Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கிண்ணத்தில் பால் சோற்றோடும் இடுப்பில் குழந்தையோடும் மாலை ஏழு மணிக்கு வாசலுக்கு வந்துவிடுவாள் லக்ஷ்மியம்மா

சொல்வனம்

கிண்ணத்தில் பால் சோற்றோடும் இடுப்பில் குழந்தையோடும் மாலை ஏழு மணிக்கு வாசலுக்கு வந்துவிடுவாள் லக்ஷ்மியம்மா

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

தைத்தல்

பெரும் திரையென

விரிந்து கிடக்கிறது

மழை

குடையை விரித்து

மழைத் திரை கிழித்த

வலி தீர

கைகளை விரித்து வானம்

பார்க்கிறேன்

இடப்பக்க மழையையும்

வலப்பக்க மழையையும்

தைத்து நடக்கிறது

உடல் ஊசி.

- கி.சரஸ்வதி

சொல்வனம்

உலகத்தை வரைந்தவள்!

முதலில்

ஒரு மலையை வரைந்த

மதிக் குட்டி

அதற்கு மேலே

ஒரு சிறிய வட்டம் வரைந்து

அதைச் சுற்றிலும்

சிறு சிறு கோடுகளை

வரைந்து

சூரியன் என்கிறாள்

அதன் அருகிலேயே

சிறிய வட்டம் வரைந்து

நிலா என்கிறாள்

அதற்கும் சற்று மேலே

சில நட்சத்திரங்களை

வரைகிறாள்

அதன் அருகிலேயே

மழை பொழியும்

ஒரு மேகத்தையும்

வரைகிறாள்

தீவிரமாக யோசித்தவள்

பறந்து செல்லும்

பறவைகளையும்

வரைகிறாள்

கீழேயிருக்கும் இதெல்லாம்

தரை

என்றவள்

அதில் மீன்கள் ஓடும் ஒரு நதியை

வரைகிறாள்

மற்றும்

ஒரு மரத்தையும்

சுற்றிலும் புற்களையும்

வரைந்தவள்

அதை

சோற்றுப்பசை தடவி

பீரோவில்

ஒட்டி வைக்கிறாள்

அவளின்

அந்த உலகத்தில்தான்

வசிக்கத் தொடங்கியது

எங்கள் வீடு.

- வேல்முருகன்

சொல்வனம்

மேகங்களுக்குக் கூண்டு செய்பவள்

கிண்ணத்தில் பால் சோற்றோடும்

இடுப்பில் குழந்தையோடும்

மாலை ஏழு மணிக்கு

வாசலுக்கு வந்துவிடுவாள் லக்ஷ்மியம்மா

டோரிமேன் ஷின்ஷாங்

டோராபுஜ்ஜி டாம் அண்டு ஜெர்ரி என

ஆண்ட்ராய்டு இல்லாத

அந்தக் காலத்தில்

அம்புலியைக் காட்டியே

சாதம் ஊட்ட ஆரம்பிப்பாள்

மின்னும் நட்சத்திரங்களுக்கு நடுவே

அழகாய்ச் சிரிக்கும் நிலவுக்குக்

கொடுத்துவிடுவதாக ஏமாற்றி

‘ஆ’ காட்டெனச் சொல்லி

உண்ண வைப்பாள்

பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி

கிண்ணத்தில் உள்ள

மொத்தச் சாதத்தையும் குழந்தையின்

வயிற்றுக்குள் நிரப்பும் அந்த

ஒரு மணி நேரம் முழுமைக்கும்

அத்தனை மேகங்களையும்

எந்தக் கூண்டில் அடைத்து

வைப்பாள் என்று தெரியாது.

- காமராஜ்