Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 21 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

`உதயகுமார்... எதுக்கு மீடியா முன்னாடி விசாரிக்கணும்னு கேக்கறிங்க?” என்றார் மாஜிஸ்ட்ரேட் உதயகுமாரிடம்.

வெந்து தணிந்தது காடு - 21 - பட்டுக்கோட்டை பிரபாகர்

`உதயகுமார்... எதுக்கு மீடியா முன்னாடி விசாரிக்கணும்னு கேக்கறிங்க?” என்றார் மாஜிஸ்ட்ரேட் உதயகுமாரிடம்.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

``யார் முன்னாடி பழி போட்டிங்களோ... அவங்க முன்னாடிதானே நான் தப்பு செய்யலன்னு நிரூபிச்சாகணும்?’’ என்றான் உதயகுமார்.

``எப்படி நிரூபிக்கிறேன்னு நானும் பார்க்கறேன். இறங்குடா” என்றார் உத்தரவாக.

மீடியா கேமராக்கள் தொடர அவனை மாஜிஸ்ட்ரேட் வீட்டின் வாசலுக்கு நடத்தினார் கரிகாலன்.

வீட்டுக்குள் உதயகுமாரை அழைத்து வந்தார். காத்திருந்த மாஜிஸ்ட்ரேட் வேட்டி சட்டையில் இருந்தார். கொட்டாவியை மென்றபடி கரிகாலன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் படித்தார்.

படித்தபடி, ``என்னய்யா நடக்குது? நான் இவரை மீடியா முன்னாடி விசாரிக்கணும்னு எம்.பி போன் பண்றாரு. மினிஸ்ட்டரும் போன் பண்றாரு’’ என்றார்.

``அதுக்கெல்லாம் அவசியம் இல்லங்கய்யா. கொஞ்சம் பசையான பார்ட்டிங் கய்யா. அதான் செல்வாக்கைக் காட்றாரு. குற்றச்சாட்டு, ஆதாரம் எல்லாம் கச்சிதமா இருக்குதுங்க.”

``உதயகுமார்... எதுக்கு மீடியா முன்னாடி விசாரிக்கணும்னு கேக்கறிங்க?” என்றார் மாஜிஸ்ட்ரேட் உதயகுமாரிடம்.

உதயகுமார், கரிகாலனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, ``குற்றத்தை நிரூபிக்கிறதுக்கு முன்னாடியே மீடியாவைக் கூட்டி என்னைத் திருடன்னு முத்திரைக் குத்தி என் பேரை இன்ஸ்பெக்டர் டேமேஜ் பண்ணிருக்காரு. அந்த நியூஸ் எல்லா சேனல்லயும் வந்துடுச்சு. நான் தப்பு செய்யலன்னு மீடியா முன்னாடி நிரூபிக்க விரும்பறேன். அதுதான் நியாயம்னு நினைக்கிறேன்.’’

சில விநாடிகள் யோசித்தார் மாஜிஸ்ட்ரேட். ``அத்தனை பேரையும் அனுமதிக்க முடியாது. ஒரு நாலு பேரை மட்டும் உள்ளே வரச் சொல்லுங்க. இன்ஸ்பெக்டர்... உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே...’’

வெந்து தணிந்தது காடு - 21 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``தாராளமா வரட்டுங்கய்யா.”

நான்கு முன்னணி சேனல்களின் நபர்கள் மட்டும் கேமராக்களுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

“இங்க நடக்கற விசாரணையை நீங்க பதிவு செய்யலாம். கடைசியா நான் உத்தரவு கொடுத்தப் பறம்தான் உங்க சேனலுக்கு அனுப்பணும். நடுவுல நீங்க எதுவும் பேசக் கூடாது. கேள்வி எதுவும் கேட்கக் கூடாது. புரிஞ்சதா...’’ - மீடியாக்காரர் களுக்கு மேலும் சில குறிப்புகள் கொடுத்துவிட்டு மாஜிஸ்ட்ரேட் அந்தத் திருடர்களை நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் இருவரின் விரல்களும் சன்னமாக நடுங்குவதைக் கவனித்தார்.

``என்னப்பா... இந்த அதிகாரி சந்தன மரத்தை வெட்டிக்கங்க, எனக்கும் பங்கு கொடுங்கன்னு கேட்டாரா?’’ - ஆமோதித்து தலையசைத்தார்கள்.

``தலையை ஆட்டக் கூடாது. வாயைத் தொறந்து சொல்லணும்.”

``ஆமாங்கய்யா. கேட்டாரு.’’

``எத்தனை துண்டு குடுத்திங்க?”

``ரெண்டுங்கய்யா.’’

``இன்ஸ்பெக்டர் இவர் வீட்ல சோதனை போட்டப்ப நீங்களும் அங்க இருந்திங்களா?’’

``ஆமாங்கய்யா.”

``இவர் வீட்ல போலீஸ் கைப்பத்தின அதே ரெண்டு துண்டுதான் நீங்க கொடுத் ததா?’’

``ஆமாங்கய்யா” - இப் போது உதயகுமாரைப் பார்த்தார்.

``உங்க தரப்பு பதில் என்னங்க?’’

``சார்... இது பொய்க் குற்றச்சாட்டு.”

“இன்ஸ்பெக்டருக்கும் உங்களுக்கும் ஏதாச்சும் தனிப்பட்ட பகை இருக்கா?’’

“இல்ல சார்.’’

``பின்ன எதுக்காக இவர் பொய்யா குற்றச் சாட்டு வைக்கணும்?’’

“என் மேல இருக்கற பகைக்காக செய்யணும் னும் அவசியம் இல்ல சார். வேற ஒருத்தரோட இருக்கற நட்புக்காகச் செய்யலாமே.”

புன்னகைத்த மாஜிஸ்ட்ரேட், “திருடினவங்க சாட்சி சொல்றாங்க. திருடப்பட்ட பொருளை உங்க வீட்லேர்ந்து கைப்பற்றியிருக்காங்க.’’

``பழி சுமத்தறதுன்னு முடிவாயிட்டா இப்படித்தானே சார் செட்டப் செஞ்சாகணும்.’’

``நீங்க செய்யலன்னு வாய் வார்த்தையா மட்டும் சொன்னா சட்டத்துக்குப் போதாதே உதயகுமார். இது செட்டப்புன்னு எப்படி சொல்றிங்க?”

``உண்மைதான் சார். உங்ககிட்ட ரெண்டு வார்த்தை ரகசியமா ஒண்ணு சொல்லணும் சார்’’ - உதயகுமார், அருகில் சென்று அவர் காதில் கிசுகிசுத்தான். அவர் தலையசைத்தார். உதயகுமார் மீண்டும் தள்ளி வந்து நின்றதும் இரண்டு திருடர்களையும் பார்த்தார்.

``ரெண்டு பேர்ல காத்தமுத்து... நீ இங்கயே நில்லு. மருது... நீ வெளில போய் நில்லு. நான் கூப்புட்டப்புறம் வரலாம்.’’

மருது அறைக் கதவை ஓசையில்லாமல் திறந்து வெளியே சென்றதும் மீண்டும் கதவு மூடிக் கொண்டது.

காத்தமுத்து எச்சில் விழுங்கினான். ``காத்தமுத்து... வெட்டின கிளைங்கள்ல ரெண்டு துண்டுதானே இவருக்குக் கொடுத்திங்க. அதுல ஒண்ணும் மாற்றம் இல்லையே?’’

“இல்லைங்கய்யா.”

“சரி... மொத்தம் எத்தனை கிளைங்க வெட்டினிங்க?’’

காத்தமுத்து பதறிப்போய் இன்ஸ்பெக்டர் கரிகாலனை தவிப்புடன் பார்த்தான்.

“இன்ஸ்பெக்டரா வெட்டி னாரு? அங்கப் பார்க்கற? என்னைப் பார்த்து பதில் சொல்லு.’’

``அது... அது... ஞாபகமில்லங்க.”

``ஏம்ப்பா... நேத்துதானே நடந்தது? அதெப்படி ஞாபகமில்லாமப் போகும்? அதெல்லாம் வித்து காசு பார்த்துட்டிங்கன்னு இன்ஸ்பெக்டர் இதுல எழுதிருக்காரே...’’

``அஞ்சுங்கய்யா” என்றான் அவசரமாக.

``அதுல மூணை நீங்க எடுத்துக்கிட்டு ரெண்டை இவர் வீட்ல வெச்சிட்டிங்களா?’’

“வீட்ல வைக்கலய்யா. இவர் கைல கொடுத் துட்டு நாங்க போய்ட்டோம்.”

``அப்படியா? மருதுவை வரச் சொல்லுங்க. காத்தமுத்து... நீ போய் வெளில இரு.’’

