Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 24 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

அவர் திருந்திட்டார் சார், போலீஸ்ல அவரே சரணடையப் போறார் சார்னு நீங்க சொல்லியிருந்தாதான் அதிர்ச்சி அடைஞ் சிருப்பேன்.

வெந்து தணிந்தது காடு - 24 - பட்டுக்கோட்டை பிரபாகர்

அவர் திருந்திட்டார் சார், போலீஸ்ல அவரே சரணடையப் போறார் சார்னு நீங்க சொல்லியிருந்தாதான் அதிர்ச்சி அடைஞ் சிருப்பேன்.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

பைக்கை நிதானமான வேகத்தில் ஓட்டி னான் உதயகுமார். சட்டையின் காலர்கள் பறவைகளின் இறக்கைகளாய்த் துடித்தன. இருபுறமும் காட்டு மரங்கள் தலையசைத்துக் கடந்தன. குயிலருவியிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் அதிகரித்தது. காற்றில் சாரலின் மைக்ரோ துளிகள் பறந்து வந்து முகத்தைத் தொட்டு சிலிர்க்கச் செய்தன. பல வகை பறவைகள் கலவை இசை வழங்கின.

அந்த மறைவிலிருந்து கொஞ்சமாகத் தலையை மட்டும் எட்டிப்பார்த்த பாண்டி, கைத்துப்பாக்கியை இன்னும் அழுத்தமாகப் பிடித்தான். செய்யப்போகிற காரியத்தின் பயங்கரம் வியர்க்கச் செய்தது. கைக் குட்டையால் முகம் துடைத்துக்கொண்டான்.

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

மண்பாதை சீராக இல்லாததால் குதித்துக் குதித்து வந்த பைக்கில் மிகச் சரியாக குறி தவறா மல் உதயகுமாரின் நெஞ் சில் சுட்டுவிட வேண் டுமே என்று அவனுக்கு பதைப்பாக இருந்தது.

ஒலித்த போன் உதயகுமாரை பிரேக் அடிக்க வைத்தது. பெயர் பார்த்ததுமே முக்கியம் என்று உணர்ந்தான். உடனே பேசினான்.

“சொல்லுங்க கெளசிக்.’’

“எங்க இருக்கிங்க சார்?’’

“குயிலருவிக்குப் பக்கத்துல... என்ன விஷயம்?’’

பாண்டி இருந்த தூரத்திலிருந்து உதயகுமார் பேசுவதைத் துல்லியமாகக் கேட்க முடிந்தது.

இப்போது பைக் அசையாமல் அப்படியே ஓரிடத்தில் நின்றதால் வாகாக குறி தவறாமல் சுட முடியும் என்றாலும்... அவன் என்ன பேசுகிறான் என்பதைக் கவனித்துவிட்டு, பிறகு சுடலாம் என்று தீர்மானித்தான் பாண்டி. உன்னிப்பாகக் கேட்கத் தொடங்கினான்.

“பத்திரம் சார். உங்களைக் கொலை செய்ய ஜெயபால் திட்டம் போட்ருக்கார்’’ என்றான் கெளசிக், எதிர்முனையில் பென்சில் தொழிற் சாலையில் குடோன் பகுதியில் மறைவாக நின்றபடி.

“அப்படியா?’’ என்றான் உதயகுமார்.

“என்ன சார்... உங்களுக்கு அதிர்ச்சியா இல்லையா?’’

வெந்து தணிந்தது காடு - 24 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“அவர் திருந்திட்டார் சார், போலீஸ்ல அவரே சரணடையப் போறார் சார்னு நீங்க சொல்லியிருந்தாதான் அதிர்ச்சி அடைஞ் சிருப்பேன். ஜெயபாலுக்கு இப்படித்தானே யோசிக்கத் தெரியும்.’’

தன் முதலாளியின் பெயர் வந்ததும் இன் னும் காதுகளை உன்னிப்பாக்கினான் பாண்டி.

“அவர் யாரை வெச்சு எப்படி திட்டம் போட்ருக்கார்னு தெரியலை. ஆனா, உங் களைக் கொன்னுட்டதா வரப்போற தகவலுக் காகக் காத்திருக்கேன்னு தன் பையன்கிட்ட போன்ல பேசுனதை நான் கேட்டேன்.’’

இரண்டு பக்கமும் கால்களை ஊன்றிய படியே பேசிக்கொண்டிருந்த உதயகுமார் பைக்கின் எஞ்சினை அணைத்தான். இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு மெதுவாக நடந்த படி பேசத் தொடங்கினான்.

“கொலை செய்றதெல்லாம் சாதாரண வேலை இல்லைங்க கெளசிக். நான் பார்த்துக் கறேன். ஜெயபால் பேசுனதை எல்லாம் ரெக்கார்ட் செஞ்சிருக்கிங்களா?’’

