Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

பார்த்துக்கொள்ளலாம்' என பதிலளிக்கும்படியான ஒரு வாழ்க்கை... அதுவும் கிடைக்காதபோது

சொல்வனம்

பார்த்துக்கொள்ளலாம்' என பதிலளிக்கும்படியான ஒரு வாழ்க்கை... அதுவும் கிடைக்காதபோது

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

பிரார்த்தனை

இறைவா...

பெரிய பணக்காரனாக

வேண்டுமென்ற ஆசை துளியுமில்லை

கார் வேண்டாம் பைக் வேண்டாம்

அவசரத்திற்கு சைக்கிள் இருக்கிறது

அவ்வப்போது அதுவும் தேவையில்லை

கால்கள் இருக்கிறது நடக்கத் தெம்பும் இருக்கிறது

பொங்கிச் சாப்பிட

பொன்னி வேண்டாம்

ரேசன் அரிசி இருக்கிறது

நான் கேட்பதெல்லாம்

`உங்களைத்தான்

கடைசி நம்பிக்கையாகத்

தேடி வந்துள்ளேன்' என்று சொல்பவர்களுக்கு

`நான் இருக்கிறேன்

பார்த்துக்கொள்ளலாம்' என பதிலளிக்கும்படியான ஒரு வாழ்க்கை...

அதுவும் கிடைக்காதபோது

தேடி வந்தவர்களின்

கரங்களைப் பற்றி அணைக்காமல்

கையை விரிக்கும்போது

வெறும் கல்தான்

என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை..!

- யுவராஜ் மாரிமுத்து

******

அலெக்ஸா

எஸ்.பி.பி குரல் கேட்டால்

நொடியில் தேடித் தந்தது

தட்பவெட்பம் கேட்டதும்

தப்பில்லாமல் சொன்னது

ஜிடிபி பணவீக்கம்

புள்ளிவிவரங்களும் கூறியது

இடைவிடாத சம்பாஷணைகள்

அலுப்புத்தட்டிய போது

நேரமாச்சு சாப்பிட்டு தூங்கு

என்று சொல்லத்தான் முடியவில்லை

அம்மாபோல அலெக்ஸாவால்.

- எம் விக்னேஷ்

சொல்வனம்

செல்வாரல்லர்

தற்செயலாகவே

பலமுறை பார்த்துக்கொண்டோம்

அந்தப் பள்ளிக்கூட வாசலில்

குழந்தையை அழைத்துச் செல்லக் காத்திருக்கையில்


அவள் அவளது குழந்தைக்காக

நான் எனது குழந்தைக்காக


திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள்

பார்வைகளின் சந்திப்பு

புன்னகையாக மாறிவிடக்கூடாதென்கிற

பக்குவத்தில்


இறுக்கத்தைத் தளர்த்த முடியாத மரம்

காற்றை உசுப்பி சிலிர்த்துக்கொண்டது

உதிர்ந்துகொண்டிருக்கும்

சருகுகளும் நினைவுகளும்


மௌனத்தின் முகமூடியை

மெல்ல மெல்லப் பிய்த்துக்கொண்டிருக்கிறது

எந்நேரமும்

ஒரு துரோகம் நிகழ்த்தப்பட்டுவிடலாம்


காத்திருப்பு

ஒரே குழந்தைக்காக என

இருந்திருக்க வேண்டியது


இக்கணத்தின் கனம்

அக்கணத்தில் காதலாயிருந்தது


எந்நேரமும் வந்துவிடலாம்

கண்ணீர்த்துளிகளோ

பள்ளியிலிருந்து குழந்தைகளோ

வேண்டுமேன்றே

பிரிந்து சென்றோம் மறுமுறை பார்க்காமல்.

- ரசிகவ் ஞானியார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism