சரி... எடையை விடு. வெட்டுன துண்டுக்கு எவ்ளோ கொடுப்பாங்க உங்களுக்கு? அட... சும்மா சொல்டா. நான் அடிக்காம பொறுமையா விசாரிச்சிட்டிருக்கேன். பெல்ட் டைக் கழட்னேன்னு வெச்சிக்க...’’

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

``கையும் களவுமா பொருளோட பிடிச்சாச்சு. கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல தள்ளினேன்னு வெச்சிக்க... இன்ஸ்பெக்டர் வேற மாதிரி விசாரிப்பாரு... தெரியுமில்ல...’’ ``வேணாங்கய்யா.”

வெந்து தணிந்தது காடு - 18 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``அப்ப சொல்லு... நிஜம் பேசு!”

``ஆளுக்கு ஆயிரம் கொடுப்பாங்கய்யா.”

``பார்த்தியா? அப்பவும் பொய் வருதே... அமேசான்ல ஒரு கிராம் சந்தனம் பத்து ரூபாடா. நீங்க திருடின அஞ்சு கிலோ சந்தனத்தோட மதிப்பு அம்பதாயிரம். பாதியாவது உங்களுக்குக் கொடுப்பானுங்கடா.”

``அய்யா... சத்தியமா ஆளுக்கு ஆயிரம்தான் குடுப்பாங்க.”

``கொள்ளையடிக்கிறவன்கிட்டயே கொள்ளையடிக் கிறதுன்றது இதுதான்டா. சரி... போவட்டும். ஒரு வேலை செய்றிங்களா?’’

``எவ்ளோய்யா கொடுக்கணும்?’’

“இந்தத் தடவை அப்படி வேணாம். வேற மாதிரி செய்யலாமா?’’

“சொல்லுங்கய்யா.”

“போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லிட்டு உங்க ரெண்டு பேரையும் அந்த சந்தனமரக் கட்டைங் களோட ஜீப்புல ஏத்தி கூட்டிக்கிட்டுப் போவேன். வழில இறக்கிவிட்ருவேன்.’’

``உங்களுக்குப் புண்ணியமா போவும்யா.”

``எனக்கு புண்ணியம்லாம் வேணாம். பதிலுக்கு நீங்க ஒரு சின்ன வேலை செய்யணும். நம்ம டெப்டி ரேஞ்சர் உதயகுமார் குவாட்டர்ஸ் தெரியும்ல?’’

``தெரியும்யா.’’

“இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் இங்க டூட்டிக்கு வந்துடுவாரு. நீங்க அவரோட குவாட்டர்ஸ்ல ஒரு வேலை செய்யணும். அவன் பெட்ரூம்ல கட்டில்ல மெத்தைக்கு அடியில் ரெண்டு கட்டையையும் வெச்சிடணும்.’’

``வீடு பூட்டிருக்காதுங்களா?’’

``பெட்ரூம்ல கட்டிலுக்குப் பக்கத்துல காத்துக்காக ஒரு ஜன்னலைத் திறந்தேதான் வெச்சிருப்பான். ஜன்னல் வழியாவே வெச்சிடலாம். இதை வெளிலேர்ந்தே செய்ய முடியும்.’’

``அய்யா! அப்பறம்?’’

``அதுக்கப்பறம் ஆக வேண்டியதை நான் பார்த்துக்கறேன்.

போலீஸ் உங்களைத் தேடிப் பிடிக்கும். அப்போ நீங்க நான் சொல்ற மாதிரி சொல்லணும்.’’

``எப்டிங்கய்யா?’’

``நாங்க காட்ல திருட்டுத்தனமா சந்தன மரத்தை வெட்டி எடுத் துட்டுப் போறப்ப டெப்டி ரேஞ்சர் பார்த்துட்டாரு. தண்டனை இல்லாம விடணும்னா அந்த ரெண்டு கட்டைங்களையும் குடுத்துட்டுப் போயிடுங்கன்னு சொன்னாரு. லஞ்சமா அதைக் குடுத்தோம்னு சொல்லணும். சொல்வீங்களா?’’

இருவரும் மீண்டும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு சின்ன தயக்கத் துக்குப் பிறகு, தலையசைத்தார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷ னுக்கு அழைத்துச் செல்வதாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு, டிரைவர் வேண்டாம் என்று விலக்கிவிட்டு ருத்ரபாண்டியனே ஜீப்பை ஓட்டிக்கொண்டு விரைந்தார்.

