தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!

புத்தகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தகங்கள்

ஆங்கிலக் கவிதைகள் எழுதுற ஆர்வத்துல 40 கவிதைகள் எழுதி முடிச்சப்போ, புத்தகமா வெளியிடலாம்னு தோணுச்சு. இணைய வழியில் நடந்த ஒரு உலகளவிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றேன்.

சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவின் ஹைலைட், கல்லூரி மாணவிகள் ஏழு பேரின் நூல்கள் வெளியீடு. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே நாவல், கதை, கவிதை என எழுத்தில் ஆர்வம்கொண்டது மட்டுமல்லாமல், அவற்றை நூலாகவும் வெளியிட்டு இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் இந்த இளம் எழுத்தாளர்கள். அவர்களிடம் பேசினோம்...

படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!
படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!

சொ.நே.அறிவுமதி - முனைவர் பட்ட ஆய்வாளர், லேடி டோக் கல்லூரி | புத்தகம்: ஆழினி

``சின்ன வயசுல அம்மா, அப்பாகிட்ட கதை கேட்டு தொல்லை பண்ணுற பழக்கம், வளரும்போது வாசிப்பா மாறிச்சு. எழுதவும் முயற்சி பண்ணி பார்த்திருக்கேன். கொரோனா காலத்தில் எல்லாரும் ஒருவித பயத்திலேயே இருக்க, அந்த சூழலை மாத்த ஒரு நகைச்சுவை நாவல் எழுதலாம்னு தோணுச்சு. ‘குழம்பு வைக்க வாங்கிட்டு வந்த மீன் ஒரு கடல் கன்னியாய் மாறினா..? வலையில் சிக்கி தன்னைப் பிரிந்த தன் காத லனை, நிலத்தில் தேடி சேர்த்து வைக்கச் சொல்லி, சங்கத் தமிழ்ல சண்டையிட்டால்..? அதை 2கே கிட்ஸ் நண்பர்கள் இருவர் சமாளிக்க முடியாமல் திணறினால்..?’ - என்னோட இந்த வித்தியாச மான கற்பனைக்கு, நகைச்சுவை கலந்த பதிலாய் அமைந்ததுதான் `ஆழினி’ நாவல். அந்த கடற்கன்னிதான் ஆழினி. இந்த நூலுக்கு முனைவர் கு.ஞானசம்பந்தம் அணிந்துரை எழுதினது கூடுதல் சிறப்பு.”

படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!
படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!

மீ.அனு, முதுகலை தமிழ், லேடி டோக் கல்லூரி | புத்தகம்: ஒளிர்வி

``என்னோட ‘ஒளிர்வி’ புத்தகம், சிறுகதைத் தொகுப்பு. இதுல எல்லாமே புனைவுதான், ஒரு கதை மட்டும் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வெண் மணி கிராமத்துல விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் உயிரோட எரிச்சுக் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையா வெச்சு எழுதினது. பொதுவா, நான் படிக்கிற பல சிறுகதைகள்ல முடிவு நமக்குப் பிடிச்ச மாதிரி இல்லையேனு தோணும். என் சிறுகதைகள்ல நான் நினைச்ச முடிவை எழுதும்போது சந்தோஷமா இருக்கும். அந்த வகையில, கீழ்வெண்மணி கதையில, உண்மையில் தண்டனை கிடைக்காத குற்றவாளிகளுக்கு நான் தண்டனை கிடைச்ச மாதிரி எழுதினதுல ஒரு திருப்தி. வாழ்க்கையில நல்லா ‘ஷைன்’ செய்யணும்னு சொல்வாங்க இல்ல... அதுக்கான தமிழ் வார்த்தைதான் ‘ஒளிர்வி’. எந்த விமர்சனங்களுக்கும் பயப்படாத, தான் நினைத்ததை உடைத்துச்சொன்ன ஜெயகாந்தன் மாதிரி எழுதணும்!”

படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!
படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!

ச.பொ.தாமரைச்செல்வி, முதுகலை ஆங்கிலம், லேடிடோக் கல்லூரி | புத்தகம்: The Universe Inside Her

``ஆங்கிலக் கவிதைகள் எழுதுற ஆர்வத்துல 40 கவிதைகள் எழுதி முடிச்சப்போ, புத்தகமா வெளியிடலாம்னு தோணுச்சு. இணைய வழியில் நடந்த ஒரு உலகளவிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றேன். அதன் மூலமா, அமெரிக்காவில் இருக்குற ஒரு பப்ளி கேஷன் உதவியோடு என் கவிதைகளை அச்சுக்கு மாற்றினோம். வாசிப்பில்லாமல் எழுத முடியாதுனு நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். நாலு வரி எழுதினாலும் என் பேராசிரியர்கள்கிட்ட காட்டிடுவேன். அவங்க கொடுக்குற ஊக்கம் அடுத்த கவிதையை எழுத உந்தும். அப்பா, அம்மா இருவரும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள். அதனால தமிழ்லயும் நல்லா எழுதுவேன்!”

படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!
படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!