“ஆமாம் சார்.’’

“வெரிகுட். அதை வெச்சே அவரை அரெஸ்ட் செஞ்சு உள்ளே கொண்டார முடியுமே. எப்படி பக் செஞ்சிங்க?’’

“ஒரு முக்கியமான ஃபைலை எடுத்துக்கிட்டு அவரே வீட்டுக்கு வரச்சொன்னார் சார். போயிருந்தேன். குளிச்சிட்டு வந்துடறேன் வெயிட் பண்ணுன்னு போனார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரோட பெட்ரூம்ல புக் ஷெல்ஃப்ல டிவைஸை வெச் சிட்டேன் சார். இன்னொரு முக்கியமான தகவலும் கிடைச்சிருக்கு சார்.’’

“என்ன?’’

பாண்டிக்கு பல விஷயங்கள் தெளிவாகப் புரிந்தன.

`இந்தக் கொலைச் சதி உதயகுமாருக்கு இப்போது தெரிந்துவிட்டது. தகவல் சொல்கிறவன் கெளசிக் என்கிற நபர். இந்தக் கொலைத் திட்டத்தைப் பற்றி ஜெயபால் சார் யாரிடமோ பேசியிருக்கிறார். அவர் பேசியதை ரகசியமாகப் பதிவு செய்துவிட்டார்கள்.

அவர் யாரிடம் என்ன பேசினார்? தெரியாது. அவர் பேசியதில் கொலை செய்ய பாண்டியிடம் துப்பாக்கி கொடுத்து அனுப்பி யிருக்கிறேன் என்று என் பெயர் வந்தால் என் னாகும்? போச்சு... எல்லாம் போச்சு! கொலை செய்துவிட்டு நான் எப்படி சுதந்திரமாக வாழ முடியும்? போலீஸ்காரர்கள் கண்டிப்பாகப் பிடித்துவிடுவார்கள்.'

இப்போது என்ன செய்வது என்று குழப்ப மாக இருந்தது.

`பிடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தைரியமாக முதலாளி சொன்னபடி சுட்டுவிட்டு அவர் தரும் பத்து லட்சத்தை வாங்கிக்கொண்டு வட நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடலாம். ஆனால், இவன் முதலாளியைக் கைது செய்வது பற்றியெல்லாம் ஏதோ பேசுகிறானே... விஷமக்காரன். மகா புத்திசாலி. நிறைய பேருடன் தொடர்பில் இருப்பவன். ரேஞ்சரை அலுவலகத்தை விட்டு கிளப்ப வைத்தவன். இன்ஸ்பெக்டரை வேலை யிலிருந்து தூக்க வைத்தவன். இவன் பேசுவதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியப் படுத்த முடியாது.

நான் இவனை சுட்டுவிட்டுப் போய் நிற்கும் போது முதலாளியை அதற்குள் கைது செய்துவிட்டால் எனக்கு பத்து லட்சம் ரூபாய் யார் தருவார்கள்?'

ஒரு முடிவுக்கு வந்த பாண்டி கையில் பிடித் திருந்த துப்பாக்கியை பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

`இவர்கள் இன்னும் என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து அதை முதலாளிக்கு சொல்வது தான் சரி.'

“ஹைதராபாத்ல ஒரு பெரிய தொகையை தங்கமா மாத்தியிருக்காங்க சார். அந்தத் தங்கத்தை நாளைக்கு இங்க பென்சில் ஃபேக்டரி குடோனுக்குக் கொண்டு வந்து பத்திரப்படுத்தப் போறாங்க சார்’’ என்றான் கெளசிக்.

“ஓ மை காட்! இதாங்க ஹாட் நியூஸ்! எதுல எப்படி கொண்டுவரப் போறாங்கன்னு தெரிஞ்சுதா?’’

“அது தெரியல சார்.’’

“எத்தனை மணிக்குக் கொண்டு வர்றாங்க?’’

“அவங்க பேச்சுல அதுவும் வரலை சார்.’’

“சூரியபிரகாஷ் சாருக்கு சொல்லிட்டிங் களா?’’

“அவரை ஒரு ஸ்பெஷல் நம்பர்லதான் தொடர்புகொள்ளணும்னு சொல்லியிருக்கார் சார். அந்த நம்பர் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப்லயே இருக்கு சார்.’’

“விட்டுவிட்டு டிரை பண்ணுங்க. நானும் டிரை பண்றேன். இப்ப நீங்க புறப்பட்டு என் குவாட்டர்ஸ் வந்துடுங்க. நானும் வர்றேன். அடுத்து என்ன செய்யலாம்னு பேசி முடிவு செய்யலாம்.’’