உதயகுமார் குவாட்டர்ஸுக்கு வெகு முன்னதாக இருவரையும் இறக்கி விட்டுவிட்டு திரும்பும்போது, போனில் இன்ஸ்பெக்டர் கரிகாலனுடன் பேசினார்.

``பாண்டித்துரையை லஞ்சம் கொடுக்க வெச்சு உதயகுமாரை லஞ்ச ஒழிப்புத் துறையில் மாட்டிவிடணும்னு பேசினமே... அதுக்குப் பதிலா இன்னிக்கு வேற ஒரு திடீர் யோசனை வந்திச்சு. இந்த மேட்டர்ல வேற வெளி டிபார்ட்மென்ட்டுக்கு அவசியமே இல்ல.

நீயே இறங்கி ஆக்‌ஷன் எடுக்க முடியும் கரிகாலன்.”

``என்னய்யா சொல்றே?’’

விவரமாகச் சொன்னதும்... “யோவ்... செம மூளைக்காரன்யா நீ” என்றார் கரிகாலன்.

சேலம். கலெக்டர் அலுவலகம். வாசலில் கலெக்ட்டரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆங்காங்கே நின்றிருந்தார்கள்.

உள்ளே கலெக்டர் அறைக்கு வெளியில் காத்திருந்த பிரமுகர்களில் யூனிபார்மில் உதயகுமாரும் இருந்தான்.

முதலில் சில பிரமுகர்கள் சந்தித்துவிட்டுப் போனதும் அவன் அழைக்கப்பட்டான். உள்ளே வந்தவன் கலெக்டர் இருக்கையில் அமர்ந்திருந்த கண்ணாடி அணிந்த பானுமதி யைப் பார்த்து சல்யூட் அடித்துவிட்டு, அவர் அமரச் சொன்னதும் அமர்ந்தான்.

பானுமதி காட்டன் புடவையில்,

சின்ன பொட்டிட்டு, கையில் வாட்ச் மட்டும் கட்டி புன்னகை ஏந்திய முகத்துடன் இருந்தார். ``மிஸ்டர் உதயகுமார்... கான்ஃபி டென்ஸ்ஷியல்னு போட்டு நீங்க எனக்கு அனுப்பிச்ச கடிதத்தைப் பார்த்தேன். நேர்லயே கூப்புட்டுப் பேசறதுதான் சரின்னு பட்டது. அதான் வரச் சொன்னேன்.’’

``அதுல நான் கொடுத்திருக்கிற விஷயங்கள் எல்லாமே வரிக்கு வரி சத்தியம் மேடம். எங்க அலுவலகத்துல அத்தனை தப்பு நடக்குது. எனக்குத் தட்டிக்கேக்கற அதிகாரம் இல்லை. என்னால் எதுவும் செய்ய முடியலை. நேர்மை பேசுனா விரோதி ஆயிடறேன்.’’

“இது சம்பந்தமா நீங்க சேலத்துல இருக்கற உங்க டிபார்ட்மென்ட் டிவிஷனல் அலுவலகத் துக்குதான் புகாரை அனுப்பிருக்கணும். இல்லையா மிஸ்டர் உதயகுமார்?’’

``ஆமாம் மேடம். குறிஞ்சிக்காடு மலை கிராமத்துக்கு நியாயமா சேங்ஷன் செய்ய வேண்டிய ரோடு போடற திட்டத்துக்கு கிளியரன்ஸ் கொடுக்காம சேலம் ஆபீஸ்லதான் இழுத்தடிச்சிட்டிருக்காங்க.’’

``ஆமாம். அது எனக்கும் தெரியும்.’’

``அப்படி இருக்கறப்ப அங்க நியாயம் எப்படிங்க மேடம் கிடைக்கும்? நீங்க மனசு வெச்சா அந்த ரோடு திட்டத்தைக் கொண்டு வர முடியும் மேடம். அந்த ஊர்ல உள்ள ஜனங்க பல தடவை உங்ககிட்ட நேரடியா மனு கொடுத்திருக்காங்க. அதுக்கான ஃபண்டும் சாங்ஷன் ஆயிடுச்சின்னு தெரியும் மேடம்.”

``உண்மைதான். தடையா இருக்கற ஒரே விஷயம் உங்க டிபார்ட்மென்ட் குடுக்க வேண்டிய கிளியரன்ஸ் சர்ட்டிஃபிகேட்தான்.”

``நீங்க அனுமதிச்சா ஒரு யோசனை சொல்ல லாமா மேடம்?’’ என்று உதயகுமார் சொன்ன அதே நேரத்தில்...

அவன் குவாட்டர்ஸில் அந்த சந்தனக் கட்டைகள் வைக்கப்பட்டன.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism