Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சன்னலின் தனிமை! இடிக்கப்பட்ட வீட்டின் மிச்சமாக நின்றிருக்கிறது ஒற்றைச் சன்னல் தாங்கிய சுவர்

சொல்வனம்

சன்னலின் தனிமை! இடிக்கப்பட்ட வீட்டின் மிச்சமாக நின்றிருக்கிறது ஒற்றைச் சன்னல் தாங்கிய சுவர்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

பூங்கா புகார்கள்

வேர்க்கடலைக்கும் சுண்டலுக்கும்

காசில்லை கையில்

விற்க வருபவனிடம்

பேச்சுக் கொடுத்தால்

மூக்கு முட்ட நிறைந்துபோகும் வாசனை

சிறுவன் தின்று வீசிய

ஐஸ்க்ரீம் கோப்பைக்குள்

கொன்றை மலரொன்று

குத்த வைத்திருக்கிறது

மறதியில் விட்டுச்சென்ற

யாரோ ஒருவருடைய

வாசனையோடு

கைக்குட்டை ஒன்று கல்மேசையில்

அடர்புற்களை

உருவமாற்று செய்கின்றான்

வீச்சுக்கத்தி கொண்டு

யானை ஒட்டகம்

மயிலென்றாகின்றன அவை

பனித்துளிக் கிரீடம்

நாளையில்லையென்ற

வருத்தத்தில்

நுனிகள் சிதறிக் கதறுகின்றன

மண்மீது

ஒழுங்கு சரியில்லையெனும்

காரணத்திற்காக

உடனுக்குடன் வெட்டப்படுவதில்லை

எந்தவொரு மனிதனின்

தலையையும்

அவசரமாக

மனிதர்களைப் பூங்காவிலிருந்து

விரட்டிவிட்டது

அடிதடியாகப் பொழிந்த மழை.

- கனகா பாலன்

****

சன்னலின் தனிமை!

இடிக்கப்பட்ட வீட்டின் மிச்சமாக

நின்றிருக்கிறது

ஒற்றைச் சன்னல் தாங்கிய சுவர்

உள்ளும் புறமும் எனத்

தத்துவங்களைத் திறந்தும் மூடியும்

உலகை உணர்த்திக்கொண்டிருந்த

அந்தச் சாளரத்தின்

இருபுறமும்

விரிந்து கிடக்கிறது வெட்டவெளி

ரகசியமில்லாப் பெருவெளியில்

தனக்கான பணி எதுவென்று புரியாத

திகைப்பில் அவ்வப்போது

படபடவென அடித்துக்கொள்கிறது

அதன் மனக்கதவு.

- கி.சரஸ்வதி

****

சொல்வனம்

ஆற்றுப்படுத்துதல்!

அடைமழையாய் அழுதபடியிருக்கும்

குழந்தையை

ஆற்றுப்படுத்தும் பொருட்டு

வானவில் வண்ணங்களில்

பலூன் விற்பவரை

நெருங்கினேன்

நிரல்களாய்

தொங்கிக்கொண்டிருக்கும்

பலூன்களில் ஒன்றிரண்டு

அளவுகளில் சிறியதாய்த் தெரிந்தன

அவை பசியோடு ஊதப்பட்டிருக்கலாமென

ஊகித்து

விற்பவரை ஆற்றுப்படுத்துவதாய்

மொத்தத்தையும் வாங்கித் திரும்புகிறேன்

அவர் கண்களில் தெரியும் வானவில்லை ரசித்தவாறு.

- சாமி கிரிஷ்