காத்தமுத்து போய், மருது வந்ததும் அதே கேள்வியை அவனிடம் கேட்டார் மாஜிஸ்ட் ரேட். இன்ஸ்பெக்டர் கரிகாலன் கைக்குட்டை எடுத்து நெற்றி வியர்வையை ஒற்றிக் கொண்டார். மருதுவும் பதறினான். பதில் சொல்லாமல் யோசித்தான்.

“சொல்லு... இதுல என்ன இவ்வளவு யோசனை?’’ என்றார் மாஜிஸ்ட்ரேட் அதட்டலாக.

``மொத்தம் நாலு கிளை வெட்டி துண்டாக்கு னோம். ஆளுக்குப் பாதின்னு முடிவாகி அவருக்கு ரெண்டு கொடுத்துட்டு, நாங்க ரெண்டு எடுத்துக்கிட்டோம்.’’

மீடியா நபர்களின் பகுதியில் இருந்த இருவர் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். மாஜிஸ்ட்ரேட் காத்தமுத்து வையும் உள்ளே வரச்சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்தார்.

“என்ன போலீஸ் ஆபீஸர்... பலூன் மாதிரி டப்புன்னு உடைஞ்சிடுச்சே உங்க கேஸு?’’

``அய்யா... இவனுங்க கஞ்சா அடிக்கிற பயலுங்க. அவ்வளவு சரியா ஞாபகம் வெச்சிக் காம...’’

``உங்களுக்கே உங்க பதில் சமாதானமா இருக்கா கரிகாலன்?’’

``இதுக்கு மேலயும் ஒரு ஆதாரம் இருக்கு சார்’’ என்றான் உதயகுமார்.

``என்ன?’’

“என் வீட்ல சோதனை போட்டப்ப என் மேல சார்ஜ் ஷீட்ல எப்படியெல்லாம் மாத்தி எழுதுவேன்னு என்கிட்ட பகிரங்கமா சொன் னாரு சார். அதை என் மொபைல்ல குரல் பதிவு செஞ்சிருக்கேன். எல்லாரும் கேக்கணும்.”

தன் மொபைலில் வாய்ஸ் ரெக்கார்டர் ஆப்பில் இருந்த ரெக்கார்டிங் ஃபைலை இயக்க... திமிராக கரிகாலன் பேசியது ஒலித்தது.

“இது உங்க குரலே இல்லைன்னு சொல்லப் போறிங்களா கரிகாலன்?’’ என்று கடுமையாக மாஜிஸ்ட்ரேட் கேட்டதும் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மீண்டும் கைக்குட்டையை உபயோகித்தார்.

“இதுக்கு மேல் இந்த எஃப்.ஐ.ஆருக்கு ஒரு அர்த்தமும் இல்லை. உங்க எஸ்.பி-க்கு போன் செய்யப்போறேன். உங்களை சஸ்பெண்ட் செஞ்சாகணும். இங்கேயே இருங்க. உதய குமார், நீங்க போகலாம். இங்கே பதிவானதை மீடியா தாராளமா ஒளிபரப்பலாம். அதுக்கு அனுமதி கொடுக்கறேன். வேணும்னா உங்க பதிவை மத்த சேனல்களுக்கும் பகிர்ந்துக்கலாம்’’ என்றார் மாஜிஸ்ட்ரேட்.

கரிகாலன் அவமானமாகக் கடுகடுவென்று நின்றுகொண்டிருக்க... மாஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு வெளியேறிய உதயகுமாரை மிச்சமிருந்த மீடியா நபர்கள் சூழ்ந்துகொள்ள... அவர்கள் முன்பாக கம்பீரமாகப் பேசினான் உதயகுமார்.

``எல்லாருக்கும் வணக்கம். இன்னிக்கு ஈவ்னிங் உங்களுக்கு மத்தியில் என்னை சந்தன மரம் வெட்ற திருட்டுக் கும்பலோட தொடர்பு உள்ளவன்னு பகிரங்கமா குற்றம் சாட்டினார் இன்ஸ்பெக்டர் கரிகாலன். இப்போ அது என் மேல திட்டமிட்டு போடப்பட்ட பழின்னு மாஜிஸ்ட்ரேட் முன்னாடி நிரூபிச்சிட்டேன். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய ஏற்பாடு செய்றார். நான் தனிப்பட்ட முறையில் அவர் மேல மான நஷ்டஈடு வழக்கு போடறதா இருக்கேன்.”

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்வி களுக்கு விளக்கமாகப் பதில் சொல்லத் தொடங் கினான் உதயகுமார்.