“சரிங்க சார்.’’

போன் காலை கட் செய்துவிட்டு சூரிய பிரகாஷ் தனக்குத் தந்த எண்ணைத் தொடர்பு கொண்டான் உதயகுமார்.

ஸ்விட்ச் ஆஃப் என்று ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் தகவல் வந்தது.

பைக்கில் அமர்ந்து கிளப்பி, திருப்பி புழுதிக்காற்றில் பறக்க விரைந்தான் உதயகுமார்.

மறைவிலிருந்து வெளிப்பட்ட பாண்டி உடனே தன் போனில் ஜெயபால் சாருக்குப் போட்டான்.

அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகச் சொல்லவே பாண்டியும் புதர்களின் ஓரத்தில் மறைவாக நிறுத்தியிருந்த தனது புல் லட்டை நோக்கி வேகமாக நடந்தான்.

தன் குவாட்டர்ஸுக்கு வந்ததும் மீண்டும் சூரியபிரகாஷைத் தொடர்பு கொள்ள முயன்றான் உதயகுமார். ஸ்விட்ச் ஆஃப் என்கிற அதே தகவலே வந்தது.

சற்றே யோசித்துவிட்டு அபர்ணா வுக்குப் போட்டான்.

“அபர்ணா... சூரியபிரகாஷ் சாரை அர்ஜென்டா கான்டாக்ட் செய்ய ணும். அவர் நம்பர் ஸ்விட்ச் ஆஃப்லயே இருக்கு. ரொம்ப முக்கியமான மேட்டர். அவர் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டிருந்த ஒரு பிரேக் த்ரூ!’’

“புரியுது. நானும் ஒரு தடவை டிரை பண்றேன். கிடைச்சிட்டா உடனே உன்னைக் கூப்புடச் சொல் றேன். கிடைக்கலைன்னா அவர் ஆபீஸுக்கே போயி பிடிச்சிடறேன்.’’

“ப்ளீஸ்...’’

அவன் வைத்ததும் அடித்தது. புது எண். எடுத்தான்.

“ஹலோ.’’

“மிஸ்டர் உதயகுமார் பேசறிங்களா?’’

“ஆமாம்.’’

“கலெக்டர் ஆபீஸ்லேர்ந்து மேடத்தோட பி.ஏ ரமணி பேசறேன் சார். மேடம் பேசணும்னு சொன் னாங்க. லைன்ல இருங்க.’’

சில விநாடிகளில்...

“மிஸ்டர் உதயகுமார்... குறிஞ்சிக்காடு ஊர் ஜனங்க மொத்தமா வந்து என்னை சந்திச்சாங்க. அவங்க ஊருக்கு ரோடு போடறதுக்கு பட்ஜெட்ல குறையற அம்பது லட்சத்துல இருபத்தஞ்சு லட்சம் அவங்க தர்றோம்னு சொன்னாங்க. மிச்சம் இருபத்தஞ்சு லட்சம் நீங்க தர்றதா சொன்னிங்களாம். அதனாலதான் நீங்க சொன்னபடி காடையனை தலைவரா மறுபடியும் தேர்ந்தெடுத்தாங்களாம். அப்படி சொன்னிங்களா என்ன?’’ என்றார் கலெக்டர் பானுமதி.

“ஆமாங்க மேடம். அதுகூட என் பணமில்லைங்க. என் குடும்பம் சார்பா அப்பா பதினஞ்சு லட்சமும், என் மாமனார் பத்து லட்சமும் தர்றாங்க. அந்தத் தொகை கைக்கு வந்ததும் செக்கோட வந்து உங்களைப் பார்த்து எல்லாம் சொல்லலாம்னு நினைச்சேன். அவசரப்பட்டு அவங்க முந்திக்கிட்டு சொல்லிட்டாங்க’’

“என்ன சார் இது... சின்ன விஷயமா? எவ்வளவு பெரிய தொகை! யாருக்கு மனசு வரும்? நானே கூப்புட்டு நன்றி சொல்லணும்னு நினைச்சேன். யூ ஆர் சிம்ப்ளி கிரேட் உதயகுமார்.’’

“ரொம்ப தேங்க்ஸ் மேடம். இங்க வேலைக்கு வந்த முதல் நாள்லேருந்தே அந்த ரோடு மேட்டர் எனக்கு உறுத்தலா இருந்திச்சு மேடம். ரோடு இல்லாததாலதான் அவங்க படிக்காம வெட்டுக் கூலிக்குப் போறாங்க. காட்ல வாழற மக்களை அலட்சியப்படுத்திட்டு காட்டை மட்டும் பாதுகாக்கறது சரியாப் படலை மேடம்.’’

“இந்த சமூக அக்கறையும், மக்கள் மேல காட்ட வேண்டிய நியாயமான பரிவும் எல்லா அதிகாரிங்க கிட்டயும் இருந்தா எப்படியோ இருக்கும் நம்ம நாடு.’’

வெந்து தணிந்தது காடு - 24 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“மேடம்... இப்ப நீங்க எங்க இருக்கிங்க?’’

“ஆபீஸ்லதான் இருக்கேன்.’’

“பென்சில் ஃபேக்டரி ஓனர் ஜெயபாலுக்கு எதிரான வசமான ஆதாரம் ஒண்ணு சிக்கி யிருக்கு மேடம். இப்ப அந்த ஆதாரத்தோட ஒரு டாஸ்க் ஃபோர்ஸ் ஆபீஸர் என் வீட்டுக்கு வருவாரு. அவரையும் அழைச்சிக்கிட்டு வந்து உங்களை மீட் செய்யலாமா மேடம்?’’

“வாங்க” என்றார் கலெக்டர் பானுமதி.

வரப்போகிற கெளசிக்குக்காகக் காத்திருந் தான் உதயகுமார்.

திருப்பதி.

அபர்ணா காரை அவசர மாக நிறுத்திவிட்டு வேக மாக அந்த டாஸ்க் ஃபோர்ஸ் அலுவலகத்துக்கு லிஃப்ட் டில் வந்தாள்.

சூரியபிரகாஷ் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாகச் சொல்லப் பட்டாள். தன் பெயரையும், உதயகுமார் பெயரையும் எழுதி ‘வெரி அர்ஜென்ட்’ என்று குறிப்பெழுதி மீட்டிங் அறைக்குள் கொடுத்தனுப் பினாள். அவருக்காகக் காத் திருந்தாள்.

கட்டட வேலை நடக் கும் இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் குடோனுக்குள் நின்று கொண்டிருந்தார் ஜெயபால்.

ஆங்காங்கே கசாமுசாவென்று இருந்த சிமென்ட் மூட்டைகளை ஒரே பக்கமாக தூக்கிப்போட்டு அடுக்கிக்கொண்டிருந்தார்கள் வேலையாட்கள்.

அருகில் நின்றிருந்த சூபர்வைசரும் என்ஜினீயரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“அய்யா...’’ என்றார் என்ஜினீயர் தயங்கி.

“என்ன?’’

“நாளைக்கு நூறு மூட்டை சிமென்ட் வருதுன்னு சொன்னிங்க. ஆனா... இப்போ உடனே நமக்கு அவ்வளவு மூட்டை தேவைப் படலைங்களேய்யா.’’

“எனக்குத் தெரியாதா? அடுத்த மாசம் மூட்டைக்கு அம்பது ரூபா விலை ஏறுதுய்யா. மேல் மட்டத்துலேர்ந்து எனக்குக் கிடைச்ச ரகசிய தகவல் இது. அதான் வாங்கி வெச்சிக்க லாம்னு ஆர்டர் செஞ்சிட்டேன்.’’

“அப்படின்னா சரிங்க.’’

ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் வெளியில் கேட்டது. இறங்கிய பாண்டி விசாரித்துக் கொண்டு ஓட்ட நடையில் அந்த குடோ னுக்கே வந்து ஜெயபால் அருகில் நின்று மூச்சு வாங் கினான்.

“என்னடா?''

“தனியா பேசணுங்கய்யா’’ - ஜெயபால் ஒரு பார்வை பார்த்ததும் மற்ற இருவரும் வெளியேறிவிட... மூச்சு வாங்கியபடி தான் பார்த் ததை, கேட்டதை அவன் அப்படியே சொல்லி முடித் ததும் ஜெயபாலைப் பதற் றம் தொற்றிக் கொண்டது.

“உதயகுமாரோட பேசின வன் பேரு என்னன்னு சொன்னே?’’

“கெளசிக்.’’

“புதுசா சேர்ந்த பய அவன். நம்பி ஏமாந் துட்டனோ...’’ அவசரமாக ஃபேக்டரி மேனேஜருக்கு போன் செய்தார். “யோவ்... அந்த கெளசிக் பய அங்க இருக்கானா?’’

“இப்பதான் வந்து உடம்பு சரியில்லை, டாக்டரைப் பார்க்கணும்னு பர்மிஷன் கேட்டுட்டுப் புறப்பட்டான் சார்.’’

“லைன்லயே இருக்கேன். போய்ட்டானா பாரு.’’

“இப்பதான் ஃபேக்டரி வாசல்கிட்ட போயிட்டிருக்கான் சார்.’’

“அவன் போகக் கூடாது. பிடிச்சி வை. உடனே வர்றேன்’’ என்றார் ஜெயபால்.

- தொடரும்...