ஆர்.எஸ்.ஷ்வேதா, முதுகலை ஆங்கிலம், லேடி டோக் கல்லூரி | புத்தகம்: Between And Beyond

‘`வாசிப்பு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அனுபவத்தை, பார்வையை தரக்கூடியது. 21 ஆங்கிலக் கவிதைகள் அடங்கிய என் தொகுப்பும் அப்படித்தான். என் கவிதை வரிகளுக்கான அர்த்தத்தை, நேரடி எழுத்துக்கு அப்பாற்பட்டு வேற கோணத்திலும் வாசகர்களால் அணுக முடியும். அது அவரவர் ரசனை, சிந்தனையைப் பொறுத்து அமையும். அதனாலதான் புத்தகத்துக்கு `Between And Beyond'னு தலைப்பு வெச்சேன். கொரோனா காலத்தில் ’21 நாள்கள் 21 கவிதைகள்’னு இணையத்தில் நடந்த ஒரு போட்டியில் எழுத ஆரம்பிச்சு, அதை இப்போ தொகுப்பா மாத்தியிருக்கோம். புக் லீஃப் பப்ளிகேஷனுக்கு நன்றி. நான் என்ன எழுதினாலும் என்னுடைய முதல் வாசகர் அம்மா, அதை மெருகேற்றும் முதல் விமர்சகர் அப்பா!”

படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!
படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!

ந.நிஷாலினி, இளங்கலை கணிதம், மதுரை மீனாட்சி கல்லூரி | புத்தகம்: மறுவானம் உண்டு! மணாளனே!

``பொதுத்தேர்வு நாள்களில் கூட கதை புக் படிக்கிற அளவுக்கு வாசிப்பில் ரொம்ப ஆர்வம். கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கினப்போ ஆப் (App) மூலமா நிறைய கதைகள் படிக்க ஆரம்பிச்சு, பிறகு எழுத ஆரம்பிச்சேன். அது ஒரு நாவலா உருப் பெறும், இப்படி புத்தகமா வெளிவரும்னு எல்லாம் அப்போ நினைச்சுக்கூடப் பார்க்கல. இணையத்தில் ஒவ்வொரு அத்தியாயமா எழுதி பதிவிட்டேன். பலரும் என்கிட்ட காப்பிரைட் பத்தி சொல்ல, என் நாவலுக்கும் காப்பிரைட் வாங்கணும்னு தோண, நோஷன்பிரஸ்.காம் காப்பிரைட் வாங்கி, புத்தகத்தையும் அச்சிட்டுக் கொடுத்தாங்க. நான் படிக்கிற கணிதத் துறையில் இலக்கியத்துக்கு வேலையே இல்ல. ஆனாலும் என் திறமையைக் கண்டுபிடித்து ஊக்கமளித்த எங்க சாவித்திரி மேடத்துக்கு ரொம்ப நன்றி!”

படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!
படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!

மு.தீபிகா, இளங்கலை ஆங்கிலம், மதுரை மீனாட்சி கல்லூரி | புத்தகம்: Debris Of Stardust

`` ‘நட்சத்திரத் துகளின் மிச்சம்’ - இதுதான் என் புத்தகத்தின் தமிழாக்கப் பெயர். ‘உயிர்களிடத்தில் அன்பு செய்’ - இதுதான் புத்தகத்தில் நான் பேசுற நெருக்கமான பொருள். 12 வயசுல இருந்தே ஆர்வத்தில் எதையாவது எழுதிவந்தாலும், அதை முறைப்படுத்தியது எங்க சாவித்ரி மேமும், கல்லூரியும்தான். கவிதைகள், சிறுகதைகள்னு இணையத்தில் எழுத ஆரம்பிச்சேன். இப்ப வெளியிட்டிருக்கிறது

21 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. ‘ஒரு மனுஷன் ஏதோ ஒன்றை புதிதாகச் செய்யும்போது இந்த மொத்த உலகமும் கூடி நின்று அவனை ஊக்கப்படுத்த வேண்டும்’னு நான் படிச்ச வரி ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. அப்படித்தான் நடந்து முடிஞ்சிருக்கு எங்க ஏழு பேரோட புத்தகங்கள் வெளியீட்டு விழா!”

படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!
படிக்கும்போதே புத்தகங்கள் வெளியீடு... இலக்கிய உலகில் இளம் மாணவிகள்!

சா.சோபனா, இளங்கலை ஆங்கிலம் மதுரை மீனாட்சி கல்லூரி | புத்தகம்: Out of Exulansis

‘`சிதறிக் கிடந்த என் சிந்தனை துண்டுகளின் சேமிப்பதுதான் இந்தப் புத்தகம். அமைதியைப் புரிஞ்சுக்கிறது, அதை ஏத்துக்கிறது, ஏற்று அதற்கு பதிலளிப்பது, கோபத்தைக் கையாள்வதுனு... இதைப் பற்றிய ஆங்கிலக் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது. அமைதியாக இருந்தாலும் கூட ஒரு முழு உரையாடலையும் நிகழ்த்திவிட முடியும்ங்கிறது என் நம்பிக்கை அனுபவமும்கூட. புத்தகத் திருவிழாவில் எங்களுக்குக் கிடைச்ச மேடை, வெளியுலகத்துல எங்கள சிறப்பா அறிமுகப்படுத்தியிருக்கு. இன்னும் சில வருடங்களில் நாங்க ஏழு பேரும் நல்ல எழுத்தாளர்களா உருவாகணும்.”