கள்ளக்குறிச்சி. உதயகுமாரையும் அவர் குடும்பத்தாரையும் வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் தமிழ்மணி.

உதயகுமாரின் கையை அழுத்தமாகப் பற்றிக் குலுக்கி நெகிழ்ச்சியுடன் சொன்னார், ``மாப் பிள்ளை... உங்களை நினைச்சா எனக்குப் பெரு மையா இருக்கு. உங்க மேல விழுந்த பழியையும் துடைச் சிட்டிங்க. இன்ஸ்பெக்டரை யும் சஸ்பெண்ட் செய்ய வெச்சிட்டிங்க.’’

``அது மட்டும் இல்ல மாமா... இன்னொரு நல்ல விஷயமும் நடந்திருக்கு. இன்ஸ்பெக்டரோட சேர்ந்து இந்த சதியில் ஈடுபட்டது ரேஞ்சர் ருத்ரபாண்டியன்னு கலெக்டருக்கு நான் எடுத்துச் சொன்னதால அவருக்கு வேற இடத் துக்கு டிரான்ஸ்ஃபர் போட ஏற்பாடு செஞ்சி ஆர்டர் அனுப்பிட்டாங்க’’ என்றான் உதய குமார்.

அவரிடம் பேசியபடியே அவன் கண்கள் அமுதாவைத் தேடின. கொஞ்ச நேரத்தில் பட்டுப் புடவையில் வந்து எல்லோரையும் வணங்கி வரவேற்ற அமுதாவை உதடுகளில் புன்னகை வழிய பார்த்த உதயகுமார் ரகசிய மாக தம்ஸ் அப் முத்திரை காட்டினான்.

சம்பிரதாயமாகத் தட்டுகள் மாற்றி, திரு மணத்துக்கு நாள் குறித்தார்கள். திருமணத்தை எப்படி நடத்தலாம், எத்தனை பேரை அழைக்க லாம் என்று மற்ற விஷயங்களை எல்லோரும் பேசத் தொடங்க... அமுதாவுக்கு, ‘மொட்டை மாடிக்கு வாம்மா மின்னல்’ என்று குறுஞ் செய்தி அனுப்பிவிட்டு இவனும் நைஸாக நழுவினான்.

வெந்து தணிந்தது காடு - 21 - பட்டுக்கோட்டை பிரபாகர்

மொட்டைமாடியில்... மாடிப் பூந்தோட்டத் தில் நிழல் குடையின் கீழே அமர்ந்து ரொம்ப நேரம் ஒருவரையொருவர் ஆசையாகப் பார்த்துக்கொண்டார்கள் இருவரும்.

``பதினஞ்சு நாள்ல கல்யாணம். அப்புறம்?’’ என்றான் உதயகுமார்.

``அப்புறம் என்ன?’’ என்றாள் அமுதா.

``ஹனிமூன் எங்க பிளான் பண்ணலாம்னு கேட்டேன்”

``பண்ணலாம். பண்ண லாம். மொதல்ல பதில் சொல்லுங்க. உங்களுக்கு பயமா இல்லையா?’’

“எதுக்கு?”

“இப்போ ரேஞ்சரும் இன்ஸ்பெக்டரும் உங்களால் பாதிக்கப்பட்டிருக்காங்க. ஜெயபாலும் வேற செம கடுப்புல இருப்பார்.’’

``ஆபீஸ்ல புது ரேஞ்சர் போடறவரைக்கும் நான் தான் அத்தாரிட்டி. கலெக் டர் பானுமதியோட சப் போர்ட் இருக்கு. மீடியா சப்போர்ட் இருக்கு. குறிஞ்சிக்காடு ஜனங்களோட சப்போர்ட் இருக்கு. என் அமுதாவோட சப்போர்ட் இருக்கு. இத்தனை இருக்கறப்ப எதுக்கு நான் பயப்படணும்?’’ என்றான் உதயகுமார் கம்பீரமாக.

குயிலருவிக்கு அருகில் காற்று சிலுசிலு வென்று அடித்தாலும் ருத்ரபாண்டியனும் கரிகாலனும் சூடாக இருந்தார்கள். கண்கள் சிவக்குமளவுக்கு குடித்தபடி ஆவேசமாகப் பேசினார்கள்.

``அந்த ...... மவனை என்ன செய்யப் போறோம்?’’ என்றார் ஆத்திரமாக கரிகாலன்.

“சொல்றேன் கேளு” என்றார் ருத்ர பாண்டியன்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism